சரியில்லையே.. சாட்டையை சுழற்றிய முதல்வர் ஸ்டாலின்.. ஒரே நாளில் சிக்கிய 4 பேர்.. அப்படி என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நேற்று தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் 4 முக்கியமான அதிகாரிகளை திடீரென டிரான்ஸ்பர் செய்து உத்தரவு பிறப்பித்தார். அவரின் இந்த செயல் தமிழ்நாடு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கடந்த சில மாதங்களாக பிற மாவட்டங்களுக்கு சென்று ஆய்வு பணிகளை செய்து வருகிறார். அதிகாரிகள் செயல்பாடு, அவர்கள் பணி செய்யும் விதம், மாவட்ட பிரச்சனைகள் எப்படி இருக்கிறது என்று ஆய்வு செய்து வருகிறார்.

 Why did Tamil Nadu CM Stalin transfer IAS, IPS officers after his inspection in Kallakurichi and Villupuram?

கடந்த சில மாதங்களாகவே இந்த ஆய்வு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. சில மாதங்களுக்கு முன் முதல்வர் ஸ்டாலின் வேலூர் மண்டலத்தில் அரசு முறை பயணம் மேற்கொண்டு கள ஆய்வு நடத்தினார்.

அந்த கள ஆய்விற்கு பின் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு புதிய ஆட்சியராக வளர்மதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சமூக பாதுகாப்புத்துறை இயக்குநராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி வளர்மதி ராணிப்பேட்டை ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கெனவே ராணிப்பேட்டை ஆட்சியராக இருந்த பாஸ்கர பாண்டியன் திருப்பத்தூர் ஆட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். திருப்பத்தூர் ஆட்சியராக பணியாற்றி வந்த அமர் குஷ்வாஹா சமூக பாதுகாப்புத்துறை இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.

இந்த உத்தரவு மூலம் ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர்களின் செயல்பாடுகள் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு திருப்தியளிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.

மாற்றம்: இந்த நிலையில்தான் நேற்று தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் 4 முக்கியமான அதிகாரிகளை திடீரென டிரான்ஸ்பர் செய்து உத்தரவு பிறப்பித்தார். அவரின் இந்த செயல் தமிழ்நாடு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 Why did Tamil Nadu CM Stalin transfer IAS, IPS officers after his inspection in Kallakurichi and Villupuram?

இரண்டு நாட்களுக்கு முன் முதல்வர் ஸ்டாலின் விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் கள ஆய்வு நடத்தினார்.

ஆய்வின் முடிவில் 4 அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சரஸ்வதி பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை திட்ட இயக்குநராக எஸ்.செல்வராணி நியமனம் செய்யப்பட்டு உள்ளார். கடலூர் மாவட்டவருவாய் அலுவலராக இருந்த பூவராகவன் மாற்றப்பட்டு உள்ளார். அவருக்குப் பதிலாக ம.ராஜசேகரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அதேபோல் விழுப்புரம் நகர காவல் துணைக் கண்காணிப்பாளர் பார்த்திபனும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் நேரடியாக களத்தில் ஆய்வு பணிகளை செய்து வருகிறார். அப்போது ஒவ்வொரு துறையும் எப்படி செயல்படுகிறது என்று ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.

அதிகாரிகளிடம் அவர்களின் துறை நிலவரங்களை கேட்டு வருகிறார். அதேபோல் பொதுமக்களிடமும் அவர்களின் துறை நிலவரங்களை கேட்டு தெரிந்து கொண்டு வருகிறார்.

பொதுமக்கள் வைக்கும் குற்றச்சாட்டுகளை நேரடியாக கேட்டு அதன்படி முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுத்து வருகிறார். அதன் ஒரு கட்டமாகவே ஆய்வின் முடிவில் 4 அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் விரைவில் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமைச்சரவை மாற்றத்திற்கு பின் பல அதிகாரிகள் மாற்றம் செய்யப்படவும் வாய்ப்புகள் உள்ளதாக தமிழ்நாடு அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+