ஓஹோ.. சசிகலா ரஜினியை சந்தித்தது இதற்குதானா?.. "மெசேஜ்" டெல்லி வரை பறக்குமோ? கிளம்பிய யூகங்கள்
சசிகலா 2 முக்கிய பிளான்களை கையில் எடுக்க போவதாக தெரிகிறது
சென்னை: சசிகலாவின் சைலண்ட் பலவித சந்தேகங்களையும், குழப்பங்களையும், கலக்கங்களையும் அதிமுக, அமமுக வட்டாரங்களில் ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.
Recommended Video
சிறையில் இருந்து வெளிவந்ததுமே, ஏராளமான கணக்குகளை போட்டு வைத்திருந்தார் சசிகலா.. ஆனால் அது அத்தனையும் நொறுங்கிவிட்டது. இதற்கு பிறகு தன்னுடைய வியூகத்தை மாற்ற தொடங்கினார்..
வழக்கமான அதிரடிகளுக்கு பதிலாக பொறுமையை கையில் எடுத்தார்.. அதிமுக மேலிடத்தை அணுகாமல், தொண்டர்களை அணுகினார்.. அமமுக நிர்வாகிகளைவிட, அதிமுக நிர்வாகிகளை தன் பக்கம் இழுப்பதில் கவனம் செலுத்தினார்..

பிளான்கள்
இவ்வளவும் சசிகலா செய்து முடிக்கவே இத்தனை மாத காலமாகிவிட்டது.. ஆனால், அடித்தள கட்டமைப்பை வலுவாக்கி கொண்டுள்ளார் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.. ஒருங்கிணைப்பாளர் தேர்தலே நடந்து முடிந்தவிட்ட நிலையில், சசிகலா இனிமேல் என்ன செய்ய போகிறார்? அவரது அடுத்த மூவ் என்னவாக இருக்க போகிறது என்ற எதிர்பார்ப்பும் பரவலாக எழுந்துள்ளது.. அந்த வகையில் நாம் சில அரசியல் நோக்கர்களிடம் பேசினோம்.. அவர்கள் சொன்ன கருத்து இதுதான்:

மாஜிக்கள்
மேலோட்டமாக பார்த்தால், அதிமுகவின் இரட்டை தலைமை வெற்றி பெற்றதுபோல தோன்றினாலும், சசிகலாவின் அரசியலே நின்று நிதானமாக ஜெயிப்பது போல தெரிகிறது.. ஒருசில மாஜி அமைச்சர்களும் சசிகலா பக்கம் சாய தூது விடும் படலத்தை ஆரம்பித்துள்ளதாகவே சொல்கிறார்கள்.. மற்றொரு பக்கம், சசிகலாவின் குறி அதிமுக மாவட்ட செயலாளர்கள் பக்கம் திரும்பி உள்ளது.. காரணம், எடப்பாடி பழனிசாமிக்கு பெருத்த நம்பிக்கையை ஏற்படுத்தி கொண்டிருப்பதே இந்த மாவட்ட செயலாளர்கள்.. இவர்களை தன் பக்கம் இழுத்து, அதன்மூலம் எடப்பாடியின் பலத்தை குறைப்பதே சசிகலாவின் திட்டமாக இருக்கலாம்.

அதிருப்திகள்
அதற்கேற்றார்போல, சில மா.செ.க்கள் அதிருப்தியில் உள்ளதாகவே தெரிகிறது.. சமீபத்தில் நடந்து முடிந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், அன்வர்ராஜா, சிவி சண்முகம், செங்கோட்டையன் என பல சீனியர்களிடையே எத்தனையோ கூச்சல்கள், பூசல்கள், காரசார விவாதங்கள் என பல்வேறு களேபரங்கள் நடந்தாலும், வழக்கம்போலவே, ஓபிஎஸ் - இபிஎஸ் இருவரும் பேசும்போது, "நாங்கள் இருவரும் ஒற்றுமையாகத் தான் இருக்கிறோம். எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை" என்று பேட்டி தந்தார்கள்.. ஆனால், நடந்த களேபரத்தினால் பெரும்பாலான மா.செ.க்களுக்கு கலக்கம்தான் அதிகமாகி உள்ளது.. இந்த அதிருப்தியில் உள்ளவர்களைதான் சசிகலா தரப்பு மூவ் செய்து வருவதாக தெரிகிறது.

ரஜினிகாந்த்
அதேபோல, போயஸ் கார்டனில் கடந்த 6ம் தேதியன்று சசிகலா ரஜினிகாந்தை சந்தித்து பேசியதன் பரபரப்பு இப்போது வரை அடங்கவில்லை.. தாதாசாகிப் பால்கே விருது பெற்றதற்கு வாழ்த்து தெரிவிப்பதற்காகவும், உடல்நலம் குறித்து விசாரிக்கவும் என்று காரணம் சொல்லப்பட்டு அது தொடர்பான அறிக்கை வெளிவந்தாலும், அரசியல் காரணங்கள் ஏதும் இதில் இருக்குமோ என்ற சந்தேகமும் இருந்து கொண்டே இருக்கிறது.

ஜெயில்
முக்கியமாக, ஒருங்கிணைப்பாளர் தேர்தல் நடத்திமுடிக்கப்பட்டுவிடவும், சசிகலாவுக்கு இது அதிர்ச்சியை தந்துள்ளது.. இந்த சூழலில்தான் ரஜினியை சந்திக்க சசிகலா முடிவு செய்தாராம்.. "ஜெயிலுக்கு போகும்போது கட்சியை ஒப்படைத்து விட்டு போனேன்.. இப்போது என்னை யார் என்று கேட்கிறாங்க.. பாஜக பக்கபலமாக இருக்கும் தைரியத்தில்தான் இப்படி செய்றாங்க போல.. கட்சியின் இந்த நிலைமையை பாஜக தலைமையிடம் சொல்ல முடியுமா? பாஜகவை எனக்கு ஆதரவு தர சொல்ல முடியுமா?" என்று ரஜினியிடம் கேட்டதாகவும், அதற்கு ரஜினி பதறிப்போய் எடுத்த எடுப்பிலேயே, சசிகலாவுக்கு மறுப்பு சொன்னதாகவும் போயஸ் கார்டன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இது வேறு தரப்பிலிருந்து இவர்கள் நடத்திய பேச்சுவார்த்தைகள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

என்னாகும்?
தன்னாலேயே பாஜகவை சமாளிக்க முடியாமல்தான் ரஜினி அரசியலில் இருந்து விலகி விட்டார்.. இப்படி இருக்கும்போது சசிகலாவுக்கு உதவுவாரா என்பது சந்தேகம்தான்.. ஆனால், ரஜினியை சசிகலா சென்று சந்திப்பையும் பாஜக கவனிக்காமல் இல்லை.. எப்படி இருந்தாலும், ஒருபக்கம் மாஜிக்களின் மனமாற்றம், மற்றொரு பக்கம் மா.செ.க்களுக்கு குறி, இன்னொரு பக்கம் பாஜக மேலிடத்துக்கு தூது என முக்கோண ரூட்டில் சசிகலாவின் அரசியல் நகர்கிறது" என்றனர்.
-
எடப்பாடி மீது அதிமுக எம்எல்ஏக்களுக்கு நம்பிக்கை இல்லை! எரியுதடி மாலானு ஏன் புலம்புறீங்க? தவெக பதிலடி -
திமுகவுடன் குதிரை பேரம் நடத்தியது யார்?.. எடப்பாடிக்கு செங்கோட்டையன் அடுக்கடுக்கான கேள்வி! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம்












Click it and Unblock the Notifications