"ஏய் ஏய்".. அத்தனை பேர் சுற்றி நிற்க.. மனைவி செய்த வேலை.. பதறி ஓடிய கணவன்.. மச்சினன்கள் வேற.. கொடுமை
சென்னை: சத்தீஸ்கர் மாநிலத்தில் சமீபகாலமாகவே, நடந்து வரும் சம்பவங்கள் பொதுமக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது.. என்ன நடந்தது?
கடந்தவாரம் சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த ஒரு சம்பவத்தின் அதிர்ச்சி இன்னமும் அம்மாநில மக்களை விட்டு அகலவில்லை.. ஜாலியாக ஆடிப்பாடிக்கொண்டிருக்கும் போதே, திடீரென சரிந்து விழுந்து இறந்துவிட்டார் ஒரு நபர்.

சத்தீஸ்கர் மாநிலம் பாலோட் மாவட்டத்தை சேர்ந்தவர் திலீப் ராஜ்குமார். 52 வயதாகிறது.. இவர் பிலாய் பகுதியில் உள்ள உருக்காலையில் என்ஜினியராக வேலை பார்த்து வந்துள்ளார்.
நெருங்கிய உறவு: இவரின் நெருங்கிய உறவுக்கார பெண்ணுக்கு, கடந்த மே 4ம் தேதி கல்யாணம் நடந்துள்ளது.. இதற்காக திருமணம் நடைபெற்ற கிராமத்திற்கு திலீப் வந்திருக்கிறார்.. அன்றைய நாள் முழுவதும் உறவினர்களுடன் ஜாலியாக ஆடிப்பாடி மகிழ்ந்து பொழுதை கழித்தார் திலீப்...
பின்பு, புதுமண ஜோடியுடன் மேடையில் திலீப் ஜாலியாக குதித்து ஆடினார். அப்போது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுவிடவும், டான்ஸ் ஆடிக்கொண்டிருந்தவர் மேடையில் அப்படியே சில நொடிகள் உட்கார்ந்தார்.. பிறகு அப்படியே பின்பக்கமாக சரிந்து விழுந்துவிட்டார். இதைப்பார்த்து அங்கிருந்தவர்கள் பதறிப்போய் அருகே உள்ள மருத்துவமனைக்கு திலீப்பை கொண்டு சேர்த்தனர்.. ஆனால், அவர் எப்போதோ இறந்துவிட்டதாக டாக்டர்கள் சொல்லிவிட்டனர். இந்த வீடியோ, இன்னமும்கூட இணையத்தில் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது.
மதுபோதை: இந்நிலையில் இன்னொரு சம்பவம் இதே சத்தீஸ்கரில், இதுபோலவே ஒரு திருமண நிகழ்ச்சியில் நடந்து, மறுபடியும் அதிர்ச்சியை கிளப்பி விட்டுள்ளது.. கபீர்தாம் மாவட்டத்தில் உள்ளது பாங்கவுரா என்ற கிராமம்.. இங்கு ஒரு திருமண விழா நேற்று முன்தினம் நடைபெற்றது... இந்த விழாவிற்கு அதே கிராமத்தைச் சேர்ந்த டின்ஹா பேகா என்பவர் கலந்து கொண்டார்... கல்யாணத்துக்கு வரும்போதே தண்ணி அடித்துவிட்டுத்தான் வந்திருந்தார்.. திருமண விழாவில் உறவினர்கள் அனைவரும் டான்ஸ் ஆடிக் கொண்டிருந்தனர்.
உச்சிக்கு ஏறிய கோபம்: இதைப் பார்த்ததும் டின்ஹாவின் மனைவியும், தன் குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து டான்ஸ் ஆடினார்.. இதை பார்த்ததுமே டின்ஹா கோபமடைந்து விட்டார்.. உடனே மனைவியிடம் சென்று, "அதெப்படி எல்லார் முன்பும் நீ டான்ஸ் ஆடலாம்?" என்று ஆவேசமானார்.. அனைவர் முன்னிலையிலும் மனைவியிடம் தகராறு செய்தார்.. இதனால் திருமணவிழாவில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.. ஒருகட்டத்தில், டின்ஹாவை அவரது இரண்டு தம்பிகளும், சமாதானம் செய்ய முயன்றுள்ளனர்... இது டின்ஹாவுக்கு மேலும் ஆத்திரத்தை தந்தது.
அப்போது மறைத்து வைத்திருந்த கத்தியால் தன்னுடைய 2 சகோதரர்களை சரமாரியாக டின்ஹா குத்தினார்... இதை பார்த்து அலறிய துடித்தார் மனைவி.. அடுத்த செகண்டே மனைவியையும் கத்தியால் குத்தினார்.. இதை தடுக்க மனைவியின் சகோதரர் ஓடிவந்தார்.. அவரையும் கத்தியால் குத்தினார் டின்ஹா.. மொத்த பேருமே கத்தியால் குத்துப்பட்டு சுருண்டு விழுந்தனர்..
கல்யாண வீடு முழுவதும் ரத்தமாய் ஓடியது.. உடனே அங்கிருந்தவர்கள் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.. போலீசாரும் விரைந்து வந்து, கத்திக்குத்தில் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஊசலாட்டம்: ஆனால், டின்ஹாவின் 2 தம்பிகளுமே பரிதாபமாக இறந்துவிட்டனர்.. டின்ஹாவின் மனைவி சீரியஸாக இருக்கிறாராம்.. உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதால், தீவிர சிகிச்சை நடந்து கொண்டிருக்கிறது.. மைத்துனரும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.. சொந்தக்காரர்கள் முன்பு மனைவி டான்ஸ் ஆடியதை தாங்கி கொள்ள முடியாமல், கணவர் செய்த செயலை பார்த்து, கபீர்தாம் மாவட்டமே பரபரப்பாகி உள்ளது.. டின்ஹா பேகா இப்போது ஜெயிலில் உள்ளார்..!!!


Click it and Unblock the Notifications
