Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நீங்க அடிச்சுக்கோங்க.. சைலண்டாக ஒதுங்கிக் கொண்ட எடப்பாடி.. இந்த மேட்டர்ல வாயே திறக்கலையே! என்னவாம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அயோத்தி ராமர் கோவில் விவகாரம் தொடர்பாக, பாஜகவுக்கும் திமுக அரசுக்கும் இடையே கருத்து மோதல்கள் உக்கிரமாக நிலவி வரும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி சைலண்டாக இருந்த இடம் தெரியாமல் இருந்து வருகிறார்.

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. அயோத்தி ராமர் கோவிலில் குழந்தை ராமர் சிலை இன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் பிரதமர் மோடி, ஏராளமான ஆன்மீக தலைவர்கள், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். நாடு முழுவதும் கோவில்களில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்றன.

Why did Edappadi Palanisamy remains silent on Ram Temple issue, pooja, LED screen fight

பாஜக vs திமுக: முன்னதாக, அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி, பாஜகவுக்கும், தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசுக்கும் இடையே மோதல்கள் வெடித்தன. அயோத்தி ராமர் கும்பாபிஷேகத்தை ஒட்டி நாடு முழுவதும் பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும் நிலையில் தமிழ்நாட்டில் சிறப்பு பூஜைக்கு தடை விதிக்கப்பட்டதாக திடீரென ஒரு தகவல் தீயாகப் பரவியது.

பாஜக தலைவர்கள் நிர்மலா சீதாராமன், அண்ணாமலை, வானதி சீனிவாசன், எச்.ராஜா என பலரும், திமுக அரசை கண்டித்து அடுத்தடுத்து அறிக்கை விட்டனர். ஆனால், தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை, அப்படி ஒரு தடையை விதிக்கவே இல்லை என மறுத்தது. மேலும், தமிழ்நாடு அரசே, தவறான தகவல் பரப்பப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிக்கையும் வெளியிட்டது.

எடப்பாடி அமைதியோ அமைதி: இத்தனை களேபரங்கள் நடந்தாலும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இதுபற்றி வாய் திறக்கவே இல்லை. பல்வேறு விவகாரங்கள் பற்றி நாள்தோறும் அறிக்கை விடும் எடப்பாடி பழனிசாமி, இந்த விவகாரத்தில் மௌனம் காத்தார். திமுக - பாஜக இடையே கருத்து மோதல்கள் நடந்து வந்த நிலையிலும், அதிமுக தரப்பு மூச்சு விடவில்லை.

இந்நிலையில், இன்று அயோத்தி கும்பாபிஷேக நிகழ்வை எல்.இ.டி திரைகளில் ஒளிபரப்பு செய்வது தொடர்பான வழக்கும், அன்னதானம், சிறப்பு பூஜைகள், பஜனைகளுக்கு தடை விதிக்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றம், தடை விதிக்கப்பட்டுள்ளதாக தவறான தகவல், வதந்தி பரப்ப அனுமதிக்கப்பட மாட்டாது என கண்டனம் தெரிவித்தது.

ஒதுங்கிய எடப்பாடி: ராமர் கோயில் குடமுழுக்கு நிகழ்வையொட்டி பஜனை, சிறப்பு பூஜை நடத்துவோர் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் வகையில் பஜனைகள், அன்னதானம் நடத்துவோர் செயல்படக்கூடாது என சென்னை உயநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது. பக்தி என்பது அமைதி, மகிழ்ச்சிக்காக மட்டுமே; சமுகத்தில் உள்ள சமநிலையை சீர்குலைப்பதற்காக அல்ல என்பதை அனைவரும் உணரவேண்டும் என நீதிபதி தெரிவித்தார்.

ஆனால், இந்த எந்த விவகாரத்திலுமே எடப்பாடி பழனிசாமியோ, அதிமுக தலைவர்களோ கருத்துச் சொல்லவில்லை. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், எல்.இ.டி திரை ஒளிபரப்பு விவகாரத்தில் திமுக அரசுடன் மல்லுக்கட்டியது பெரும் பரபரப்புக்கு உள்ளான நிலையிலும், பாஜக - திமுக இடையேயான இந்த மோதல் பற்றி எந்தவித கருத்தும் இன்றி ஒதுங்கிவிட்டார் எடப்பாடி பழனிசாமி. பொய்ச் செய்தி பரப்பப்பட்டதையும் கண்டிக்கவில்லை, திமுக அரசையும் விமர்சிக்கவில்லை.

கால் வலி: முன்னதாக, ராமர் கோவில் திறப்பை பாஜக அரசியலாக்குவதால் இந்த விழாவில் பங்கேற்பது இல்லை என காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளும் அறிவித்தன. ஆனால் பாஜகவுடன் கூட்டணியை முறித்துக் கொண்டதாக அறிவித்த அதிமுக, அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு அனைவரும் செல்லலாம், அனைத்து மதத்தினரும் பங்கேற்கலாம் என தெரிவித்தது.

தமிழக கோவில்களில் பூஜைகளை நிறுத்தியதாக வதந்தி பரப்பாதீர்கள்: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு அனைத்து மதத்தினரும் செல்லலாம். யாருக்கெல்லாம் விருப்பம் இருக்கிறதோ அவர்கள் அனைவரும் அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவில் பங்கேற்கலாம். எனக்கு காலில் வலி இருக்கிறது. வாய்ப்பிருந்தால் அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு செல்வேன் என எடப்பாடி பழனிசாமி பட்டும் படாமல் தெரிவித்திருந்தார்.

பூஜை, அன்னதானம் நடத்த தடை விதிக்கவில்லை.. பொய் செய்தி பரப்பினால் கடும் நடவடிக்கை.. அரசு அறிவிப்பு!

என்ன காரணம்?: இந்நிலையில், அயோத்தி ராமர் கோவிலைச் சுற்றி கடந்த இரண்டு நாட்களாக சர்ச்சைகள் சுழற்றி அடித்த நிலையில், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி, கண்டும் காணாதது போல் இருந்து வருகிறார். திமுக - பாஜக இடையேதான் போட்டி என்பதைப் போல, ஈபிஎஸ் இருப்பது விமர்சனங்களைக் கிளப்பிவிட்டுள்ளது.

அயோத்தி ராமர் கோவில் விவகாரத்தில் பாஜகவுக்கு எதிராக கருத்துச் சொன்னால், பெரும்பான்மை இந்துக்களை பகைத்துக் கொள்வதாகிவிடும். பாஜகவினரின் குரலுக்கு வலு சேர்க்கும் வகையில், திமுக அரசை எதிர்த்து அறிக்கை விட்டால், சிறுபான்மையினரின் ஆதரவை இழக்க நேரிடும். இப்படியான சூழலில் தான், இந்த விவகாரத்திற்குள்ளேயே சிக்காமல் சைலண்டாக எஸ்கேப் ஆகிவிட்டார் எடப்பாடி பழனிசாமி என்கிறார்கள் விவரமறிந்த வட்டாரத்தினர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+