சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கைலாசாவில் திடீரென சிலைகளை வைத்து பூஜை! பார்க்க நித்தியானந்தா மாதிரி இருக்கே.. பதற்றத்தில் பக்தர்கள்

Google Oneindia Tamil News

சென்னை: கைலாசாவில் இன்று நடத்தப்பட்ட சிறப்பு பூஜை மற்றும் பாலபிஷேகம் ஒன்று மக்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

கைலாசாவில் இருக்கும் நித்தியானந்தா உடல்நிலை மிகவும் மோசமாகி வருவதாக பல்வேறு செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. கடந்த இரண்டு மாதமாக இணையம் முழுக்க இதுவே பேச்சாக இருக்கிறது.

சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டவர் , நான் நல்ல உடல்நிலையில் இருக்கிறேன். எனக்கு எந்த நோயும் இல்லை. உடலில் எந்த உறுப்பிலும் பாதிப்பு இல்லை. எனக்கு எந்த வைரஸ் பாதிப்பும் இல்லை என்றார்..

200 வருட பிளான்.. சூழ்ந்து நின்ற 27 டாக்டர்கள்.. தயவு செஞ்சு பணம் அனுப்பாதீங்க..நித்தியானந்தா பல்டி!200 வருட பிளான்.. சூழ்ந்து நின்ற 27 டாக்டர்கள்.. தயவு செஞ்சு பணம் அனுப்பாதீங்க..நித்தியானந்தா பல்டி!

உடல் நிலை மோசம்

உடல் நிலை மோசம்

இதெல்லாம் போக இடையில் இவர் உடல் குணமாகிவிட்டது என்றும் கூறப்பட்டது. அவர் நல்ல உடல்நிலையில் இருக்கிறார். விரைவில் மக்களிடம் பேசுவார் என்றும் தகவல்கள் வந்தன. ஆனால் நித்தியானந்தா பேஸ்புக் பக்கத்தில் பேசவில்லை. பின்னர் அவருக்கு மீண்டும் உடல்நிலை மோசமானதாக கூறப்பட்டது. அவர் சமாதி நிலையில் இருக்கிறார்.

இந்தியா வருகிறார்

இந்தியா வருகிறார்


அவருக்கு உடல்நிலை மோசமாக்கிக்கொண்டு இருக்கிறது. அவர் இந்தியாவிற்கு சிகிச்சைக்கு வந்துவிட்டார் என்றும் செய்திகள் வந்தன. கைலாசாவில் நித்தியானந்தா இருப்பதால், அவரின் உண்மையான உடல்நிலை என்ன, அவர் எங்கே இருக்கிறார் என்பதில் தொடர்ந்து குழப்பம் நிலவி வருகிறது. இவரை பற்றி வர கூடிய செய்திகள் கூட முன்னுக்கு பின் முரணாகவே உள்ளது. உண்மையில் இவரின் உடல்நிலை எப்படித்தான் இருக்கிறது என்பதில் சந்தேகம் நிலவுகிறது.

பூஜை

பூஜை

இந்த நிலையில்தான் தற்போது கைலாசாவில் நடத்தப்பட்ட வழிப்பாடு ஒன்று மக்கள் இடையின் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. அங்கு உள்ள நித்யனந்தேஸ்வர ஹிந்து கோவில் என்ற புதிய கோவிலில் இந்த வழிபாடு நடத்தப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக நித்தியானந்தாவின் அதிகாரபூர்வ பேஸ்புக் பக்கத்தில், சித்திரை நட்சித்திர உட்சவம் என்பதால் இந்த பூஜை செய்யப்பட்டுள்ளது. சித்ரா நட்சித்திரம் என்பது.. பூமியில் ஸ்ரீ பரம்மசமாரின் செயல்களை கொண்டாடும் வகையில் நடத்தப்படும் பூஜை.

உச்ச கடவுள்

உச்ச கடவுள்

இது இந்து மதத்தின் உச்ச கடவுளின் நட்சித்திரம் ஆகும். அவர்தான் எல்லோருக்கும் கடவுள் என்பதால் அவரை வணங்க வேண்டும். அதன்படியே கைலாசாவில் அவரின் சிலைக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, குறு பூஜை நடத்தப்பட்டது. அவருக்கு இந்த நல்ல நாளில் எங்களின் மரியாதை வழங்கப்பட்டது என்று போஸ்ட் செய்துள்ளனர். இதில் சிலை ஒன்றுக்கு வழிபாடு செய்யப்படும் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

 திடீர் பூஜை

திடீர் பூஜை

மக்கள் பலர் இந்த திடீர் பூஜை காரணமாக அதிர்ச்சி அடைந்துள்ளனர். அந்த சிலை என்ன அப்படியே நித்தியானந்தா போலவே இருக்கிறதே. முகம், அலங்காரம் அவரை போலவே இருக்கிறதே என்று பலர் கேள்வி எழுப்பி உள்ளனர். ஏன் அவரை கடவுளாக கொண்டாடுகிறீர்களா என்றும் சிலர் கேட்டு உள்ளனர். இன்னும் சிலரோ.. அவர் நன்றாக இருக்கிறாரா உடல்நிலை இப்போது எப்படி இருக்கிறது என்று கேட்டுள்ளனர். இது தொடர்பாக கைலாசா விளக்கம் தர வேண்டும் என்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

English summary
Why did special Pooja offer in Nithiyanantha's Kailsa all of a sudden? கைலாசாவில் இன்று நடத்தப்பட்ட சிறப்பு பூஜை மற்றும் பாலபிஷேகம் ஒன்று மக்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X