Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதிமுக அணிக்கு ஏன் போகவில்லை? 2 சீட்டை ஏற்றது ஏன்? திருமா சொன்ன சீக்ரெட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவும் பாஜகவும் ஏன் தனித்தனியாகப் போட்டியிடுகிறார்கள்? அதற்குள் இருக்கும் ரகசியத் திட்டம் என்ன? அதைப் பற்றி திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.

திமுக கூட்டணியில் விசிக 3 தொகுதிகளைக் கேட்டுப் போராடி வந்தது. இறுதியில் 2 தொகுதிகளில் கையெப்பம் போட்டு விட்டு திருமாவளவன் 2 தொகுதிகளில் விசிக போட்டியிட உள்ளதாக அறிவித்தார்.

Why did not join the AIADMK alliance Thirumavalavan Explanation

கடைசிவரை 3 தொகுதி கேட்டுப் போராடியவர் எப்படி 2 சீட்டுக்குப் படிந்தார் எனப் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அவரது கட்சிக்குள்ளாகவே இந்தக் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

அவர் அதிமுக கூட்டணிக்குச் சென்றால் 5 தொகுதிகள் கிடைக்கும் என்றும் சொன்னார்கள். ஆனால், விசிக அந்தப் பேச்சுக்கே இடம் இல்லை. திமுக கூட்டணியில்தான் தொடர்வோம் என்று அந்த வதந்திகளுக்கு முற்றி புள்ளி வைத்தார் திருமா.

இந்நிலையில் இதன் பின்னால் உள்ள அரசியல் என்ன? அதிமுகவும் பாஜகவும் ஏன் தனித்துப் போட்டியிடுகின்றன. அதற்குப் பின்னால் உள்ள தேர்தல் கணக்கு என்ன? என்பது பற்றி அவரது கட்சி தொண்டர்களிடம் விரிவாக எடுத்துப் பேசி உள்ளார்.

Why did not join the AIADMK alliance Thirumavalavan Explanation

அதிமுக கூட்டணிக்குப் போகாதது குறித்தும், திமுக கொடுத்த 2 சீட்டுகளை ஏற்றுக் கொண்டது குறித்தும் திருமாவளவன், "அரசியல் களத்தில் விசிக நெருப்பாற்றில் நீந்திக் கொண்டிருக்கிறது. சிலர் 'ஏன் அவர் அங்குப் போய் ஒட்டிக்கொண்டு நிற்கிறார்?' என்கிறார்கள். சிலர், 'அவர் ஏன் 2க்கும் ஒன்றுக்கும் ஒட்டிக்கொண்டு நிற்கிறார்?' என்கிறார்கள்.

குடும்பஸ்தனாக உள்ளவர் சம்சாரியாக இருப்பவனிடம் போய் திருமணமே செய்து கொள்ளாதே என்று அறிவுரை சொல்லக் கூடாது. மர வேலையே தெரியாதவன் தச்சனுக்குப் போய் அறிவுரை சொல்லக்கூடாது.

அதை மாதிரி அரசியல் கட்சி என்றால் என்னவென்றே தெரியாதவன் எல்லாம் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அறிவுரை சொல்லிக் கொண்டு உட்கார்ந்திருக்கிறான்.'

Why did not join the AIADMK alliance Thirumavalavan Explanation

ஒரு கட்சியைத் தொடங்குவது சாதாரணமானது அல்ல. தொடர்ந்து இயங்குவது சாதாரணமானதும் அல்ல. ஒரு கட்சியை வீரியத்தோடு நடத்துவது என்பது என்னவென்று தேர்தல் களத்திற்கு வந்தால்தான் தெரியும்.

காங்கிரசுக்கு 10. விசிகவுக்கு இரண்டா? கேட்பதற்கு லாஜிக் நன்றாகத்தான் இருக்கிறது. 20 அல்லது 30 இடங்களில் போட்டியிட்ட தேசிய கட்சி இன்று 10 இடங்களில்தான் போட்டியிடுகிறது. அன்றைக்குக் காங்கிரஸ் கட்சி தொகுதியை மாநிலக் கட்சிகளுக்குப் பிரித்துக் கொடுத்தது.

ஆனால், இன்றைக்கு மாநிலக் கட்சியிடம் தேசிய கட்சியாகக் காங்கிரஸ் கேட்டுப் பெறுகிறது. நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. நீங்களே நினைத்துப் பாருங்கள்.

Why did not join the AIADMK alliance Thirumavalavan Explanation

நாம் வளர்ந்து மேலே செல்கிறோம். ஆனால், போராடிக் கொண்டிருக்கிறோம்.

இரண்டு 3 ஆகவில்லை என்பது சரிதான். ஆனால் 2 இன்றைக்கு 1 ஆகாமல் உள்ளதே என்பதை நாம் எண்ணிப் பார்க்கவேண்டும். இன்னும் சொல்லப் போனால் அந்த 2 இரண்டும் தனிச் சின்னமாகி இருக்கிறது. அதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஏன் திமுக 3 தொகுதிகளைத் தரக்கூடாது. 3 தொகுதிகளைத் தரவில்லை என்றால் திமுக கூட்டணியில் திருமாவளவன் ஏன் இருக்க வேண்டும்? இப்படி எல்லாம் கேள்வி கேட்கிறார்கள்.

Why did not join the AIADMK alliance Thirumavalavan Explanation

இதை எல்லாம் நாம் கேட்க நன்றாக இருக்கும். நமக்கு வேறு மாற்று என்ன உள்ளது. அதிமுக உள்ளது. அங்கே போனால் என்ன கிடைக்கும் 1 தொகுதி கூடுதலாகக் கிடைக்கும். நாம் ஏன் திமுகவை விட்டுப் போகிறோம். 1 தொகுதிக்காக. இது எல்லாம் லாஜிக்.

இந்த ஒரு தொகுதி கிடைக்கவில்லை என்பதற்காக அதிமுக சென்று விட்டால் எல்லாம் சரியாகிவிடுமா? இத்தனை நாள் கட்டி காப்பாற்றி வந்த மரியாதை என்ன ஆவது?

Why did not join the AIADMK alliance Thirumavalavan Explanation

பேசிய கொள்கை என்ன ஆவது? பேச்சுகள் என்ன ஆவது? எல்லாம் ஒரே ஒரு தொகுதிக்காகக் காற்றில் பறக்கவிடுவதா?

அப்படியே வெளியே போனால் 5 சீட்டுகள் கூட கிடக்கட்டும்? ஆனால், அங்கே வெற்றி பெறுவதற்கான சாத்திய கூறுகள் எத்தனை சதவீதம் உள்ளது?

Why did not join the AIADMK alliance Thirumavalavan Explanation

முதலில் பாஜகவும் அதிமுகவும் ஏன் பிரிந்து நிற்கிறார்கள். என்ன சண்டை? பாஜக கொள்கை தவறு என்று சொல்லிவிட்டு எடப்பாடி பிரிந்து வந்தாரா? ஏற்கெனவே ஒன்றாக நின்று வெற்றிபெறாதவர்கள் அவர்கள். அதிமுக, பாமக, பாஜக எல்லாம் சேர்ந்து நின்று ஆட்சிக்கு வர முடியவில்லை. தோற்றுப் போனார்கள்.

தேனியைத் தவிர 38 தொகுதிகளில் வெற்றி பெற முடியவில்லை.

கடந்த மக்களவைத் தேர்தலில் மூன்று கட்சிகளும் சேர்ந்து நின்றே வெற்றிபெறாதவர்கள் இந்த முறை தனியாக நின்று எப்படி வெற்றி பெற முடியும்? அப்புறம் ஏன் தனித்து நிற்கிறார்கள். இந்தக் கணக்கு மோடிக்கும் எடப்பாடிக்கும் தெரியாதா?

Why did not join the AIADMK alliance Thirumavalavan Explanation

இந்தக் கணக்கு தெரிந்துதான் நிற்கிறார்கள். வேண்டும் என்றேதான் நிற்கிறார்கள்.

அப்படிப் பிரிந்து நின்றால்தான் முழுமையாக பாஜகவை எதிர்க்கின்ற வாக்குகள் திமுக பக்கம் போகாமல் தடுக்க முடியும். அதுதான் அரசியல் கணக்கு. இப்போதுதான் பாஜகவுடன் அதிமுக இல்லையே?

அப்படி என்றால் ஏன் அதிமுகவுக்குப் போடக் கூடாது என்று நினைத்து சிறுபான்மை மக்கள் வாக்களிப்பார்கள். அதனால் திமுகவுக்கு வரவேண்டிய வாக்கு சிதறும். அதை உணர்ந்துதான் பாஜகவும் அதிமுகவும் தனித் தனியாகப் போட்டியிடுகிறார்கள்.

Why did not join the AIADMK alliance Thirumavalavan Explanation

இதை எல்லாம் உணர்ந்ததால்தான் நாம் அதிமுக பக்கம் போகவில்லை. சீட்டை விடக் கொள்கை முக்கியம் என்று திமுகவை ஆதரிக்கிறோம்" என்று விளக்கி உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+