வீட்டிலேயே பிரிண்ட் அடித்த எடப்பாடி! கையில் பேப்பரோடு வந்தது ஏன்? வேறு ஏதோ நடந்துருக்கு! குழப்புதே
சென்னை: பாஜக தலைவர் அண்ணாமலை முதல்வர் வேட்பாளர் ஆக முயன்றதாக அதிமுக வைத்த குற்றச்சாட்டிற்கு மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதிமுக பாஜக கூட்டணி முறிந்துவிட்டாலும் அது பற்றி எடப்பாடி பழனிசாமி எதுவும் நேரடியாக இதுவரை பேசவில்லை. ஒருவார்த்தை கூட கூட்டணி முறிவை பற்றி பேசவில்லை. இந்த நிலையில்தான்கூட்டணி முறிவிற்கு என்ன காரணமாக இருக்கும், இவர்கள் மோதலில் அடுத்து என்ன நடக்கும், அண்ணாமலை முதல்வர் வேட்பாளர் ஆக முயல்கிறாரா என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில், அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். சில சமயம் கூட்டணி உண்டு என்பார்கள். சில சமயம் கூட்டணி இல்லை என்பார்கள். கூடா நட்பு கேடாய் முடியும் என்பார்கள். அதே சமயம் மீண்டும் நாங்கள் நண்பர்கள் என்பார்கள். இதனால் இப்போது கூட்டணி முறிவை வைத்து எதுவும் சொல்ல முடியாது. 2024 தேர்தலை பற்றி முதலில் பார்ப்போம். 2026 சட்டசபை தேர்தலில் அண்ணாமலையை முதல்வர் வேட்பாளர் ஆக்குகிறார்களா என்பதை எல்லாம் இப்போது பேச வேண்டாம். அப்போது என்ன நடக்கும் என்பதை கணிக்க முடியாது.
இப்போது முக்கியம் எல்லாம் 2024 லோக்சபா தேர்தல்தான் . அண்ணாமலையை முதல்வர் வேட்பாளராக்க வேண்டும் என்று பாஜக சொன்னதாக அதிமுக சொல்வதை பற்றி இப்போது பேச வேண்டாம். தமிழ்நாட்டிலும் பாஜகவிற்கு ஆட்சி அமைக்க வேண்டும், முதல்வர் ஆக வேண்டும் என்று ஆசை இருக்கும். அதனால் இப்போது எதையும் சொல்ல முடியாது. 2024ல் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அதிமுக என்ற கட்சியே கூட இருக்காது. அதுவே பாஜக வரவில்லை என்றால் அதிமுக பாஜக பின் செல்லவே செல்லாது. எதுவும் நடக்காது.
அரசியலில் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை இப்போது சொல்ல முடியாது. அதிமுக தொண்டர்களை தன் பக்கம் கொண்டு வர வேண்டும் என்பதால் அதிமுக இப்படி பாஜகவை தாக்கி வருகிறது. அங்கே அமித் ஷா - எடப்பாடி பழனிசாமி என்ன பேசினார்கள் என்று நமக்கு தெரியாது. அவர்கள் இடையே என்ன வாதம் நடந்தது என்று நமக்கு தெரியாது. அவர்கள் பேசியதை வைத்தே எதுவாக இருந்தாலும் சொல்ல முடியும். அதனால் இப்போதைக்கு நாம் எதுவும் பேச முடியாது.

முதல்வர் வேட்பாளர் விஷயத்தில் பாஜக இப்போது முடிவு எடுக்காது. எடப்பாடிக்கு சரி.. அண்ணாமலைக்கு சரி. அதில் உறுதி அளித்து இருக்கவே மாட்டார்கள். ஏற்கனவே உத்தவ் தாக்கரேவிற்கு இதேபோல் உறுதி அளித்து பாஜக அதிர்ச்சி அடைந்தது. அதனால் அதை பற்றி அவர்கள் பேசவே மாட்டார்கள். இதற்கு பின் வேறு எதோ நடந்து இருக்கிறது. கூட்டணி முறிவிற்கு பின் வேறு எதோ நடந்து இருக்கிறது.
கூட்டணியை முறிக்க வேண்டும் என்ற முடிவோடுதான் எடப்பாடி வந்துள்ளார். ஏற்கனவே வீட்டிலேயே அதை பிரிண்ட் எடுத்து பேப்பரோடு வந்து உள்ளார். அப்படி என்றால் வேறு எதோ நடந்து உள்ளது. கூட்டணியில் வேறு எதோ நடந்து உள்ளது. எனவே . இதற்கு பின் வேறு எதோ நடந்து இருக்கிறது. கூட்டணி முறிவிற்கு பின் வேறு எதோ நடந்து இருக்கிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications