"சந்துபொந்துல".. ஜமாத்காரங்க வந்தாங்களே.. அப்ப திமுக செஞ்சதை பார்த்தீங்களா.. காளியம்மாள் ஒரே போடு

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாம் தமிழர் கட்சியின் காளியம்மாள் பேசிய ஒரு வீடியோ, இணையத்தில் வெளியாகி உள்ளது. இதைப்பார்த்து திமுக தரப்பில் எரிச்சலடைந்து வருகிறார்கள்.. என்ன காரணம்?

திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், தமிழக வேளாண்துறை அமைச்சருமான எம்ஆர்கே பன்னீர்செல்வம், குறித்த சர்ச்சை ஒன்று சில நாட்களுக்கு முன்பு வெடித்தது.

நாற்காலி: அமைச்சர் பன்னீர்செல்வம் மட்டும் நாற்காலியில் அமர்ந்து கொண்டு, தம்மை சந்திக்க வந்த பரங்கிபேட்டை ஜமாத்தை சேர்ந்த இசுலாமிய பிரதிநிதிகளை நிற்கவைத்தே பேசியதாக விமர்சனங்கள் கிளம்பின. இது தொடர்பான போட்டோவும் இணையத்தில் வெளியானது.

Why did Kaliyammal condemns TN Government and criticized DMKs Social Justice

உதயநிதி நடித்துள்ள படம் மாமன்னன் என்ற படத்தின் நோக்கமே அனைவருக்கும் ஒரே மாதிரியான மரியாதை தரவேண்டும், தாழ்த்தப்பட்டவர் என்ற காரணத்தால் நாற்காலியில் அமர விடாமல் நிற்க வைப்பதை எதிர்க்க வேண்டும் என்பதுதான். இந்த படம் வெளிவந்த ஒருசில நாட்களிலேயே, அமைச்சர் எம்ஆர்கே செல்வம், இஸ்லாமிய பிரதிநிதிகளை நிற்கவைத்து பேசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை கிளப்பியது.

சீமான் கேள்வி: இந்த விவகாரம் குறித்து அப்போதே நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியிருந்தார். இதுதான் திமுக கடைபிடிக்கும் சமத்துவமா? இசுலாமியப் பெருமக்களை வெறும் வாக்கு வங்கிகளாக இன்னும் எத்தனை காலத்திற்கு திமுக ஏமாற்றபோகிறது? இதுதான் ஐம்பதாண்டுகளாக தமிழ் மண்ணில் திமுக கட்டிக்காத்த சமூகநீதியா? இதுதான் திராவிடம் வளர்த்தெடுத்த சுயமரியாதையா?"என்றெல்லாம் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் முக்கிய தலைவரும், பிரச்சார பீரங்கியுமான காளியம்மாள், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசியபோது, திமுகவை வழக்கம்போல் தாறுமாறாக விளாசித்தார்.. அதன் சுருக்கம்தான் இது:

புலம்பல்கள்: "லஞ்சம் வாங்குபவர்களுக்கும், ஊழல் பேர்வழிகளுக்கும் இந்த ஆட்சி அதிகாரத்தை மாறி மாறி கொடுத்துவிட்டு, நல்ல அரசாங்கம் அமையல, எங்களுக்கு பாதுகாப்பு கொடுக்கல என்று புலம்பல்கள் வரத்துவங்கிவிட்டன.. அதுவும் இந்த சமூக நீதி இருக்கே?

திமுகவின் சமூகநீதியை, எங்கியாவது சந்துபொந்துலதான் போய் தேடணும்.. ஒரு ஜமாத்தார்கள் சந்திக்க வருகிறார்கள்.. அந்த அமைச்சர் இருக்கையியே உட்கார்ந்து கொண்டு, அத்தனை பேரையும் நிற்க வைத்து பேசிக்கொண்டிருக்கிறார்.

சமூகநீதி: இதைப்பார்த்து வருத்தப்பட்டு, நாம் தமிழர் கட்சியின் எங்க அண்ணன் சீமான் உட்பட நாங்க எல்லாருமே வருத்தப்பட்டு பேசுறோம்.. ஆனால், அங்கே அமைச்சர் முன்னாடி நின்னுட்டு இருந்தவங்க, உடனே இதை சமாளித்து பேசறாங்க.

"நாங்களாதான் அப்படி நின்னுட்டு இருந்தோம்.. அமைச்சர் என்னவோ எங்களை சேரில் உட்கார சொன்னாரு.. நாங்களாதான் நின்னோம்" என்கிறார்கள்.. ஒரு அமைச்சரை காப்பாற்ற நினைக்கிற நீங்கள், நமக்கான மாண்பை காப்பாற்ற வேண்டும் என்று ஏன் நினைக்கவில்லை? ஒட்டுமொத்த தமிழ் மக்களின் மாண்பு அல்லவா அது? இப்படித்தான் திமுகவின் சமூக நீதி இங்கே கட்டமைக்கப்பட்டுள்ளது..

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பக்கம் இருக்கக்கூடிய பழங்குடி மக்களை, காவல்துறை இங்கிருந்து பக்கத்து மாநிலத்துக்கு கொண்டு சென்று விசாரணை என்ற பெயரில் நடத்தி வருகிறார்கள். "விடுதலை" படத்தில் ஒரு காட்சி வருமே.. பெண்களை விசாரணைக்கு அழைத்து சென்று நிர்வாணப்படுத்தி, அடித்து அவர்களின் கைகளை உயர்த்த செய்து, பிறப்புறுப்பில் மிளகாய் தூளை தடவி.. இந்த காட்சியையெல்லாம் நாம எல்லாருமே பார்த்தோம் - அழுதோம் கண்ணீர் விட்டோம்..

ஆனால், இப்போது அப்படி ஒரு கொடுமை நம் கண்முன்னாடியே நடந்துட்டு இருக்கு.. ஆனாலும் நாம் மவுனித்து இருக்கிறோம். ஏன்? ஏன்னா அது யாரோ ஒருவருக்கு நடந்துள்ளது என்று நினைத்து இங்கு கடந்து விடுகிறார்கள்.. பேசுவதற்கு யாருமில்லாதவர்களுக்கு இப்படி நடந்துள்ளதாக நினைக்கிறர்கள்.. ஆதரற்று நிர்க்கதியானவர்களுக்கு இப்படி நடந்துள்ளதாக நினைத்து தமிழக அரசு கடந்து போகலாம்.. எனினும், அதைக்கேட்பதற்கென்று இருக்கும் ஒரே கட்சி, எங்கள் அண்ணன் சீமானின் நாம் தமிழர் கட்சிதான்.

அரசு மருத்துவமனை: இன்றைக்கும் அந்த மக்களை சந்தித்து, நீதிகிடைக்கும்வரை போராடுவோம் என்று உறுதிதந்துவிட்டு வந்திருக்கிறோம். அரசு மருத்துவமனை லட்சணம் இங்கே எப்படி இருக்குனு பார்த்தீங்களா? ஒரு பச்சிளம்பிள்ளைக்கு உடம்பு சரியில்லைன்னு ஆஸ்பத்திரி போனால், அந்த பிள்ளையின் ஒரு கையை எடுத்து அனுப்பிட்டாங்க.. இந்த அரசாங்கத்தை என்ன கேள்வி எழுப்பினாலும், நமக்கு ஒரு பதிலும் கிடைக்காது" என்று கொந்தளித்தார் காளியம்மாள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+