நீங்களே ஏதாவது கற்பனை செய்து கொள்ள வேண்டாம்.. செய்தியாளர்களை சந்திக்காதது குறித்து விஜயபாஸ்கர்!
சென்னை: கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு குறித்து நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். இத்தனை நாட்களாக சந்திக்காதது ஏன் என்பது குறித்த கேள்விக்கும் இன்று விளக்கம் அளித்தார்.
Recommended Video
தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் 15ம் தேதி நிலவரம் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் புதன்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். அவருடன் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேசும் உடன் இருந்தார். வழக்கமாக கடந்த சில நாட்களாகவே பீலா ராஜேஷ் தான் கொரோனா பாதிப்பு குறித்தும் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் விளக்கம் அளித்து வந்தார்.

ஆனால் இன்று அந்த வழக்கம் மாறி இருந்தது. அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்தார். அவர் அருகில் பீலா ராஜேஷ் நின்று கொண்டிருந்தார். விஜய பாஸ்கர் தனது பேட்டியில், தமிழகத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு குறித்த நீண்ட விளக்கம் அளித்ததுடன், தமிழகத்தில அதிகரிக்கப்பட்ட கொரோனா பரிசோதனைகள், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவரித்தார். முதல்வரின் ஆலோசனைகள் செயல்பாடுகள் குறித்தும் பேசினார்.
தமிழகத்தில் மருந்து கையிருப்பு, சோனை செய்யும் திறன், மருத்துவ உபகரணங்கள் போதிய அளவில் இருப்பதையும் விஜயபாஸ்கர் சுட்டிக்காட்டி பேசினார். அப்போது செய்தியாளர்கள் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் 15 நாட்களாக செய்தியாளர்களை சந்திக்கவில்லையே ஏன்? என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த அவர், நான் நேற்று கூட செய்தியாளர்களை சந்தித்தேன். புள்ளி விவரங்களை முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் செயலாளர் தெரிவித்து வருகிறார். அமைச்சர் என்ற முறையில பல்வேறு மருத்துவமனைகளில் ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறேன். அதனால் தான் வரவில்லையே தவிர நீங்கள் வேறு எதுவும் கற்பனை செய்து கொள்ள வேண்டாம்" என்றார்.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications