சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"அவங்களை பத்தி பேசாதீங்க.. அப்டியே விட்ருங்க".. தைலாபுரத்திலிருந்து பறந்த உத்தரவு..!

தேமுதிக மீதான விமர்சனத்தை பாமக தவிர்த்து வருகிறதாம்

Google Oneindia Tamil News

சென்னை: நாளுக்கு நாள் அரசியல் பரபரப்பு கூடி வரும் நிலையில், பாமக குறித்த ஒரு செய்தியும் கசிந்து வருகிறது... இதனால், தேர்தல் களம் இன்னும் சூடாகி தகித்து வருகிறது.

ஸ்டார் தொகுதிகள் வழக்கம்போல இந்த முறையும் கவனத்தை பெற்று வருகின்றன.. அந்த வகையில் விருத்தாச்சலமும் ஒன்று.. விஜயகாந்த் முதன்முதலாக விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றதால், மறுபடியும் தங்களுக்கே வெற்றி என்ற நம்பிக்கையில் பிரேமலதா களமிறங்கி உள்ளார்..

இங்கு தேமுதிகவுக்கு ஓரளவு செல்வாக்கு இருக்கிறது என்பதை மறுக்க முடியாது.. ஆனால், அன்று விஜயகாந்த்துக்கு இருந்த அளவுக்கு இல்லை என்பதும் உண்மை..

 விருத்தாச்சலம்

விருத்தாச்சலம்

அதேசமயம், விருத்தாச்சலத்தை பிரேமலதா வெல்ல முடியாது, வேண்டுமானால் திமுக, அதிமுகவுக்கு டஃப் தரலாம் என்றும் அரசியல் நோக்கர்கள் வியூகங்களை சொல்லி வருகிறார்கள். மற்றொரு பக்கம், அதிமுக கூட்டணியில் பாமக வருவதால், அந்த தொகுதியில் எளிதில் வெற்றிபெறலாம் என்றும் அக்கட்சியினர் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.

 பிரேமலதா

பிரேமலதா

தற்போது விருத்தாச்சலத்திலேயே பிரேமலதா முகாமிட்டுள்ளார்.. அங்கேயே தங்கி கள வேலைகளையும் கவனித்து வருகிறார்.. அவரை எதிர்த்து நிற்கும் பாமக வேட்பாளர் ஜி.கார்த்திக்கேயன் போட்டியிடுகிறார்.. இவரை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசும் ஏற்கனவே வாக்கு சேகரித்து சென்றனர்.

 விமர்சனம்

விமர்சனம்


இவர்கள் 2 பேருமே திமுகவை மட்டுமே குறி வைத்து பேசிவிட்டு சென்றார்களே தவிர, டிடிவி பற்றியோ, பிரேமலதா பற்றியோ வாய் திறக்கவே இல்லை.. இதற்கு என்ன காரணம் என்று உடனடியாக தெரியவில்லை... ஓபிஎஸ் சசிகலா பற்றி பேட்டி தந்ததில் இருந்தே, அதிமுக தலைமையானது, சசிகலாவை பற்றியும், தினகரன் பற்றியும் விமர்சிக்காமல் இருக்கிறார்கள்.. அந்த வகையில், தினகரனை முதல்வர் விமர்சிக்காமல் சென்றிருக்கலாம்.

தினகரன்

தினகரன்


ஆனால், பாமக தரப்பில் ஏன் பிரேமலதாவை விமர்சிக்கவில்லை? என்ற சந்தேகம்தான் பரவலாக எழுந்தது.. இரு கட்சிகளுமே ஆரம்பத்தில் இருந்து எலியும்- பூனையுமாக இருப்பவர்கள் என்பது தமிழகம் அறிந்த ஒன்று.. ஒவ்வொரு முறை கூட்டணி விஷயம் ஆரம்பமாகும்போதும், பாமகவுடன் போட்டி போட்டுக் கொண்டு தேமுதிக சீட் கேட்கும் என்பதும் தமிழகம் அறிந்த உண்மைதான்.

விஜயகாந்த்

விஜயகாந்த்

அப்படி இருக்கும்போது, ஏன் பாமக தரப்பில் தேமுதிகவை விமர்சிக்கவில்லை? என்ற சந்தேகம் நிலவி வரும் நிலையில், அதற்கு அனுமான விடையும் களத்தில் கிடைத்து வருகிறது.. பிரேமலதாவை விமர்சனம் செய்து அவருக்கு தேவையில்லாமல் அனுதாப அலையை ஏற்படுத்தி விட வேண்டாம் என்று பாமக தலைமை, நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி உள்ளதாம்.. ஏனென்றால், கடந்த 2006-ல் விஜயகாந்த்தை பாமக உரச போய், அதன் விளைவுகளை நாடே கண்டது..

 கிரேஸ்

கிரேஸ்

விஜயகாந்த்துக்கு எதிராக பாமக விமர்சனங்களை லிஸ்ட் போட்டு முன்வைக்க, அத்தனையும், விஜயகாந்த்துக்கே சாதகமாகி போனதாம்.. இதைதான் பாமக தற்போது நன்கு உணர்ந்துள்ளதாக தெரிகிறது.. தேமுதிக கட்சியில் யாரையும் விமர்சிக்காமல், எந்த எதிர்ப்பு கருத்தையும் பதிவு செய்யாமல் வாக்கு சேகரிக்க வேண்டும் என்று உத்தரவு போடப்பட்டுள்ளதாம். இதனால், தேமுதிகவுக்கென்று கிரேஸ் அல்லது மாஸ் உருவாகிவிடக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளதாம்..!

English summary
Why did Dr Ramadoss avoid talking about DMDK Premalatha
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X