செங்கோட்டையன் ஏன் தவெகவை தேர்ந்தெடுத்தார்? என்ன லாபம்.. உதயநிதியின் பிறந்த நாள் பரிசு மிஸ்ஸானது ஏன்?
சென்னை: முன்னாள் அமைச்சரும், அதிமுகவின் முக்கிய முகங்களில் ஒருவராக பார்க்கப்படும் செங்கோட்டையன் நேற்று விஜய்யின் தவெகவில் போய் இணைந்துவிட்டார். அவரது முடிவு அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து கேள்விகள் அடுக்கடுக்காக எழுகிறது. அதில் முக்கியமான ஒரு கேள்வியும், அதற்கான பதில்களையும் இந்த பதிவில் நாம் பார்ப்போம்.
செங்கோட்டையன் ஏன் தவெகவை தேர்ந்தெடுத்தார்?
ஒருங்கிணைந்த அதிமுக வேண்டும் என்ற குரலலுடன் செங்கோட்டையன் வெளியே வருகிறார். கட்சியில் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு என அனைத்தும் இருக்கிறது. ஆனால் தேவர் ஜெயந்தி விழாவில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் இவர்களை எல்லாம் பார்த்த பின்னர், முழுமையாக அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் செங்கோட்டையன் நீக்கப்படுகிறார்.

அதன்பிறகு அவருக்கு இருந்த ஆப்ஷன்களை பொறுத்தவரை மீண்டும் ஒன்றிணைந்த அதிமுகவை உருவாக்க வேண்டும்.. இல்லையா.. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுவிட்டார். இனி வேறு கட்சியில் போய் சேர வேண்டும்.. இல்லாவிட்டால் தனி கட்சி தொடங்க வேண்டும். இதில் ஒருங்கிணைந்த அதிமுக என்பது சாத்தியமே இல்லை என்பதே இப்போது உள்ள சூழலில் உள்ளது. ஓபிஎஸ் நீக்கப்பட்ட பின்னர், அதுதான் இப்போது வரை உள்ள நிலையாக இருக்கிறது. பலர் இதற்கான முயற்சிகளை முன்னெடுத்தாலும் முயற்சிகள் தோல்வியில் முடிந்தது.
அடுத்தாக வேறு கட்சியில் போய் சேரலாம் என்ற ஆப்ஷன் உள்ளது. அதன்படி அவர் பிரதான கட்சியான திமுகவில் போய் செங்கோட்டையன் சேர்ந்திருக்க முடியும். உதயநிதி ஸ்டாலினுக்கு பிறந்த நாள் பரிசாக செங்கோட்டையன் சேர்க்கப்படுவார்என்றெல்லாம் செய்திகள் பரவின. ஆனால் செங்கோட்டையன் அதனை விரும்பவில்லை.. ஏனெனில் செங்கோட்டையனை எடப்பாடி பழனிசாமி, திமுகவின் பி டீம் என்று விமர்சித்திருந்தார். அவரது விமர்சனத்தை ஏற்பதாக அமைந்துவிடும் என்பதால், திமுகவில் செங்கோட்டையன் சேரவில்லை..
ஏன் செங்கோட்டையன் தவெகவை தேர்வு செய்திருக்கலாம் என்றால், வளர்ந்து வரும் கட்சி.. என்ன தான் அவர்களுக்கு கட்டமைப்பு இல்லை. கட்டுக்கடங்காமல் இருக்கிறார்கள். தற்கூறித்தானமாக இருப்பதாக (திமுகவினர் விமர்சிக்கிறார்கள்) விமர்சனங்கள் இருந்தாலும், களத்தில் திமுகவிற்கு எதிராக தவெக என்ற நெரேட்டிவ் செட் செய்யலாம்.. அதனை உண்மையாக்க சில வேலைகளையும் தவெக செய்கிறது.
இளைஞர்கள் மத்தியில் தவெகவிற்கும்,விஜய்க்கும் பெரிய ஈர்ப்பு இருக்கிறது. எனவே வளர்ந்து வரும் கட்சியில் சப்போர்ட்டாக இருக்கலாம். நமக்கான மரியாதையும் இருக்கும் என்றும் செங்கோட்டையன் நினைத்திருக்கலாம்.. வயதிற்கும், அனுபவத்திற்கும் ஏற்ப ஒரு பதவி கிடைக்கும். அப்படி இருந்தால் தான் அது தனக்கு சரியான தேர்வு மற்றும் சட்டசபை தேர்தலும் நடக்க உள்ளது. நமக்கான எல்லா விஷயங்களும் நடக்கும் என்று தன்னுடைய நலத்தையும் எதிர்பார்த்து தவெகவில் போய் செங்கோட்டையன் சேர்ந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
-
விஜய் - ராகுல் சந்திப்பு நடக்காமல் போனதற்கான உண்மைக் காரணம் என்ன? அதிர்ச்சி தரும் பின்னணி -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
கமல் கோரிக்கையை நிராகரித்த விஜய்.. மேஜைக்கு வந்த 6 எச்சரிக்கை ரிப்போர்ட்.. உள்ளே இருந்தது என்ன? -
போன முறை.. உலக நாடுகளே வியக்கும் வகையில் உதயநிதி நடத்தினாரே! உலக செஸ் சாம்பியன்ஷிப்.. கைவிட்ட தவெக? -
தவெகவில் இணைந்தவர்களை கைவிட மாட்டோம்.. அதிமுகவினருக்கு மறைமுக சிக்னல் கொடுத்த புஸ்ஸி ஆனந்த்! -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடமே லஞ்சம்.. அர்ச்சகர் பூஜை செய்ய தடை.. 2 காவலாளிகள் சஸ்பெண்ட்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
சென்னை சிறுவனுக்கு பாலியல் தொல்லை! கோட் சூட் போட்டோஷூட் நடத்தினால் மட்டும் போதாது! இபிஎஸ் அட்வைஸ்












Click it and Unblock the Notifications