"மிடில் மேன்".. தமிழக அரசியலில் மீண்டும் அந்த புள்ளியா? ஓபிஎஸ் "ரகசிய" ஆலோசனை! டெல்லி கிரீன் சிக்னல்
சென்னை: அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தீவிரம் அடைந்துள்ள நிலையில்தான் முக்கியமான புள்ளி ஒருவரிடம் சமாதான பேச்சுவார்த்தைக்காக ஓ பன்னீர்செல்வம் பேசியதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுகவில் வெற்றிகரமாக தர்மயுத்தம் 2 தொடங்கி ஓடிக்கொண்டு இருக்கிறது. ஒரு பக்கம் விக்ரம் படத்தின் சக்ஸஸ் மீட்டிற்கு இடையில் விக்ரமை விட விறுவிறுப்பாக.. அதிமுகவில் சூப்பர் திரைக்கதையுடன் மாறி மாறி பிரஸ் மீட்களும், கட்சி மீட்டிங்குகளும் நடந்து கொண்டு இருக்கின்றன.
அதிமுகவில் இரண்டு நாட்களில் நடந்த விஷயங்களை சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால்.. எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலாளர் ஆக விரும்புகிறார். இவருக்கு மாவட்ட செயலாளர்கள், எம்எலஏக்கள் பலரும் ஆதரவு தருகிறார்கள்.

சமாதானம்
ஆனால் ஓபிஎஸ் இதை விரும்பவில்லை. கட்சியில் இரட்டை தலைமை இருக்கட்டும் என்று அவர் விரும்புகிறார். இதை அவரும் வெளிப்படையாக சொல்லிவிட்டார். இந்த நிலையில் பொதுச்செயலாளர் ஆக விரும்பும் எடப்பாடி தனக்கு நெருக்கமான நிர்வாகிகள் மூலம் சமாதான முயற்சிகளை செய்து வருகிறார். எப்படியாவது ஓபிஎஸ்ஸை சமாதானம் செய்ய அவர் தீவிரமாக முயன்று கொண்டு இருக்கிறார். இதற்காக கடந்த 2 நாட்களாக ஒரு டஜன் மீட்டிங் ஓபிஎஸ் வீட்டில் ஏற்கனவே நடந்துவிட்டது. இதுதான் அதிமுக தர்மயுத்தம் 2.0 படத்தின் சுருக்கமான கதை!

எடப்பாடி கை ஓங்கி உள்ளது
இப்போது வரை அதிமுகவில் எடப்பாடி கைதான் ஓங்கி இருக்கிறதாம். உட்கட்சி தேர்தலில் பெரும்பாலும் எடப்பாடி ஆதரவாளர்கள்தான் வெற்றிபெற்றனர். அதோடு எம்எல்ஏக்கள் பெரும்பாலானோர் எடப்பாடி ஆதரவுதான். இது ஓபிஎஸ்ஸுக்கும் தெரியும் என்கிறார்கள். அதிமுகவில் தலைவர் பதவியை மாவட்ட செயலாளர்கள் உருவாக்க முடியாது, தொண்டர்கள் தான் தேர்வு செய்ய முடியும் என்று ஓபிஎஸ் சொன்னதன் மூலம் தனக்கு மாவட்ட செயலாளர்கள் ஆதரவும் இல்லை என்பதை அவர் மறைமுகமாக ஒப்புக்கொண்டுள்ளார் என்று கூறப்படுகிறது. இதனால் எடப்பாடி கையே கட்சியில் ஓங்கி இருக்கிறது.

செயற்குழு சிறப்பு தீர்மானம்
இந்த நிலையில் செயற்குழு, பொதுக்குழு கூடி சிறப்பு தீர்மானம் நிறைவேற்றினால் ஒருங்கிணைப்பாளர், ஒருங்கிணைப்பாளர் பதவியை நீக்க முடியும். அதிமுகவில் கடந்த டிசம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை பொதுக்குழு நீக்க முடியாது. ஆனால் அந்த சட்ட திருத்தம் இன்னும் அமலுக்கு வரவில்லை. இந்த பொதுக்குழுவில்தான் சட்ட திருத்தம் அமலுக்கு வர வேண்டும். அதற்கு முன்பாகபே இந்த பொதுக்குழுவிலேயே சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி இரட்டை தலைமையை காலி செய்ய எடப்பாடி தரப்பு பிளான் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஓபிஎஸ் பதற்றம்
ஏனென்றால் எடப்பாடிக்கு கட்சிக்குள் பெரிய ஆதரவு இருக்கிறதாம். பொதுக்குழு உறுப்பினர்கள் பலர் எடப்பாடி பக்கம் என்று கூறப்படுகிறது. அவர் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும். ஏன் ஓபிஎஸ்ஸை நீக்க முடியும். பொதுக்குழுவில் இருந்து மட்டுமல்ல.. கட்சியில் இருந்து கூட! இதனால்தான் ஓபிஎஸ் கொஞ்சம் விரக்தியோடு நடப்பது எல்லாம் கனவா.. நினைவா தெரியல.. கடவுளை வேண்டிக்கிறேன் என்று படார் என்று இறங்கி வந்து பேசி இருக்கிறார் என்கிறார்கள் அதிமுகவினர்.

பேசினார்
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தீவிரம் அடைந்துள்ள நிலையில்தான் முக்கியமான புள்ளி ஒருவரிடம் சமாதான பேச்சுவார்த்தைக்காக ஓ பன்னீர்செல்வம் பேசியதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின் ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே அந்த நிர்வாகி பாலமாக இருந்தார். இருவரையும் இணைக்க மறைமுக சமாதான பேச்சுவார்த்தைகளை நடத்தினார். ஆனால் இடையில் சைலன்ட் ஆகிவிட்டார். இப்போது அவரைத்தான் ஓபிஎஸ் அணுகி இருக்கிறாராம். நீங்க சொல்லித்தானே நான் மீண்டும் அதிமுகவில் இணைந்தேன்.

டெல்லி ஹாப்பி
நீங்க சொல்லித்தானே அவருக்கு முதல்வர் பதவி, துணை ஒருங்கிணைப்பாளர் பதவி கொடுத்தேன். இப்போது பாருங்க என்னை நீக்க பார்க்கிறார்கள் என்று ஓபிஎஸ் குமுறி இருக்கிறாராம். அதோடு 2024ல் பாஜகவை எடப்பாடி கழட்டிவிடுவார். எடப்பாடி பிளான் அதுதான். நான் மேலே இருந்தால் அப்படி நடக்காது. இதை பாஜக நிர்வாகிகளிடம் சொல்லுங்கள். 2024ல் அதிமுக சப்போர்ட் பாஜகவிற்கு தேவை என்றால் நான் அதிமுகவில் இதே பதவியில் நீடிக்க வேண்டும் என்று ஓபிஎஸ் கூறி இருக்கிறாராம்.

எடப்பாடி மறுப்பு
இதை டெல்லி தரப்பிற்கு மிடில் மேனாக இருக்கும் அவர் தெரிவித்தாக கூறப்படுகிறது. டெல்லி பாஜகவும்.. இதை ஏற்றுக்கொண்டு கிரீன் சிக்னல் கொடுத்துள்ளதாம். இந்த விஷயம் எடப்பாடி தரப்பிற்கும் சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் எடப்பாடி தரப்போ நாம் இனியும் பாஜக பேச்சை கேட்க முடியாது. பாஜகவுடன் கூட்டணி வைக்க நானே தயார்.. அதற்கு ஏன் ஓபிஎஸ் தலைமை. நானே பாஜகவுடன் நல்ல உறவில் தானே இருக்கிறேன். கூட்டணி வச்சுக்கலாம்... ஆனா உட்கட்சி விவகாரத்தில் இனியும் அவர்கள் (பாஜக) தலையிட்டால் சரியாக இருக்காது என்று கட் அண்ட் ரைட்டாக எடப்பாடி கேம்ப் கூறியதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications