"காட்பாதர்".. சட்டுனு வீட்டுக்கு வந்த சசிகலா.. "ஒரே" கேள்விதான்.. மலைத்து போன பண்ருட்டி ராமசந்திரன்!
சென்னை: நேற்று பண்ருட்டி ராமச்சந்திரனை சந்தித்த சசிகலா அவரிடம் முக்கியமான கோரிக்கை ஒன்றை வைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
நேற்று திடீரென சென்னையில் அதிமுக முன்னாள் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரனை சசிகலா சந்தித்தார். திமுகவில் முக்கிய உறுப்பினராக இருந்த பண்ட்ருட்டி ராமச்சந்திரன் அதன்பின் அதிமுகவில் சில காலம், பின்னர் பாமகவில் சில காலம், பின்னர் கடைசியாக தேமுதிகவில் சில வருடங்கள் என்று அரசியல் ரீதியாக வெவ்வேறு கட்சிகளில் செயலாற்றி வந்தார்.
இந்த நிலையில் நேற்று ராமசந்திரன் வீட்டிற்கு சென்ற சசிகலா அவரிடம் 40 நிமிடம் ஆலோசனை செய்தார்.

விசாரிப்பு
பண்ருட்டி ராமச்சந்திரனை சந்தித்த சசிகலா அவரிடம் உடல்நலம் பற்றி விசாரித்தார். நீண்ட நாட்களாக பண்ருட்டி ராமச்சந்திரன் தனது வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். அவர் இப்போதெல்லாம் ஆக்டிவ் அரசியலில் இல்லை. தேமுதிகவில் ஒதுக்கப்பட்டது, மற்ற கட்சிகள் பெரிதாக கண்டுகொள்ளாது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இவர் ஆக்டிவாக இல்லை. இந்த நிலையில்தான் சசிகலா அவரை நேரில் சந்தித்துள்ளார்.

பண்ருட்டி ராமச்சந்திரன்
இந்த சந்திப்பில் பல முக்கிய விஷயங்களை பேசி உள்ளனர். அதிமுக அரசியல், தமிழக அரசியல் ஆகியவைகள் குறித்து பேசி உள்ளனர். அதிமுக தலைமை உங்களிடம் தேடி வரும்.. நீங்கள் கவலை வேண்டாம். எடப்பாடி தவறு மேல் தவறு செய்கிறார். அவருக்கு நிர்வாகிகளின் உண்மையான ஆதரவு இல்லை. நீங்கள் உங்கள் தொண்டர்களை ஒன்று திரட்டுங்கள், என சொல்லியுள்ளார் பண்ருட்டி ராமசந்திரன். சசிகலாவும் தன்னுடைய நிலையை மீட்டிங்கில் பேசி உள்ளார்.

சசிகலா
பண்ருட்டி ராமசந்திரன் அதிமுகவில் இருந்த போது நடந்த சம்பவங்களையும், ஜெயலலிதா இருந்தபோது நடந்த சில சம்பவங்களை நினைவு கூர்ந்து பண்ருட்டி ராமசந்திரனை அசத்தியுள்ளார் சசிகலா. சசிகலாவின் நினைவு திறனை பார்த்து பண்ருட்டி ராமசந்திரன் மலைத்து போய் உள்ளார். இந்த நிலையில்தான் சசிகலா பண்ருட்டி ராமசந்திரனிடம் முக்கியமான கேள்வி ஒன்றை கேட்டுள்ளார். அதன்படி எனக்கு அரசியல் ஆசானாக இருந்து நீங்கள் வழிநடத்த வேண்டும்.

அரசியல்
எனக்கு அரசியல் ரீதியாக திட்டங்களை வகுத்து கொடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். அதாவது அரசியலில் தனக்கு ஆலோசனை தர யாரும் இல்லை என்பதால் காட் பாதர் ஒருவர் வேண்டும் என்பதால் பண்ருட்டி ராமசந்திரனை சசிகலா அணுகியதாக கூறப்படுகிறது. இதை கேட்டுக்கொண்ட பண்ருட்டி ராமசந்திரன், கண்டிப்பாக உங்களுக்கு உதவுகிறேன் என்று உறுதியளித்ததாக கூறப்படுகிறது. இதை பற்றி இவர்கள் நீண்ட நேரம் ஆலோசனை செய்துள்ளனர்.
Recommended Video

விஜயகாந்த்
விஜயகாந்த் தேமுதிக தொடங்கிய போது அவருக்கு பண்ருட்டி ராமசந்திரன் வழிகாட்டினார். இதனால் எங்கே விஜயகாந்த் போல சசிகலா புதிய கட்சியை தொடங்குகிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் சசிகலா அதிமுகவிற்கு வெளியே தனியாக அணி சேர்ப்பதை விரும்பவில்லை என்றே கூறப்படுகிறது. அமமுகவை எப்படி சசிகலா விரும்பவில்லையோ அப்படித்தான் அதிமுகவிற்கு எதிராக புதிய கட்சி தொடங்குவதையும் சசிகலா விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அதிமுகவை மீட்கும் ஆலோசனைகளை பண்ருட்டி ராமசந்திரன் சசிகலாவிற்கு வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது,.
-
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி! -
“அதிமுக எனும் கப்பல் மூழ்காது.. விஜய் மூழ்க விடமாட்டார்”.. ஆதவ் அர்ஜுனா பேச்சு! -
நீ வேணா சண்டைக்கு வா.. எடப்பாடியிடம் விடாமல் ஒரண்டை இழுக்கும் சி.விஜயபாஸ்கர்! ஓ.. இதுதான் ப்ளானா? -
சி.வி.சண்முகம் திண்டிவனத்தில் போட்ட பகீர் குண்டு.. ஆடிப்போன அதிமுக.. இபிஎஸ்-க்கு இப்படியொரு சிக்கலா -
சின்ன புரட்சித் தமிழர்..அதிமுகவில் என்ட்ரி கொடுக்கும் எடப்பாடி மகன்? மிதுனால் மிரளும் அதிமுக தலைகள்? -
இன்னமும் ஒத்துக்க மாட்றாங்க பாருங்களேன்! அதிமுகவை விழுங்கும் தவெக! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
“தவெகவிடம் ரூ.50 கோடி வாங்கினேனா? தைரியம் இருந்தா ரெய்டு விடுங்க” - மரகதம் குமரவேல் சவால்! -
அந்த மூவரையும் சேர்க்காதீங்க.. தடுக்கும் நிர்மல்குமார்.. மதுரை தவெகவில் நடப்பது என்ன? -
பாமக போட்ட பிச்சை.. அதிமுகவைக் காப்பாற்றிய அன்புமணி! போட்டுத் தாக்கிய சிவி சண்முகம்! உண்மை என்ன? -
பெரிய புள்ளியாச்சே அவரு! துரோகி பட்டம்.. எடப்பாடியால் வேதனையில் வேலுமணி! அண்ணாமலையுடன் ஐக்கியம்? -
இழுத்து பிடித்த எடப்பாடி பழனிசாமி.. விட்டு விலகும் நிர்வாகிகள்! மதுராந்தகத்தில் சம்பவம் செய்யும் தவெக! -
மிதுன் பழனிசாமியை அரசியலுக்கு அழைத்து வர எடப்பாடி பழனிசாமி டிராமா ஆடுகிறார்.. சிவி சண்முகம்!











Click it and Unblock the Notifications