தந்த பணத்தை திருப்பி தந்துவிட்டு! கட்சியிலிருந்து நீக்க சொல்லுங்க! எடப்பாடிக்கு லீமா ரோஸ் செக்
சென்னை: அதிமுகவில் எதிர்ப்பாளர்களின் கட்சி பதவிகளை நீக்கி வரும் எடப்பாடி பழனிச்சாமி, எதிர்ப்பாளர்களுக்கு ஆதார சுருதியாக இருக்கும் லீமா ரோஸின் கட்சி பதவியை ஏன் பறிக்கவில்லை? அதிமுகவின் மகளிர் அணியின் மாநில துணைச் செயலாளராக இருக்கிறார் லீமா. இவருடைய கட்சி பதவியை எடப்பாடி பழனிச்சாமி இன்னும் ஏன் பறிக்கவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.
எடப்பாடி பழனிச்சாமியை பற்றி லீமோ ரோஸ் கொடுத்த அட்டாக், எடப்பாடிக்கு எதிரான அதிர்ப்தியாளர்களிடம் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. தவெக அரசுக்கு ஆதரவு தரும் விவகாரத்தில் எடப்பாடிக்கும், அதிமுக சீனியர்களுக்கும் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளால் அதிமுக உடையும் சூழல்களுக்கு தள்ளப்பட்டுள்ளது என்பது தெரிந்த விசயம் தான்.

அதே சமயம், தனது தலைமைக்கும் தனது முடிவுக்கும் எதிராக போர்க்கொடி உயர்த்தி வரும் சீனியர்கள் உள்பட 25 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அவர்களின் ஆதரவு மா.செ.க்கள் என பலரையும் கட்சிப் பதவியில் இருந்து நீக்கி வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி. நீக்கியதோடு மட்டுமல்லாமல், அந்த பதவிகளில் தனது ஆதரவாளர்களை நியமித்தும் வருகிறார்.
அதிபர் மார்ட்டினின் மனைவி லீமோ ரோஸ்
இந்த நிலையில், போர்க் கொடி உயர்த்தும் கிளர்ச்சியாளர்கள் அணியில் லாட்டர் அதிபர் மார்ட்டினின் மனைவி லீமோ ரோஸ் இருக்கிறார். எடப்பாடிக்கு எதிராக திரண்டுள்ள அணி யினருக்கு வைட்டமின் ப விவகாரத்தில் மிக ஆதரவாக இருப்பதும் லீமா ரோஸ் தான். மேலும், தவெக ஆட்சியில் அமைச்சராக வேண்டும் என்கிற திட்டத்தில் தான் எஸ்.பி.வேலுமணி தரப்பினருக்கு ஆதார சுருதியாக இருந்து வருகிறார். அதிமுகவின் பொதுக்குழு உறுப்பினர்களை எடப்பாடிக்கு எதிராக தங்கள் பக்கம் இழுப்பதற்கு லீமாவின் பண விளையாட்டுகளும் முக்கியமாக இருக்கிறது.
லீமா ரோஸின் கட்சி பதவியை ஏன் பறிக்கவில்லை?
இப்படிப்பட்ட சூழலில், எதிர்ப்பாளர்களின் கட்சி பதவிகளை நீக்கி வரும் எடப்பாடி பழனிச்சாமி, எதிர்ப்பாளர்களுக்கு ஆதார சுருதியாக இருக்கும் லீமா ரோஸின் கட்சி பதவியை ஏன் பறிக்கவில்லை? அதிமுகவின் மகளிர் அணியின் மாநில துணைச் செயலாளராக இருக்கிறார் லீமா. இவருடைய கட்சி பதவியை இன்னும் பறிக்கவில்லை எடப்பாடி பழனிச்சாமி.
நேற்று வேலுமணி, சண்முகம் தலைமையிலான முக்கிய நிர்வாகிகள் சண்முகம் வீட்டில் கூடி, அடுத்தக்கட்டமாக என்ன செய்யலாம் என ஆலோசித்தனர். இதில் லீமா ரோசும் கலந்துகொண்டார். அப்போது, எல்லோரின் கட்சி பதவிகளையும் பறித்து வருவதை பற்றி விவாதிக்கப்பட்ட போது, லீமா மட்டும் பதவி பறிப்பில் இருந்து தப்பித்துக்கொண்டார் என்று எஸ்.பி வேலுமணி நகைச்சுவையாக கமெண்ட் செய்ய, ''அண்ணே... எனது கட்சி பதவியை அவர் பறிக்கட்டும். எனக்குப் பிரச்சனை இல்லை. ஆனா, கட்சியில் என்னை சேர்ப்பதற்காக என்னிடம் அவர் நடத்திய பேரத்தையும், பார்ட்டி ஃபண்ட் என்ற வகையில் என்னிடமிருந்து பெறப்பட்ட தொகை யையும், கட்சி பதவி கொடுப்பதற்காக வாங்கிய தொகையையும் எடப்பாடிக் கு எதிராக அம்பலப்படுத்திட்டால் போச்சு.
கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுத்துட்டு எனது கட்சி பதவி மட்டுமல்ல, கட்சியிலிருந்தே கூட அவர் நீக்கிக் கொள்ளட்டும் என பேட்டி கொடுத்தால் அவர் முகத்தை எங்கே வைத்துக்கொள்வார்? '' என்று கிண்டலாக கமெண்ட் பாஸ் பண்ணியிருக் கிறார் லீமா ரோஸ் என்கிறார்கள் எதிர்ப்பாளர்களின் அணியினர்.
- சிறப்பு நிருபர் எழில்
-
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
விஜய், உதயநிதி, அண்ணாமலை.. இளம் முகம் இல்லாமல் தடுமாறும் அதிமுக.. எடப்பாடிக்கு அடுத்து யார்? -
இசக்கி சுப்பையா டூ கடம்பூர் ராஜு.. இதுவரை எத்தனை அதிமுக மாஜி அமைச்சர்கள் தவெகவில் ஐக்கியம்! லிஸ்ட் -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
"ஆதவ் அர்ஜுனா வாயை அடக்கிப் பேசணும்.. அதிமுகவை பற்றி பேச அருகதை இல்லை".. கேபி முனுசாமி தாக்கு! -
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
சைலண்ட்டா முடிந்த சாவி மேட்டர்! விழுப்புரம் சண்முகம் ஆதரவாளர்களை மொத்தமா தூக்கிய எடப்பாடி! ஏன் -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
பனையூரில் பின்வாசல் வழியாக நுழைய முயன்ற அதிமுகவினர்! ஒரே தள்ளுமுள்ளு! விஜய் ஆபீஸில் என்ன நடக்கிறது -
இது ட்ரெய்லர் தான்.. அதிமுகவுக்கு தவெக எழுதப்போகும் கிளைமாக்ஸ்.. அருண்ராஜ் அதிரடி -
விஜய் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றல.. எல்லாம் போச்சு.. அப்செட்டில் இருக்கும் அதிமுக புள்ளிகள்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு










Click it and Unblock the Notifications