கடைசி நேரத்தில்.. வர முடியாமல் தவித்த பிடிஆர்.. மாலையே உதயநிதியை சந்தித்து! அப்படி என்ன நடந்தது?
சென்னை: நேற்று தமிழ்நாடு அமைச்சரவை விரிவாக்கம் மற்றும் மாற்றத்தில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொள்ளவில்லை. அவர் கலந்து கொள்ளாததற்கு பின் முக்கியமான சில காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழ்நாடு அமைச்சரவை நேற்று மாற்றம் செய்யப்பட்டது. செந்தில் பாலாஜி, கோவி செழியன், ஆர் ராஜேந்திரன், ஆவடி நாசர் உள்ளிட்டவர்கள் புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்று உள்ளனர். அமைச்சர் பொன்முடி வனத்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அமைச்சர் மெய்யநாதன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

தங்கம் தென்னரசு நிதித்துறையுடன், சுற்றுச்சூழல் துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அமைச்சர் ராஜகண்ணப்பன் காதி மற்றும் பால்வளத்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அமைச்சர் மதிவேந்தன் ஆதிதிராவிடர் நலத்துறை ஒதுக்கீடு அமைச்சராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
இலாக்கா என்ன?: செந்தில் பாலாஜி உள்பட 4 பேர் அமைச்சர்களாக சேர்க்கப்படும் நிலையில் மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், கே ராமச்சந்திரன் ஆகியோர் தமிழக அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அமைச்சர் மஸ்தான் வசம் இருந்த சிறுபான்மையினர் துறை சா.மு.நாசருக்கு வழங்கப்பட்டு உள்ளது.
அமைச்சர் ராமச்சந்திரன் வசம் இருந்த சுற்றுலாத்துறை ஆர்.ராஜேந்திரனுக்கு வழங்கப்பட்டு உள்ளது. அமைச்சர் பொன்முடி வசம் இருந்த உயர்கல்வித்துறை முனைவர் கோவி.செழியனுக்கு வழங்கப்பட்டு உள்ளது.
இதற்கு முன் முத்துச்சாமியிடம் கூடுதல் பொறுப்பாக மது விலக்கு இருந்தது. தங்கம் தென்னரசுவிடம் மின்சாரம் இருந்தது. இரண்டும் இன்று அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் வழங்கப்பட்டு உள்ளது.
உதயநிதி ஸ்டாலின்: இது போக நேற்று விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் துணை முதல்வராக பதவி ஏற்று உள்ளார். ஒரு பக்கம் அமைச்சரவை மாற்றம் நடந்த நிலையில்.,. இன்னொரு பக்கம் உதயநிதியை துணை முதலமைச்சராக நியமிப்பதற்கான அரசின் அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட்டு உள்ளது.
துணை முதல்வர் பதவி என்பது அரசியலமைப்பு ரீதியான பதவி கிடையாது. இதனால் துணை முதல்வர் என்கிற அந்தஸ்தை உதயநிதி பெறுகிற போது அது குறித்து அறிவிப்பு வந்தால் மட்டும் போதுமானது. அதாவது அரசு அறிவிப்பு மட்டுமே போதுமானது. ஆளுநர் பதவி ஏற்பு செய்துவைக்க தேவையில்லை.

பிடிஆர்: நேற்று தமிழ்நாடு அமைச்சரவை விரிவாக்கம் மற்றும் மாற்றத்தில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொள்ளவில்லை. அவர் கலந்து கொள்ளாததற்கு பின் முக்கியமான சில காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
அவரின் தாயார் உடல்நிலை நேற்று காலையில் இருந்தே சரியில்லாமல் இருந்துள்ளது. இதனால் அவரால் காலையில் வர முடியவில்லை. அவர் மருத்துவமனையில் இருந்துள்ளார். பிற்பகல் விமானம் மூலம் வர வேண்டியது. ஆனால் அவர் வர வேண்டிய விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக வரவில்லை.
இதனால் வேறு வழியில்லாமல் ஸ்டாலின் - உதயநிதி தரப்பிடம் இதை தெரிவித்துள்ளார். அதன்பின் அவர் அமைச்சர்கள் எடுக்கும் குழு போட்டோவில் இல்லாதது சமூக வலைத்தளங்களில் சர்ச்சையானது. இதனால் மாலையே விமானம் மூலம் சென்னை வந்தவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
-
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டி! திமுக கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை சீட்? லிஸ்ட்! -
அதிமுக, பாஜக நேரடி போட்டியில்லை.. பெரம்பூரில் தவெக விஜய்க்கு சாதகம்? களமிறக்கிவிடப்பட்ட பாமக! -
எடப்பாடி பழனிச்சாமி சாமர்த்தியம்.. பாஜகவை கண்ட்ரோல் செய்துட்டாரே.. தொகுதி ஒதுக்கீட்டில் ஓங்கிய அதிமுக கை! -
DMK - DMDK: திமுக - தேமுதிக தொகுதி பங்கீடு.. 10 இடங்கள் ஒதுக்கீடு! கூட்டணியில் 2வது பெரிய கட்சியானது -
DMK Vs ADMK: தமிழக தேர்தல்களில் அதிக தொகுதிகளை வென்ற கட்சி எது தெரியுமா? சுவாரஸ்யம்! -
சிந்தாமல் சிதறாமல் அள்ள வேண்டும்.. ஸ்மார்ட்டாக காய் நகர்த்திய ஸ்டாலின்.. என்டிஏ கூட்டணிக்கு சேதாரம் -
நம்பி நம்பி.. வெம்பி வெம்பி.. அல்வா போல அள்ளிட்டுப் போன அண்ணியார்! வேதனையில் திருமா எடுத்த முடிவு! -
சர்ச்சை பேச்சு விவகாரம்.. முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு மீண்டும் சம்மன் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு! -
கமல்ஹாசன் செய்தது தியாகம்.. எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி -
0.43% பிரேமலதாவுக்கு 10+1..3% கமலுக்கு 0! இன்னொரு மதிமுக மநீம? நீங்க சினிமாவுக்கே போயிருங்க ஆண்டவரே!












Click it and Unblock the Notifications