சீக்கிரம் முடிவெடுங்க.. போன் போட்டு ஓபிஎஸ்ஸை நெருக்கிய பாஜக தலை.. வேறு வழியின்றி இரவில் நடந்த ஷாக்
சென்னை: ஓ பன்னீர்செல்வம் ராமநாதபுரத்தில் தனி சின்னத்தில் போட்டியிடுவதற்கு பின் என்ன நடந்தது என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன.
தமிழ்நாட்டில் 9 தொகுதிகளுக்கான பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியானது. இது தேசிய அளவில் பாஜகவின் மூன்றாவது வேட்பாளர் பட்டியல் ஆகும்.

தென்சென்னை - தமிழிசை
மத்திய சென்னை - வினோஜ் செல்வம்
வேலூர் - ஏ.சி.சண்முகம் (புதிய நீதிக்கட்சி)
கிருஷ்ணகிரி - நரசிம்மன்
நீலகிரி - எல்.முருகன்
கோவை - அண்ணாமலை
பெரம்பலூர் - பாரிவேந்தர் (இ.ஜ.க)_
நெல்லை - நயினார் நாகேந்திரன்
கன்னியாகுமரி - பொன் ராதாகிருஷ்ணன்
இந்த பட்டியல் வெளியான சில நிமிடங்களில் இரவோடு இரவாக ஓ பன்னீர்செல்வம் ராமநாதபுரத்தில் தனி சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவித்தார். இதற்கு பின் பல சுவாரசிய சம்பவங்கள் நடந்துள்ளன.
பாஜக ஆதரவு; அதிமுகவில் இருந்த போதும் சரி, அதிமுகவை விட்டு நீக்கப்பட்ட போதும் சரி.. ஓ பன்னீர்செல்வம் ஒரு முடிவில் மட்டும் உறுதியாக இருந்தார். அது பாஜக ஆதரவு. மோடியை பார்க்க காத்து இருப்பது.. அதிமுக ஒன்று என்றால் குரல் கொடுப்பேன்.. பாஜகவிற்கு ஒன்று என்றால் என்னையே கொடுப்பேன் என்று சொல்லும் அளவிற்கு மிக தீவிரமாக பாஜகவிற்கு ஆதரவு அளித்து வந்தார்.
அதிமுக தலைவர்களை மிக தீவிரமாக எதிர்த்து பாஜக தலைவர்களை கடுமையாக ஆதரித்து வந்தார் ஓ பன்னீர்செல்வம்.
நெருக்கடி: இப்படிப்பட்ட நிலையில்தான் லோக்சபா தேர்தலில் ஓ பன்னீர்செல்வத்திற்கு கடும் நெருக்கடி கொடுக்கப்பட்டது.
6 இடங்களை அவர் கேட்ட நிலையில் 4 இடங்களை கொடுக்க பாஜக ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. பாஜக கூட்டணிக்கு வர எடப்பாடி பழனிசாமி இதற்கு இறங்கி வராத காரணத்தால் ஓ பன்னீர்செல்வத்திற்கு சீட் கொடுக்க பாஜக ரெடியாகிவிட்டது. ஆனால் உங்களுக்கு இரட்டை இலை சின்னம் இல்லை.
அப்படி இருக்க தனியாக சின்னத்தில் நிற்க வேண்டாம். உங்கள் மகன் உள்ளிட்டோர் நிற்க வேண்டும் என்றால்.. தனியாக சின்னத்தில் நிற்க வேண்டாம். பாஜகவின் தாமரை சின்னத்திலேயே நில்லுங்கள். அதுதான் முக்கியம். அப்போதுதான் நீங்களும் வெல்ல முடியும்.. தனி சின்னத்தில் நின்றால் 1 சீட்தான் என்று பாஜகவினர் நெருக்கடி கொடுத்துள்ளனர்.
கோரிக்கை: இதையடுத்து ஓ பன்னீர்செல்வம் தனது ஆதரவு நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை செய்துள்ளார். அப்போது, நாம் இரட்டை இலைக்குத்தான் போராட வேண்டும். தாமரை சின்னத்தில் போட்டியிட்டால் நாம் பாஜக என்று ஆகிவிடும். அதிமுகவில் சேரவே முடியாது.
தனி சின்னத்தில் நிற்க வேண்டும். ஆனால தனி சின்னத்தில் நின்றால் 1 சீட்தான் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. தனி சின்னத்தில் 2 - 3 சீட்டாவது வேண்டும் என்று கேளுங்கள் என்று கூறியுள்ளனர்.
நெருக்கடி: ஆனால் இதில் ஓ பன்னீர்செல்வம் முடிவு எடுக்கும் முன்..அண்ணாமலையே பாஜக கூட்டணி இறுதியாகிவிட்டது என்று கூறி, கட்சியின் தொகுதி ஒதுக்கீடு விவரங்களை வெளியிட்டுவிட்டார். ஓ பன்னீர்செல்வம் இல்லாமல் தொகுதி பங்கீடு விவரங்களை அண்ணாமலை வெளியிட்டுவிட்டார்.
அதன்பின் நேற்று மாலைக்கு பின் பாஜக தலைவர் ஒருவர் ஓ பன்னீர்செல்வத்தை போனில் அழைத்து சீக்கிரம் முடிவு எடுங்க என்றும் நெருக்கடி கொடுத்துள்ளார். இதனால் கடைசியில் வேறு வழியின்றி தனி சின்னத்தில் நின்றால் 1 சீட்தான் என்ற ஆபருக்கு ஓகே சொல்லி இருக்கிறார் ஓ பன்னீர்செல்வம்.












Click it and Unblock the Notifications