விஷயம் கேட்டதும்.. வேட்டியை மடித்துக்கொண்டு.. களத்தில் இறங்கிய சேகர் பாபு.. சும்மாவா.. என்ன நடந்தது?
சென்னை: நேற்று இரவு முழுக்க சென்னையில் அதி தீவிர கனமழை பெய்தது. இந்த மழைக்கு இடையே சென்னையின் முக்கிய பகுதிகளில் அமைச்சர் சேகர் பாபு தீவிரமான சோதனைகளை மேற்கொண்டார்.
நேற்று இரவு மழை பெய்த மழை காரணமாக சென்னையில் தேங்கிய தண்ணீர் உடனே வடிந்து உள்ளது. சென்னையில், அரும்பாக்கம், கோயம்பேடு, காசிமேடு , ராயப்பேட்டை, கிண்டி, வடபழனி ,திருவொற்றியூர் , எண்ணூர், தேனாம்பேட்டை, அண்ணா சாலை, மெரினா கடற்கரை, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், ஆகிய பகுதிகளில் இரவு முழுக்க மழை பெய்தது. அதிகாலை 2- 3 மணி நேரம் இங்கு விடாமல் மழை பெய்தது. ஆனாலும் அங்கு தண்ணீர் வேகமாக வடிந்துள்ளது.

விடாமல் பெய்யும் மழை; தற்போது மீண்டும் மேற்கண்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வெள்ள நீர் தடுப்பு: வெள்ளம் ஏற்படுவதை தவிர்க்க சென்னையில் வெள்ள நீர் வெளியேற்ற குழாய்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. முதல் கட்ட பணிகள் கடந்த வருடம் முடிந்த நிலையில் இரண்டாம் கட்ட பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளன. கிட்டத்தட்ட இதற்காக சென்னையில் எல்லா சாலைகளிலும் குழி தோண்டப்பட்டது. சாலை ஓரங்களில் குழி தோண்டி பணிகளை செய்து வந்தனர். இது மக்களுக்கு கடுமையான இடைஞ்சல்களை ஏற்படுத்தியது. இருந்தாலும் மழை வெள்ளத்தை தடுக்கும் என்பதால் தொடர்ந்து பணிகள் நடந்தன.
Hon'ble minister of Hindu Religious and Charitable Endowments Thiru.@PKSekarbabu inspected the water stagnation point at Selvi Nagar, Kolathur and rain water Pumping station at Selvi Nagar (1/2) pic.twitter.com/b5XVysSa0n
— Greater Chennai Corporation (@chennaicorp) November 29, 2023
உதவிய வெள்ள நீர் குழாய்கள்: பெரிய அளவில் அமைக்கப்பட்டு இருக்கும் இந்த குழிகளில் நீர் வெளியேறுவதற்கான கால்வாய் போன்ற வசதியை ஏற்படுத்தி உள்ளனர். பருவமழை நெருங்கி வருவதால் இந்த பணிகள் வேகமாக செய்யப்பட்டு வந்தன. இந்த நிலையில்தான் மழை காரணமாக சென்னையில் பல சாலைகளில் வெள்ளம் ஏற்படாமல் தண்ணீர் வேகமாக வடிந்துள்ளது. இந்த குழாய்கள் காரணமாக வெள்ள நீர் தேங்காமல் வடிந்துள்ளது.
அமைச்சர் சேகர் பாபு: நேற்று இரவு முழுக்க சென்னையில் அதி தீவிர கனமழை பெய்தது. இந்த மழைக்கு இடையே சென்னையின் முக்கிய பகுதிகளில் அமைச்சர் சேகர் பாபு தீவிரமான சோதனைகளை மேற்கொண்டார். சென்னை மாநகர மேம்பாட்டு துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு
செல்வி நகர், கொளத்தூர் ஆகிய இடங்களில் தண்ணீர் தேங்கும் இடம் மற்றும் செல்வி நகரில் உள்ள மழைநீர் பம்பிங் நிலையம் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
இரவு முழுக்க சென்னையின் சுற்றுவட்டார பகுதிகளை இவர் ஆய்வு செய்தார். கடும் மழை, வெள்ளம் என்றும் பார்க்காமல் வேட்டியை மடித்துக்கொண்டு அமைச்சர் நேரடியாக களத்திற்கு வந்து ஆய்வுகளை செய்தார். வெள்ளம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் அவருடன் உடன் இருந்தார்.
புயல் சின்னம்: கடந்த 27-11-2023ம் தேதி காலை 08.30 மணி அளவில் தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து 28-11-202 காலை 08.30 மணி அளவில் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவுகிறது. இதுதான் நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலிமை அடைந்தது.
இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 30-ஆம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும். இது அதற்கடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெற கூடும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications