Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"BOSS மோடி" தமிழகத்துக்கு வந்து.. தேர்தல் தேதி குறிச்சது யார்? ஓட்டு மிஷினில் சந்தேகம்: யார் பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்துக்கு இத்தனை முறை பிரதமர் மோடி வந்து போக என்ன காரணம்? தேர்தல் தேதியை குறித்து வைத்துவிட்டுதான் தமிழகத்துக்கு மோடி வந்து சென்றாரா? என்று தமிழக காங்கரி1 கட்சி தலைவர் கேள்வி எபப்பியிருக்கிறார்.

வழக்கமாக வடமாநிலங்களில் வலுவாக உள்ள தேசிய கட்சிதான் பாஜக.. ஆனால், கடந்த 2 வருடங்களில் நடந்த ஒரு சில தேர்தல்களில் தோல்வியை தழுவ நேரிட்டது..

வடமாநிலம்: சில இடங்களில் முட்டிமோதி "ஜஸ்ட் பாஸ்" ஆனது.. இதற்கெல்லாம் காரணம், காங்கிரசும், ஆம் ஆத்மியும் பாஜகவை முந்திக்கொண்டு மேலேழுந்து கொண்டிருக்கின்றன.. எனினும், வடமாநிலங்களில் இப்போதுவரை டாப்பில் உள்ளது பாஜகதான். எப்படியாவது 400 சீட்டுக்கு மேல் வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சி அமைக்க முனைப்பு காட்டி வருகிறது.

Why did PM Modi visit Tamilnadu so often and BJP to announce Lok Sabha election date asks Congress Selvaperunthagai

அதேசமயம், தென்மாநிலங்களிலும் எப்படியாவது பிடித்துவிட வேண்டும் என்ற முனைப்புடன் காய்நகர்த்தி வருகிறது. முக்கியமாக, தமிழகத்தில் தென்மாவட்டங்களில், காலூன்றுவதுடன், இந்த முறை வாக்கு வங்கியையும் கணிசமாக உயர்த்த வேண்டும் என்ற முயற்சியையும் மேற்கொண்டு வருகிறது.

தமிழகம்: அதுமட்டுமல்ல, வழக்கமாக திராவிட கட்சிகளின் உதவியுடன் போட்டியிடும் பாஜக, இந்த முறை தனித்து கூட்டணி அமைத்து களம் காண்கிறது.. இப்படி ஒரு ரிஸ்க்கை பாஜக எடுப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது. ஆனால், எப்போதும் இல்லாமல் பிரதமர் மோடி, தமிழகத்துக்கு நிறைய முறை வருகை தந்ததை இந்த முறை அனைவராலும் கவனிக்க முடிந்தது.

இந்த வருடம் துவங்கியதுமே, தமிழகத்துக்குதான் பிரதமர் மோடி வந்திருந்தார்.. அதற்கு பிறகும், மாநில தலைவர் அண்ணாமலையின் நடைபயணத்தை முடித்து வைப்பதற்காக வந்திருந்தார். எனினும், அடுத்தடுத்த பிரதமரின் வருகையானது, எதிர்க்கட்சிகளையும் கவனிக்க வைத்தது.

பாலகிருஷ்ணன்: நேற்றையதினம் சிபிஎம் பாலகிருஷ்ணன் ஒரு கூட்டத்தில் பேசும்போது இதுகுறித்து கேள்வி எழுப்பியிருந்தார்.. "ஒரு காலத்தில் தமிழ்நாட்டின் பக்கமே வராத மோடி, இப்போது அடிக்கடி வந்து கொண்டிருக்கிறாரே? அவர் இங்கேயே, பாய் போட்டு படுத்தாலும், பாஜவால் டெபாசிட் கூட வாங்க முடியாது" என்று கூறியிருந்தார்.

அந்த அளவுக்கு பிரதமரின் தமிழகம் வருகையானது, பலரையும் உற்றுப்பார்த்து வைத்துவரும் நிலையில்தான், லோக்சபா தேர்தலின் தேர்தல் தேதி இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.. அந்தவகையில், ஏப்ரல் 19ம் தேதி தமிழகத்தின் 39 லோக்சபா தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. ஓட்டு எண்ணிக்கை என்பது ஜுன் 4ம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

தமிழக தேர்தல்: அதாவது தேர்தலுக்கும், ஓட்டுகள் முடிவுக்கும் கிட்டத்தட்ட 45 நாட்கள் இடைவெளி உள்ளது. இந்த இடைவெளிதான் எதிர்க்கட்சிகளுக்கு சந்தேகத்தை கிளப்பி வருகிறது. அந்தவகையில், தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை ஒரு முக்கிய கேள்வியையும், பெருத்த சந்தேகத்தையும் எகுப்பியிருக்கிறார். ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில் செல்வப்பெருந்தகை கூறியதாவது:

"எந்தவித வாக்கு எந்திரங்களிலும் முறைகேடு வந்துவிடக்கூடாது. காரணம்,முதல்கட்டமாக தேர்தல் தமிழகத்துக்குதான் நடக்கிறது.. மிகப்பெரிய இடைவெளி தமிழகத்துக்குதான் உள்ளது.. அப்படியானால், அதற்காகத்தான் நரேந்திர மோடி தமிழகத்துக்கு படையெடுத்தாரா? 5, 6, முறை இங்கு வந்தது ஏன்? அப்படியானால், தேர்தல் தேதியை பாஜக குறிக்கிறதா? அல்லது தேர்தல் ஆணையம் குறிக்கிறதா?

தேர்தல் ஆணையம் என்பது தன்னிச்சையான, சுயசார்புள்ள ஒரு நிறுவனம். அப்படிப்பட்ட தேர்தல் ஆணையமே, தேர்தல் தேதியை குறிக்கிறதா? அல்லது "பாஸ்" நரேந்திர மோடி சொல்லித்தான் தேர்தல் தேதி அறிவிக்கப்படுகிறதா? என்ற கேள்வி எழுகிறது.

கன்னியாகுமரி: நேற்றுகூட கன்னியாகுமரி வந்து போயிருக்கிறார்.. முதல்கட்டமாக தமிழ்நாட்டுக்கு தேர்தல் வரப்போகும் தேதியை குறித்து தந்ததே மோடிதானா? என்பது மக்களின் ஐயமாக கிளம்பி உள்ளது

நியாயமான முறையில், கண்ணியமான முறையில், மக்கள் யாருக்கு வாக்களிக்கிறார்களே, அவர்களுக்கு சரியான முறையில் அந்த வாக்குகள் போய் சேர வேண்டும். ஆனால், வாக்கு எந்திரங்கள் குறித்த ஐயப்பாடும் எழுகிறது. தேர்தல் ஆணையர் வாக்கு எந்திரங்கள் குறித்து உறுதி தந்தாலும்கூட, அதை நடைமுறைப்படுத்த வேண்டும்..

தேர்தல் ஆணையம்: தன்னாட்சி பெற்ற நிறுவனம்தான் தேர்தல் ஆணையம்.. அப்படிப்பார்த்தால் தமிழகத்துக்கு ஒரு மாதம்தான் இருக்கிறது. அப்படியிருக்கும்போது, பிரதமர் மோடி ஏன் வேறு மாநிலங்களுக்கு போகவில்லை.. கடைசி கட்ட மாநிலங்களுக்குகூட செல்லாமல், தமிழகத்துக்கு வந்து போயிருக்கிறாரே ஏன்?

பிரச்சாரத்தை இப்பவே முடிச்சிடலாம், ஒருவேளை தேர்தல் தேதி அறிவித்துவிட்டால், நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும் என்பதால், இப்பவே தமிழ்நாட்டுக்கு அடிக்கடி வந்து சென்றாரா" என்று கேள்விகளை அடுக்கியிருக்கிறார் செல்வப்பெருந்தகை.

பரபரப்பு: தமிழகத்தில் இன்னும் எந்த கட்சியிலுமே கூட்டணிகள் முடிவாகாத நிலையில், சீட் ஒதுக்கீடுகள் குறித்த முடிவும் எடுக்கப்படாத சூழலில், எந்த கட்சியிலுமே கூட்டணி அறிவிக்கப்படாத சூழலில், தேர்தல் தேதி தமிழகத்துக்கு முதல்கட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது..

பிரச்சாரத்துக்குகூட குறைவாக நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் என்ன செய்ய போகின்றன? என்ற தமிழக அரசியலில் மிகப்பெரிய பரபரப்பும், எதிர்பார்ப்பும் தமிழ்நாட்டு அரசியலில் இன்று ஏற்பட்டுள்ளது... பொறுத்திருந்து பார்ப்போம்...!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+