நாளைக்கு எந்த சேனலிலும், தமிழ்நாடு எக்ஸிட் போல் ரிசல்ட் வராது! ஏன் தெரியுமா?
சென்னை: பொதுவாக சட்டசபை தேர்தல் அல்லது நாடாளுமன்ற தேர்தல் முடிந்தால் அதன்பிறகு 30 நிமிடம் கழித்து தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு(Exit Poll) முடிவுகள் வெளியாகும். ஆனால் நாளை மாலை 6 மணிக்கு தமிழக சட்டசபை தேர்தல் முடிவடைந்த பிறகு எந்த சேனலிலும் தமிழ்நாடு எக்ஸிட் போல் ரிசல்ட் முடிவுகள் வெளிவராது. அது ஏன்? தமிழக சட்டசபை தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் எப்போது வெளியாகும்? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் நாளை நடைபெற உள்ளது. மாநிலத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நாளை தேர்தல் நடைபெற உள்ளது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்காளர்கள் வாக்களிக்கலாம்.

பொதுவாக ஒரு மாநிலத்தில் சட்டசபை தேர்தல் அல்லது நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்தால் அதன்பிறகு 'எக்ஸிட் போல்' (Exit Poll) எனும் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளிவரும். இந்த கருத்து கணிப்பு முடிவுகள் என்பது தேர்தலில் வாக்களித்துவிட்டு வெளியே வந்த மக்களிடம் நேரடியாக கேட்கப்பட்டவையாக இருக்கும்.
முன்னணி செய்தி நிறுவனங்கள் உள்பட தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகளை வெளியிட்டு வரும் நிறுவனங்கள், அமைப்புகள் வாக்காளர்களிடம் கருத்து கேட்டு யார் ஆட்சியை பிடிக்கிறார்கள்? என்பதை தெரிவிப்பார்கள். இதனால் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் என்பது எப்போதுமே மக்களிடம் ஆர்வத்தை தூண்டும்.
அந்த வகையில் நாளை தமிழக சட்டசபை தேர்தல் முடிவடைந்தாலும் கூட மாலை 6.30 மணிக்கு எக்ஸிட் போல் முடிவுகள் வருமா? என்று நீங்கள் கேட்டால் அதற்கான பதில் இல்லை என்பது தான். ஏனென்றால் தற்போது புதுச்சேரி, கேரளா, அசாம், தமிழ்நாடு, மேற்கு வங்கம் என 4 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்துக்கு சேர்த்து தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த 5 மாநில தேர்தல்கள் முழுவதுமாக முடிவடைந்தால் மட்டுமே 'எக்ஸிட் போல்' எனும் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை வெளியிட முடியும்.
தற்போது புதுச்சேரி, கேரளா, அசாமில் முழுமையாக தேர்தல் முடிவடைந்துவிட்டது. அதேபோல் தமிழகத்திலும் நாளை சட்டசபை தேர்தல் முடிவடைந்துவிடும். அதேவேளையில் 294 சட்டசபை தொகுதிகளை கொண்டுள்ள மேற்கு வங்கத்தில் நாளை முதற்கட்டமாக 152 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடத்தி முடிக்கப்பட உள்ளது. அதன்பிறகு மேற்கு வங்கத்தில் மீதமுள்ள 142 சட்டசபை தொகுதிகளுக்கு ஏப்ரல் 29 ம் தேதி 2வது கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த வேளையில் 'எக்ஸிட் போல்' கருத்து கணிப்புகளை வெளியிட்டால் அது மேற்கு வங்கத்தின் 2வது கட்ட தேர்தலில் வாக்களிக்க உள்ள மக்களின் மனநிலையை மாற்றலாம். இதனால் தான் நாளை தமிழக சட்டசபை தேர்தல் முடிவடைந்தாலும் எக்ஸிட் போல் முடிவுகள் வராது. மாறாக ஏப்ரல் 29 ம் தேதி மேற்கு வங்கத்தில் 2ம் கட்ட சட்டசபை தேர்தல் முடிவடைந்த பிறகு தான் புதுச்சேரி யூனியன் பிரதேசம், கேரளா, தமிழ்நாடு, அசாம், மேற்கு வங்கம் மாநிலங்களுக்கான 'எக்ஸிட் போல்' தேர்தல் முடிவுகளை வெளியிட முடியும். அந்த வகையில் பார்த்தால் ஏப்ரல் 29 ம் தேதி மேற்கு வங்கத்தில் 2வது கட்ட சட்டசபை தேர்தல் முடிவடைந்த பிறகு அன்றைய தினம் மாலை 6.30 மணிக்கு 'எக்ஸிட் போல்' முடிவுகள் வெளியாகும்.
இதனால் தான் புதுச்சேரி, கேரளா, அசாமில் கடந்த 9 ம் தேதியே சட்டசபை தேர்தல் முடிவடைந்திருந்தாலும் கூட தற்போது வரை 'எக்ஸிட் போல்' முடிவுகள் வெளியாகாமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.













Click it and Unblock the Notifications