ஓஹோ.. ப்ளானே வேற போல.. "தலைவர்" என்றும் பாராமல்.. எடப்பாடியே இதை செய்யலாமா.. அதுக்குன்னு இப்படியா?
: பண்ருட்டி ராமச்சந்திரன் பதவியை எடப்பாடி பறிக்க காரணம் என்ன
சென்னை: பண்ருட்டி ராமச்சந்திரனை கட்சியில் இருந்து எடப்பாடி பழனிசாமி ஏன் நீக்கம் செய்தார் என்ற பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பண்ருட்டிராமச்சந்திரனை அதிமுகவில் இருந்து நீக்குவதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
அதிமுகவின் அரசியல் ஆலோசகராக இன்று முதல் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக ஓபிஎஸ் அறிவித்துள்ளார்.. இந்த அறிவிப்புக்கு ஒத்துழைப்பு தரும்படியும் கேட்டுக் கொண்டுள்ளார்!

பண்ருட்டி
எடப்பாடி தலைமையில் பொதுக்குழு நடந்ததற்கு முன்பும், பின்பும், பண்ருட்டியாரை தனியாக சந்தித்து பேசினார் ஓபிஎஸ்.. இதற்கு முன்பு, சசிகலாவும் பண்ருட்டியை சந்தித்து பேசியிருந்தார்.. இவர்கள் அனைவரிடமும் பண்ருட்டி சொல்லியிருந்த ஒரே கருத்து, அதிமுகவில் பிளவு கூடாது, அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதுதான்.. அதாவது பாஜக மேலிடம் வலியுறுத்தி வரும் அதே கருத்தைதான், மூத்த தலைவரான பண்ருட்டியும் சொல்லி உள்ளார்.. சொல்லியும் வருகிறார்.

குட்டி பிளாஷ்பேக்
அனைவரையும் ஒன்றாக இருக்க சொன்னது ஒரு குத்தமா? இதுக்கே எடப்பாடி பழனிசாமி சீனியர் என்றும் பாராமல் பண்ருட்டியாரை தூக்கி எறிந்துவிட்டாரே என்ற கருத்துக்கள் சோஷியல் மீடியாவில் ஆக்கிரமித்து வருகின்றன.. இந்நிலையில், எதற்காக பண்ருட்டியை திடீரென எடப்பாடி நீக்கம் செய்தார் என்ற தகவல் கசிந்துள்ளது.. இதுக்கெல்லாம் காரணமே சி.வி.சண்முகம்தானாம். இதற்கு ஒரு குட்டி பிளாஷ்பேக் காரணமும் சொல்லப்படுகிறது.

வன்மம் மோதல்
சிவி சண்முகத்தின் வலியுறுத்தலின் படி இந்த நீக்கத்தை எடப்பாடி செய்ததாக சொல்கிறார்கள்.. அதாவது, பண்ருட்டிக்கும் சி.வி.சண்முகத்தின் அப்பாவுக்கும், எம்ஜிஆர் காலத்திலிருந்தே மோதல்கள் இருந்தது. சண்முகத்தின் தந்தைக்கு எதிராக எம்ஜிஆரிடம் பல்வேறு புகார்களைத் தெரிவித்தவர் பண்ருட்டியார். இவரது வலியுறுத்தலின் பேரில் சண்முகத்தின் தந்தையை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கினார் எம்ஜிஆர்! அந்த வன்மம் காலகாலமாக தொடர்கிறது. இந்த நிலையில், சண்முகம் சொல்லியே பண்ருட்டியாரை நீக்கியுள்ளார் எடப்பாடி.

அட்வைஸ்
இதற்கிடையே, நேற்றுமுன்தினம்கூட பண்ருட்டியாரை சந்தித்தார் ஓபிஎஸ். அப்போது, அரசியல் செய்யத் துவங்குங்கள் என பண்ருட்டியார் ஓபிஎஸ்சுக்கு அட்வைஸ் செய்தார். நேரடி அரசியலுக்கு வாருங்கள் என பதிலுக்கு ஓபிஎஸ்சும் வலியுறுத்தியுள்ளார். இந்த நிலையில் தான், பண்ருட்டியாரை அரசியல் ஆலோசகராக நியமித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளார் ஓபிஎஸ். இனி, மா.செ.க்கள் பலரையும் நியமித்து அதிரடி அரசியலை காட்டப்போகிறாராம் ஓபிஎஸ் என்கிறார்கள் ஓபிஎஸ் தரப்பில். அதேசமயம், என்னைக்கோ நடந்த பழைய விஷயத்தை மனதில் வைத்து, இப்போ வந்து அதிகாரத்தில் காட்ட வேண்டுமா? இத்தனை காலமும் பண்ருட்டி அதே கட்சியில்தானே இருந்தார்? ஒரு தனிநபர் பகைமைக்காக ஒரு சீனியரின் பதவியை பறிப்பதா? அதுவும் ஆளுமையை நிரூபித்து வரும் எடப்பாடியே செய்யலாமா? என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications