இவுங்களை நம்பிட்டு இருக்காதீங்க.. சீனியர் சொன்ன முக்கிய அட்வைஸ்.. டெல்லி போன துரைமுருகன்!
சென்னை: திமுக பொதுச் செயலாளரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் தனது வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டுக்கு பின் சமீபத்தில் டெல்லி சென்றார். அவரின் இந்த டெல்லி பயணத்திற்கு பின் முக்கியமான சில காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
திமுக பொதுச் செயலாளரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் வீடு வேலூர் அருகே காட்பாடி காந்திநகரில் உள்ளது. இந்த வீட்டில் அவரது மகனும் வேலூர் மக்களவைத் தொகுதி எம்.பி.யுமான கதிர் ஆனந்த் குடும்பத்துடன் வசித்து வருகிறார்

இரண்டு நாட்களுக்கு முன் அமைச்சர் துரைமுருகன் மற்றும் எம்.பி கதிர் ஆனந்த் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது. வேலூர் காட்பாடியில் உள்ள அமைச்சர் துரைமுருகனின் வீடு உட்பட 4 இடங்களில் நேற்று அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். மிகுந்த பாதுகாப்பிற்கு இடையே இந்த சோதனை நடைபெற்றது. திமுகவின் பொதுச்செயலாளர், நம்பர் 2 வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டு தமிழ்நாட்டையே திரும்பி பார்க்க வைத்தது.
அவர் வீடு மட்டுமன்றி துரைமுருகனுக்கு நெருக்கமான திமுக பிரமுகரான பூஞ்சோலை சீனிவாசன், அவரது உறவினர் தாமோதரன் ஆகியோர் வீடுகளிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். ஒரே நேரத்தில் அதிகாரிகள் களமிறங்கி சோதனைகளை மேற்கொண்டனர்.
துரைமுருகன் ரெய்டு ஆவணங்கள்:
துரைமுருகன் மற்றும் அவரது மகன் கதிரானந்த் தொடர்புடைய வீடுகள், அலுவலகங்கள், கல்லூரி ஆகியவற்றில் நடத்திய ரெய்டில், நிறைய ஆவணங்களை அள்ளிச்சென்றது அமலாக்கத்துறை. ரெய்டினை கேள்விப் பட்டதும், காட்பாடிக்கு செல்லப் புறப்பட்டிருக்கிறார் துரை.
இதனை முதல்வர் ஸ்டாலினிடம் சொல்லி விட்டு செல்லலாம் என நினைத்து கோட்டைக்குச் சென்றார். ஸ்டாலினை சந்தித்து, காட்பாடி வரை போய்ட்டு வர்றேன் என சொல்ல, வேண்டாம் அண்ணே... என்ன பெரிசா அவங்களுக்கு கிடைச்சிடப் போகுது? உடம்பை போட்டு அலட்டிக்காதீங்க. விடுங்க பார்த்துக்கலாம் என அட்வைஸ் பண்ணியிருக்கிறார் ஸ்டாலின்.
டெல்லி பயணம்:
அதேசமயம், டெல்லிக்கு போய்ட்டு வர்றேன் என்று துரை சொல்ல, போய்ட்டு வாங்க என அனுமதித்திருக்கிறார் ஸ்டாலின். ஜெகத்ரட்சகனுடன் டெல்லிக்கு சென்ற துரைமுருகன், மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரஹோத்தகி உள்ளிட்ட சிலரை சந்தித்து ஆலோசித்து விட்டு திரும்பியிருக்கிறார். இவரின் டெல்லி பயணத்தில் ஒரு பின்னணி இருக்கிறது.
அதாவது, ரெய்டு நடப்பதைக் கேள்விப்பட்டதும் துரைமுருகனிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, அமலாக்கத்துறை வழக்குங்கிறது காலை சுத்திய பாம்பு மாதிரி. எப்போது வேண்டுமானாலும் கொத்தும். அதனால் அதிலிருந்து தப்பிக்க, கட்சி வழக்கறிஞர்களையோ அட்வைஸ்களையோ நம்பாதீங்க. உங்களுக்கு சோர்ஸ் இருந்தா நீங்களே தனிப்பட்ட முறையில் முயற்சி எடுங்க. நல்லது நடக்கும் '' என்று பொன்முடி யோசனை சொன்னாராம்.
டெல்லி பயணம் துரைமுருகன்:
அதில் இருக்கும் உள்ளார்ந்த அர்த்தத்தைப் புரிந்து கொண்ட துரை, காட்பாடி செல்வது கட்டானதும் டெல்லிக்கு ப்ளைட் ஏறினார். டெல்லியில் வழக்கறிஞர்களுடன் ஆலோசித்த துரைமுருகனிடம், அமலாக்கத் துறை சம்மன் அனுப்பினால் கதிர் ஆனந்தை ஆஜராகச் சொல்லுங்கள். சம்மனை புறக்கணிக்கும் வகையில் ஆஜராகாமல் இருந்தால் தான் பிரச்சனை. அதனால் ஆஜராகச் சொல்லுங்கள். மற்றதை பார்த்துக் கொள்ளலாம் என சொல்லியிருக்கிறார்கள். இது தவிர, ஜெகத்ரட்சகன் ஏற்பாட்டில் பாஜக மேலிடத்துடன் தொடர்புடைய சிலரையும் சந்தித்துள்ளனர். சட்டமன்ற கூட்டம் முடிந்ததும் மீண்டும் டெல்லிக்கு செல்லவிருக்கிறார் துரைமுருகன்.












Click it and Unblock the Notifications