ஜனநாயகன் படத்துக்கு சென்சார் சான்று கிடைக்காதது ஏன்? மாஜி சென்சார் போர்டு உறுப்பினர் எஸ்வி சேகர் விளக்கம்
சென்னை: நடிகர் விஜயின் ‛ஜனநாயகன்' திரைப்படத்துக்கு இன்னும் சென்சார் சான்று கிடைக்கவில்லை. இதனால் இன்று (ஜனவரி 9) வெளியாக வேண்டிய ஜனநாயகன் திரைப்படம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் ஜனநாயகன் திரைப்படத்துக்கு ஏன் தணிக்கை சான்று வழங்கப்படவில்லை என்று நடிகரும், மாஜி சென்சார் போர்டு உறுப்பினருமான எஸ்வி சேகர் விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக நடிகர் எஸ்வி சேகர் கூறியதாவது: சென்சார் போர்ட் என்பது இப்போது போர்ட் கிடையாது. அது இப்போது சர்ட்டிபிகேஷன். Central Board of film Certification. சென்சார் என்பது இதற்கு முன்பு காட்சிகளை கட் செய்யும். ஆனால் இப்போது அப்படியெல்லாம் கிடையாது. இப்போது ஒரு படத்தை பார்க்கிறார்கள்.

இந்த காட்சிகள் இருந்தால் ஏ சர்ட்டிபிகேட். குறிப்பிட்ட காட்சிகள் இருந்தால் யூ/ஏ சர்ட்டிபிகேட். அதேபோல் இந்த காட்சிகள் எல்லாம் இருந்தால் யூ சர்ட்டிபிகேட் என்று சொல்வார்கள்.
அதன்பிறகு தயாரிப்பாளர் தான் தனக்கு வேண்டிய சர்ட்டிபிகேட் ஏ வேண்டுமா? யூ/ஏ வேண்டுமா? யூ வேண்டுமா? என்பதை தேர்வு செய்ய வேண்டும். முதலில் 4 உறுப்பினர்களும், ஒரு சென்சார் அதிகாரியும் திரைப்படத்தை பார்ப்பார்கள். அதில் 4 உறுப்பினர்களும் ஏகமனதாக குறிப்பிட்ட சர்ட்டிபிகேட் கொடுக்கலாம் என்று சொல்லிவிட்டால் அந்த சர்ட்டிபிகேட் கொடுத்து விடுவார்கள்.
மேலும் இதற்கு ஆன்லைனில் தான் அப்ளை செய்ய வேண்டும். அதற்கு 10 நாள் டைம் இருக்கு. பெரிய படம் வருது மற்ற படங்கள் எல்லாம் தள்ளி நில்லுங்கள் என்று சொல்ல முடியாது. அடுத்த ஆண்டு வரக்கூடிய படத்துக்கு கூட சென்சார் வாங்க பணம் கட்டி வைத்து கொள்வார். அப்படி இருக்கும்போது அந்த படங்களை தான் பார்த்தாக வேண்டும்.
ஜனநாயகன் படத்தை பொறுத்தவரை கோர்ட்டில் சென்சார் மெம்பார் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார்கள். அப்படியென்றால் 4 பேரில் 3 பேர் ஏற்றுக்கொண்ட விஷயத்தை ஒருவர் எதிர்க்கிறார். அப்படி எதிர்க்கும்போது அவரது கருத்தை மீறி ஒரு படத்துக்கு சென்சார் சர்ட்டிபிகேட் கொடுக்க முடியாது. எல்லா இடத்திலும் பெரும்பான்மை என்பது வராது.
ஒருவேளை படத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நபர் சென்சார் தலைவருக்கு அனுப்பி வைத்து விட்டார் என்றால்.. தலைவர் அதனை ஆய்வு செய்த பிறகு தான் படத்துக்கு சான்று வழங்கப்படும். அப்படியான சூழலில் ராணுவம் சம்பந்தப்பட்ட காட்சிகள் சில வருகிறது. அந்த காட்சிகளில் பயன்படுத்தப்பட்டுள்ள பேட்ஜ் மற்றும் அடையாளங்கள் சிலவற்றை காட்டாலாமா? இல்லையா? என்பதற்கு மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இருந்து அனுமதி பெற வேண்டும்.
இதற்கு முன்பு ஒரு திரைப்படம் வந்தது. சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படத்தில் அதற்கான காட்சிகள் அனைத்தையும் முன்கூட்டியே கொடுத்து எதையெல்லாம் பயன்படுத்தலாம்? எதையெல்லாம் பயன்படுத்த கூடாது? என்பது பற்றி கேட்டு அந்த படத்தை வெளியிட்டார்கள்'' என்று கூறியுள்ளார்.
-
கள்ளச்சாராயம் ஒழிக்க தனிப்படை.. கள்ளக்குறிச்சியில் விஜய் அரங்கேற்றும் மாற்றம்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் -
”ஆபரேசன் அக்னி கலசம்” வன்னியர் ஓட்டுகளை அள்ளுவது எப்படி? விஜய் அமைத்த வியூகம்! பரபரப்பான ’நார்த்’ -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஜய் தவெகவின் ‘வெற்றி டிவி’? டெல்லியில் டிரேடுமார்க் விண்ணப்பம்! களமிறக்கப்படும் பிரம்மாண்ட திட்டம் -
இவ்வளவு ஆதரிச்சதே அதிகம்.. இன்னும் கொஞ்சம் வேணுமாம்! அரசியல் பேரிடர்.. விஜய்யை இறங்கி அடித்த சீமான் -
“திமுக கூட்டணிக் கட்சிகளிடம் கையேந்தி, கெஞ்சி ஆட்சி அமைத்துள்ளார் விஜய்”.. டிடிவி தினகரன் தாக்கு! -
வெட்கமாக இல்லையா விஜய் அரசே? ஆன்லைன் பத்திரப்பதிவு சேவை குறித்து திமுக விளக்கம் -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
வேற லெவலில் விஜய் செய்த சம்பவம்! ஒரே நேரத்தில் 300 பேருக்கு ப்ரோமோஷன்! வரலாற்றில் முதன்முறையாமே! -
மாறுவேடத்தில் நள்ளிரவு ரவுண்ட்ஸ் போகிறாரா முதல்வர் விஜய்? தவெக ஆனந்த்ஜீத் உடைத்த அதிரடி ரகசியம்! -
கள்ளச் சாராயத்தை ஒழிக்க விஜய் போட்ட மெகா பிளான்.. நேரடியாக களத்தில் இறங்கிய ஆதவ் அர்ஜுனா! -
கஜானா காலியா? விஜய் சொன்ன மேட்டர்.. அப்படி எல்லாம் ஆகாது! உடைத்து பேசிய ப.சிதம்பரம்











Click it and Unblock the Notifications