கேன்சர் கூட வரும்! ரத்தத்திலும் கலக்கும்! தமிழக அரசு உணவு பார்சலில் சில்வர் பேப்பரை தடை செய்தது ஏன்?
சென்னை: தமிழ்நாடு முழுக்க பார்சல் கட்ட பிளாஸ்டிக் கவர், சில்வர் பேப்பர்களை பயன்படுத்த உணவு பாதுகாப்புத்துறை தடை விதித்து உள்ளது. ஹோட்டல்கள் மற்றும் டீ கடைகளில் இனி பிளாஸ்டிக் கவர், சில்வர் பேப்பர்களை பயன்படுத்த கூடாது என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் உணவு பொருட்கள் பார்சல் கட்ட பொதுவாக பேப்பர் வைத்து உள்ளே இழை வைக்கும் பழக்கம் இருந்தது. இழை செலவு அதிகம் என்பதால் பலரும் இப்போது சில்வர் பேப்பர்களை பயன்படுத்த தொடங்கி விட்டனர். சில்வர் பேப்பர்களை பயன்படுத்தினால் பேப்பர் செலவும் இருக்காது. நேரடியாக சில்வர் பேப்பர்களை வைத்தே கட்டிவிடலாம்.

இது போக மசாலா, சாம்பார் ஆகியவை கட்ட பிளாஸ்டிக் கவர் பயன்படுத்தப்படுகிறது. சூடான பொருட்கள் கூட பிளாஸ்டிக் கவரை வைத்தே கட்டப்படுகின்றன. இப்படிப்பட்ட நிலையில்தான் தமிழ்நாடு முழுக்க பார்சல் கட்ட பிளாஸ்டிக் கவர், சில்வர் பேப்பர்களை பயன்படுத்த உணவு பாதுகாப்புத்துறை தடை விதித்து உள்ளது.
எக்காரணம் கொண்டு ஹோட்டல்கள் மற்றும் டீ கடைகளில் இனி பிளாஸ்டிக் கவர், சில்வர் பேப்பர்களை பயன்படுத்த கூடாது என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. மீறி செய்தால் அந்த கடைகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
உணவுப் பொட்டலங்களுக்கு பிளாஸ்டிக் மற்றும் சில்வர் பேப்பர்களை ஏன் பயன்படுத்தக்கூடாது என்பதற்கான 15 எளிய காரணங்கள் இங்கே கொடுக்கப்பட்ட உள்ளன
1. உடல்நலக் கேடு விளைவிக்கும்: பிளாஸ்டிக்கில் இருந்து வரும் ரசாயனங்கள் சூடான உணவுடன் கலந்து ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிக்கும். சிலருக்கு கேன்சர் கூட இதன் மூலம் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. முக்கியமான உணவு பாய்சன் தொடங்கி இ கோலை பாதிப்புகள் போன்ற பிரச்சனைகள் கூட ஏற்படலாம்.
2. சுற்றுச்சூழல் கேடு: பிளாஸ்டிக் மக்குவதற்கு நூற்றுக்கணக்கான ஆண்டுகள் ஆகும், சுற்றுச்சூழலை மாசுபடுத்துகிறது. இதனால் இதை பயன்படுத்துவதை தடுக்க வேண்டும்.
3. மக்கும் தன்மை கொண்டது இல்லை: வெள்ளி பேப்பர்கள் மற்றும் பெரும்பாலான பிளாஸ்டிக்குகள் இயற்கையாக மக்கும் தன்மை கொண்டது கிடையாது.
4. வனவிலங்குகளுக்கு தீங்கு: விலங்குகள் தூக்கி எறியப்பட்ட பிளாஸ்டிக், சில்வர் பேப்பர்களை உண்டால் பாதிப்பு ஏற்படும். அவற்றின் உயிருக்கு கூட பாதிப்பு ஏற்படும்.
5. நச்சுக்களை வெளியிடும்: பிளாஸ்டிக்கை எரிப்பதால் காற்றில் நச்சுப் புகை வெளியேறுகிறது. அதேபோல் சூடான பொருட்களை இதில் கட்டினால் பிளாஸ்டிக் உருகி உணவில் கலக்கும்.
6. வெள்ளி உறைகள் எண்ணெய்யை உறிஞ்சி, உணவை அசுத்தமாக்கும் .அதேபோல் இப்படி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக்குகள் வடிகால்களை அடைத்து வெள்ளத்தை ஏற்படுத்துகின்றன.
ஏற்கனவே மனித ரத்தத்தில் சிறிய அளவிலான பிளாஸ்டிக் துகள்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. சர்வதேச அளவில் மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள் இடையே இந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிளாஸ்டிக்கின் சிறிய துகள்களை Microplastics என்று அழைப்பார்கள். உலகம் முழுக்க எல்லா இடத்திலும் Microplastics நீக்கமற நிறைந்து உள்ளது. எல்லா இடத்திலும் என்றால் எவரெஸ்டில் கூட பிளாஸ்டிக் துகள்கள் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கின்றன.
கடலுக்கு அடியில் பல ஆயிரம் அடியிலும் கூட பிளாஸ்டிக் துகள்கள் இருந்துள்ளன. பிறந்து சில மாதங்களே ஆன குழந்தையின் மலத்தில் கூட பிளாஸ்டிக் துகள்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. இப்போது அதில் புதிய வரவாக இணைந்து இருப்பதுதான் மனித ரத்தம். ஆம் மனித ரத்தத்தில் செல்களோடு, செல்களாக வாடகையே கொடுக்காமல் பிளாஸ்டிக் துகள்கள் உள்வாடகைக்கு இருந்ததை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதன்படி மொத்தம் 22 பேரின் ரத்தத்தை சோதனை செய்தனர். அதில் 17 பேரின் ரத்தத்தில் பிளாஸ்டிக் துகள்கள் இருந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
அதாவது மொத்தம் 77 சதவிகிதம் பேரின் உடலில் இந்த ஆராய்ச்சியில் பிளாஸ்டிக் துகள்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நெதர்லாந்தில் இருக்கும் Vrije Universiteit Amsterdamல் இருக்கும் ஆராய்ச்சியாளர்கள் மூலம் செய்யப்பட்ட ஆய்வில் இந்த கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக Environment International இதழில் ஆய்வு கட்டுரையும் வெளியிடப்பட்டுள்ளது. ரத்தத்தில் பாலிமர் பொருட்கள் எனப்படும் பிளாஸ்டிக் துகள்கள் இருந்துள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் உலகம் முழுக்க பிளாஸ்டிக் பொருட்களை உணவு சம்பந்தப்பட்ட விஷயங்களில் பயன்படுத்த கூடாது என்று கோரிக்கைகள் வைக்கப்படுகின்றன. இதையடுத்தே தற்போது தமிழ்நாடு முழுக்க பார்சல் கட்ட பிளாஸ்டிக் கவர், சில்வர் பேப்பர்களை பயன்படுத்த உணவு பாதுகாப்புத்துறை தடை விதித்து உள்ளது. ஹோட்டல்கள் மற்றும் டீ கடைகளில் இனி பிளாஸ்டிக் கவர், சில்வர் பேப்பர்களை பயன்படுத்த கூடாது என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications