"முருங்கை மரம்".. அதிமுக + பாஜக கூட்டணி உடைகிறதா.. சீறிய ஜெயக்குமார்.. அசராத அண்ணாமலை.. இதான் காரணமா
சென்னை: அதிமுக - பாஜக கூட்டணியில் மீண்டும் உரசல் வெடித்துள்ளது.. உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வந்து சென்ற நிலையில், சொந்த கூட்டணிக்குள்ளேயே புகைச்சல்கள் கிளம்பி உள்ளன... இதற்கு என்ன காரணம்?
அதிமுக பாஜக கூட்டணி இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது.. இன்றைய தினம் செய்தியாளர்களுக்கு ஜெயக்குமார் பேட்டி தந்துள்ளார்.
அதில், இனியும் எங்க பேச்சுக்கு வந்தால் அண்ணாமலை வாங்கிக் கட்டிக்கொள்வார்.. கட்டுச்சோறுக்குள்ள பெருச்சாளி.. அண்ணாமலைக்கு வாய் நீளம்.. நாக்கு நீளம்,.. வாய் சவடால்.,.. கொஞ்சமும் நாவடக்கம் இல்லை.. மற்ற கட்சி வேண்டுமானால் சூடு சொரணை இல்லாமல் இருக்கலாம். ஆனால், நாங்கள் அப்படி இருக்க முடியாது.. எங்கள் காலை மிதித்தால், நாங்கள் திரும்ப மிதிப்போம்" என்று ஆக்ரோஷமாக பேசியுள்ளார் மாஜி அமைச்சர் ஜெயக்குமார்.
கூட்டணி: ஜெயக்குமாரின் இந்த ஆவேசத்துக்கு என்ன காரணம்? கூட்டணிக்கள் என்னதான் நடக்கிறது.. கடந்த சில மாதங்களாகவே அதிமுக - பாஜக இடையே சுமூக சூழல் ஏற்படவில்லை.. இரு தரப்பிலுள்ள 2ம்கட்ட தலைவர்கள் வெளிப்படையாகவே விமர்சித்து கொண்டார்கள்.. எடப்பாடி பழனிசாமி கொடும்பாவியும் எரிக்கப்பட்டன.
இதற்கு பிறகு, மூத்த தலைவர்கள் இந்த விஷயத்தில் தலையிட்டு, ஓரளவு சுமூகமாக்கினர்.. ஆனாலும், கூட்டணி விவகாரம் இழுபறியாகவே இருந்தது.. தனித்து போட்டி என்று, எடப்பாடி பழனிசாமியும், அண்ணாமலையும் மாறி மாறி சொல்லி கொண்டேயிருந்தனர்..
இறுதியில், அமித்ஷா ஒரு நாளிதழுக்கு தந்த பேட்டியில் அதிமுக கூட்டணியை உறுதி செய்திருந்தார்.. இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி நேரடியாகவே டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசியிருந்தார். அப்போது அங்கு நடந்த ஆலோசனையில், அண்ணாமலையும் பங்கேற்றிருந்தார்.
பஞ்சாயத்து: சில விஷயங்களை, இரு தரப்பிலுமே அமித்ஷாவிடம் கொண்டு சென்றுள்ளனர்.. இறுதியில், "தமிழகத்தில் அதிமுக - பாஜக இரு தரப்பிலுமே சுமூகமான மனப்போக்குடன் நடந்து கொள்வோம்" என்று எடப்பாடி + அண்ணாமலை சார்பில் மேலிடத்தில் அன்று உறுதி அளிக்கப்பட்டதாம்.. இந்த சந்திப்புக்கு பிறகு, எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி தந்திருந்தார். அப்போது, "அண்ணாமலைக்கும், உங்களுக்கும் இடையேயான தகராறு குறித்து பஞ்சாயத்து எதுவும் நடைபெற்றதா?" என்று கேட்டார்கள்..

அதற்கு எடப்பாடி பழனிசாமி, "நீங்க தவறான கருத்தை சொல்றீங்க.. எங்களுக்கும், பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் எந்தவிதமான தகராறும் இல்லையே.. தகராறு இருந்தால் எப்படி ஈரோட்டில் வந்து அவர் பிரச்சாரம் செய்திருப்பார்? இதுபோன்ற உள்நோக்கத்துடன் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பக் கூடாது என்று திருப்பியடித்தார் எடப்பாடி பழனிசாமி. அந்தவகையில், அண்ணாமலை மீதான அதிருப்தி எடப்பாடி பழனிசாமிக்கு கிட்டத்தட்ட நீங்கிவிட்டதாகவே பார்க்கப்பட்டது.
சாத்தியமா? இல்லையா?: ஆனால், எடப்பாடி பழனிசாமி இப்படி சொன்னாலும், அண்ணாமலை தரப்பில், இப்படியான இணக்கமான பேட்டிகளோ, பேச்சுக்களோ வெளியாகவில்லை.. இதுவரை கூட்டணி குறித்தும் அண்ணாமலை வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.. எடப்பாடி பழனிசாமியும், அண்ணாமலை தரப்பும் இதுவரை நேருக்கு நேர் வெளிப்படையாக சந்தித்து கொள்ளவுமில்லை.. ஒருவரையொருவர் பற்றி பேட்டிகளையும் தந்து கொள்ளவில்லை..
அமைதி: இதற்கு நடுவில் பாஜகவின் மாநில செயற்குழு கூட்டம் கோவையில் நடந்தது.. இந்த கூட்டத்தில் கூட்டணி குறித்ததோ அல்லது எடப்பாடி குறித்தோ அண்ணாமலை ஏதாவது பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால், அப்படி எதுவுமே பேசவில்லை.
ஆக, அதிமுக - பாஜக கூட்டணி உறுதிப்படுத்தினாலும்கூட,, அகில இந்திய அளவில்தான் அது உறுதியாகி உள்ளதே தவிர, மாநில அளவில் இன்னும் இணக்கமான போக்கு ஏற்படவில்லை என்றே கருதப்பட்டது.. அப்படி இணக்கமான போக்கு ஏற்படவேண்டுமானால், அதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுகவுடனான கூட்டணியை அதிகாரப்பூர்வமாக வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.. அப்படி அறிவித்தால்தான், 2 கட்சி தொண்டர்களும் இணைந்து களத்தில் பணியாற்ற முடியும் என்பது அடிப்படையான விஷயம்.. ஆனால், இதுவரை அப்படியான நிகழ்வு எதுவுமே நடக்கவில்லை.
காய்நகர்த்தல்: மாறாக, எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான காய்களையே அண்ணாமலை நகர்த்தியதாக பார்க்கப்பட்டது.. குறிப்பாக, கள்ளச்சாராயம் மற்றும் சட்ட ஒழுங்குப் பிரச்சினை குறித்து பேரணியாக சென்று, ஆளுநரிடம் மனு கொடுக்க போவதாக எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டிருந்தார்.. உடனே பாஜகவும் திமுக அரசுக்கு எதிரான போராட்டத்தை துவங்கியது.. அதாவது, அதிமுகவிற்கு முன்னதாகவே, போராட்டத்தை நடத்தி பாஜக முடிவு செய்துவிட்டதாம்..
இது அதிமுக தரப்புக்கு எரிச்சலை அப்போதே உண்டு பண்ணியதாம்.. எப்ப பார்த்தாலும், அதிமுகவுடன் மோதுவதே அண்ணாமலைக்கு வேலையாகி போய்விட்டது என்று மூத்த தலைவர்கள் அனைவரும் கடும் கோபத்தில் இருப்பதாக செய்திகள் வெளியாகின.. ஒரே விஷயத்துக்காக கவர்னரை தனித்தனியாக சந்திப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை என்றாலும், அதிமுகவை லேசாக டேமேஜ் செய்யும் நடந்துகொள்வதை தான் ஏற்க இயலவில்லை என்று கடுப்பாகி சொல்கிறார்களாம் அதிமுக சீனியர்கள்..
வருத்தம்: அதிமுக சார்பில் எத்தகைய அறிவிப்பு வெளியிட்டாலும், உடனே அதற்கு பதிலடி கொடுப்பது போல, அதிமுகவை முந்திக்கொண்டு, அதை செய்து முடித்துவிடுவது என்பதில் அண்ணாமலை தீவிரமாக இருப்பதாகவே அதிமுக மூத்த தலைவர்கள் வருத்தப்பட்டுக் கொண்டார்களாம்.
இது ஒரு உதாரணம்தான் என்றாலும், கடந்த 4 மாத காலமாகவே, அதிமுக - பாஜக மோதல் வெடித்தபடியே உள்ளன.. 2 நாட்களுக்கு முன்புகூட, அதிருப்தி ஒன்று வெடித்து கிளம்பியது.. அதிமுகவை மீண்டும் சீண்டியிருந்ததே அண்ணாமலைதான்..
இதற்கு மூத்த தலைவர் செல்லூர் ராஜு காட்டமாக பதிலளித்திருந்தார்.. அப்போது, "அண்ணாமலை சொல்வது போல். தேர்தலில் அவர்கள் தயவில் நாங்கள் வெற்றி பெற போவதில்லை. எங்களுடன் பயணித்தால் மட்டுமே அவர்களால் கரைசேர முடியும். இல்லாவிட்டால் நட்டாற்றில் போக வேண்டிய பரிதாபம் அவர்களுக்கு ஏற்படும்'' என தெரிவித்திருந்தார்.
நங்கூரம்: உடனே பாஜகவின் துணை தலைவர் நாராயணன் திருப்பதி, "கரை சேர முடியாமல் நட்டாற்றில் தத்தளித்த அதிமுகவை நங்கூரமிட்டு பாதுகாத்தது பாஜகதான் என்பதை மறந்துவிடக் கூடாது'' என்று பதிலடி தந்திருந்தார். அதாவது அமித்ஷா சென்னை வந்த தினத்தன்றே இந்த மோதல் மீண்டும் வெடித்தது..
ஆரம்பத்தில் இருந்தே, தன்னுடன் மோதல் போக்கை அண்ணாமலை கடைப்பிடித்து வருவதால்தான், எடப்பாடி பழனிசாமி, டெல்லி மேலிட தலைவர்களிடம், "மாநில தலைமையை மாற்றுங்கள்".. இல்லாவிட்டால் கூட்டணிக்குள் பிரச்சனை வந்துவிடும் என்று எடுத்துரைத்தாராம்.. பாஜகவுக்குள்ளேயே மேல்மட்ட தலைவர்களும் இதே பிரச்சனையை டெல்லிக்கு கொண்டு சென்றிருந்ததாகவும் சொல்லப்பட்டது..
துணிச்சல் முடிவு: இப்படி நாலாபக்கமும், புகார்கள் பறந்தாலும், டெல்லி மேலிடம் அண்ணாமலை விஷயத்தில் அமைதி காக்கவே செய்தது.. இப்போதுவரை அண்ணாமலை மீதான நன்மதிப்பு மேலிடத்துக்கு அபரிமிதமாகவே இருக்க செய்கிறது.. எனினும், அதிமுகவுடனான கூட்டணியை அண்ணாமலை விரும்பவில்லை என்பதே அவரது ஒரே குறிக்கோளாக இருந்து வருகிறது.. தனித்து போட்டியிடுவோம், அப்போதுதான் நமது பலம் தெரியும் என்ற துணிச்சல் முடிவையும் அண்ணாமலை முன்வைத்து வருகிறார்..
மொத்தத்தில் தமிழக பாஜக தலைமையிலான, அதாவது தன்னுடைய தலைமையிலான கூட்டணி அமைவதையே அவர் பெரிதும் விரும்பவுதாகவும், அதனாலேயே அதிமுக மீதான அதிருப்தியை வாரி இறைப்பதாகவும் சொல்கிறார்கள்..
உச்சக்கட்டம்: இன்று ஜெயக்குமாரே இவ்வளவு வார்த்தைகளை பேசியுள்ளது, மோதலின் உச்சமாக பார்க்கப்படுகிறது.. பாஜகவின் மூத்த தலைவர்களான, வானதி சீனிவாசன், எச்.ராஜா, நயினார் நாகேந்திரன், போன்றோர், கூட்டணிக்குள் இப்படி ஒரு குழப்பம் வந்துவிடக்கூடாது என்றுதான் பலமுறை பேட்டிகளை தந்து கொண்டேயிருந்தனர்.. ஆனால் அன்று அவர்கள் எதை நினைத்து பயந்தார்களோ, அது இன்று நடந்துவிட்டது..!!
-
கொஞ்ச நஞ்சம் பேச்சா? சொந்த ஊருக்கே போங்க! அண்ணாமலைக்கு 2 தரப்பும் அழுத்தம்? களத்தில் கோவை கொதிக்குதே -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
செக் வைத்த எடப்பாடி பழனிசாமி! அண்ணாமலை அப்செட்? தமிழக பாஜக வேட்பாளர் தேர்வு கூட்டத்தில் மிஸ்ஸிங்! -
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
கோவை தெற்கு, அரவக்குறிச்சி, நெல்லை எங்கே? தொகுதி மாறும் நயினார் நாகேந்திரன், வானதி, அண்ணாமலை! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு












Click it and Unblock the Notifications