என்ன திடீர்னு டெல்லி பக்கம்? பரபரத்த ஜி.கே வாசன்! நேரா அவரையே போய் பார்த்துவிட்டாராமே! என்ன நடந்தது?
சென்னை: 10 நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடியை சந்தித்து பேசினார் ஜி.கே.வாசன் எம்.பி. இந்த சந்திப்பிற்கு பின் பல்வேறு முக்கியமான விஷயங்கள் நடந்ததாக அரசியல் வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபடுகின்றன.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் சமீபத்தில் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார். கடந்த சில நாட்களாக அரசியலில் அமைதியாக இருந்தவரின் இந்த டெல்லி பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. வாசன் மீது மோடிக்கு தனிப்பட பிரியம் உண்டு. அவரை அமைச்சராக்க வேண்டும் என்று கூட விரும்பினார்.
ஜி.கே. வாசனும் மத்திய அமைச்சராக வேண்டும் என்கிற தனது விருப்பத்தை தெரிவித்திருந்தார். அதற்கு பாஜகவில் இணைந்து விடுங்கள் என ஜி.கே.வாசனுக்கு சொல்லப்பட்டது. அந்த வாசன் எடுக்காத நிலையில் மத்திய அமைச்சராகும் வாசனின் கனவு நிறைவேறவில்லை.

பாஜக தமாகா
அதேசமயம், வாசன் கட்சியான த,மா.கா. தொண்டர்களோ, த.மா.கா.வில் வாசனை மட்டுமே மக்களுக்கு தெரிகிறது. இந்த நிலையில் தனி கட்சி நடத்துவது போகாத ஊருக்கு வழி சொல்வது போல. அதனால் கட்சியை பாஜகவில் இணைத்து விட்டு மத்திய அமைச்சரானால் அவரை நம்பி வந்த தொண்டர்களுக்கு நாலு நல்ல விசயங்களை செய்து கொடுக்க முடியும். இதனை வாசன் யோசிக்க வேண்டும் என்று ஆதங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பாஜகவில் இணைப்பு
ஆனாலும், வாசன் பாஜகவில் இணையும் முடிவை எடுக்கவில்லை. இதனால் மத்திய அமைச்சராகும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கவே இல்லை. இப்படிப்பட்ட நிலையில்தான், தொண்டர்களின் ஆதங்கம் இப்போது நீடித்தபடியே இருக்கிறது. இந்த நிலையில்தான் மோடியை வாசன் சந்தித்தார் என்கிற ஒரு செய்தி த.மா.கா. தரப்பில் பரவிக்கிடக்கிறது. இதில் பல முக்கியமான விஷயங்கள் ஆலோசனை செய்யப்பட்டு இருக்கிறதாம்.

தமாகா
இது குறித்து தமாகா விசாரித்தபோது, மத்திய கேபினெட் அமைச்சராகணும்ங்கிறது வாசனின் விருப்பம் தான். ஆனால், பாஜகவில் இணைவதை விட அதன் கூட்டணி கட்சியாக இருப்பதையே அதிகம் விரும்பினார். அதனால்தான் அவர் அமைச்சராக முடியவில்லை. இந்த நிலையில் தான் மோடியை தற்போது சந்தித்திருக்கிறார். அமைச்சர் வாய்ப்பும் குறித்தும், துறைமுகங்கள் தொடர்பான சில பிரச்சனைகளை குறித்தும் மோடியிடம் பேசிவிட்டு வந்துள்ளார்.
Recommended Video

கோரிக்கை
ஆனால் இவர் அதை பற்றி மட்டும் பேசவில்லை. தமிழ்நாட்டின் அரசியல் நிலவரங்கள் , பல்வேறு நலத்திட்டங்கள் பற்றியும், ஜிஎஸ்டி பற்றியும் பேசி இருக்கிறார். அதேபோல் அடுத்த லோக்சபா தேர்தல் பற்றியும், தமிழ்நாட்டில் காலியாகும் ராஜ்ய சபா எம்பி பதவிகள் பற்றியும், இப்போதே சில விஷயங்களை இவர்கள் ஆலோசனை செய்துள்ளனர். அரசியலில் அவர் இரண்டாம் இன்னிங்ஸ் ஆட தொடங்கிவிட்டார், என்கிறார்கள் த.மா.கா. நிர்வாகிகள்.
-
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications