தொடர்ந்து ஆதரவு கொடுத்தீங்க! கலங்கிய செந்தில் பாலாஜி! திடீர் ராஜினாமா ஏன்? நாளை நடக்க போகும் சம்பவம்
சென்னை: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஜாமீன் மனுவை நாளை விசாரிக்க உள்ளார். கடந்த விசாரணையின் போது, பி.எம்.எல்.ஏ-வின் கீழ் 230 நாட்கள் சிறையில் இருந்தும் அவர் எப்படி அமைச்சராக நீடிக்க முடியும் என்று நீதிபதி கேட்டிருந்தார்.
சமீபத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 19வது முறையாக நீட்டித்து சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத்துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தனர். 3000 பக்கங்களுடன் கூடிய இந்த குற்றப்பத்திரிகை நகல் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டது.
இதனிடையே, செந்தில்பாலஜியின் நீதிமன்ற காவல் நாளையுடன் முடிவடைகிறது. சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி இன்று விடுமுறை என்பதால் சென்னை மாவட்ட 3வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி D.V.ஆனந்த் வழக்கை விசாரித்தார்.
பின்னர் புழல் சிறையிலிருந்து காணொலி காட்சி மூலம் நீதிபதி D.V. ஆனந்த் முன்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை பிப்ரவரி 7ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதன்மூலம் 18வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு வாரம் முன் விசாரணை; அதன்பின் இரண்டு வாரம் முன் இதில் விசாரணை நடந்தது. அப்போது 19வது முறையாக அவரின் காவல் நீட்டிக்கப்பட்டது. கடந்த விசாரணையின் போது, பி.எம்.எல்.ஏ-வின் கீழ் 230 நாட்கள் சிறையில் இருந்தும் அவர் எப்படி அமைச்சராக நீடிக்க முடியும் என்று நீதிபதி கேட்டிருந்தார்.
48 மணி நேரத்திற்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டால், அரசின் கடைசி தர ஊழியர் கூட சேவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதாகக் கருதப்படும்போது, இவ்வளவு காலம் சிறைவாசத்திற்குப் பிறகும் ஒருவரை எப்படி அமைச்சரவையில் தொடர அனுமதிக்க முடியும் என்று நீதிபதி ஆச்சரியப்பட்டார்.
"அரசு ஊழியர் விஷயத்தில் காட்டப்படும் கடுமை இப்படி இருக்கும்போது, சிறைக்குள் இருக்கும் போது, இலாகா இல்லாமல் அமைச்சராகத் தொடரும் ஒருவர் இங்கே இருக்கிறார். என்ன வேடிக்கை இது. நீங்கள் பொதுமக்களுக்கு என்ன வகையான செய்தியை வழங்குகிறீர்கள்? என்று அமைச்சர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.ஆர்யம சுந்தரத்திடம் நீதிபதி கேட்டார். கடந்த வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார்.
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை நாளை மீண்டும் விசாரிக்க உள்ளார்.
ராஜினாமா ஏன்?: இலாகா இல்லா அமைச்சராக சிறையில் இருந்து வந்த அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். கடந்த ஜூன் மாதம் 14 முதல் தற்போது வரை சிறைவாசம் தொடர்வதால் செந்தில் பாலாஜி ராஜினாமா முடிவை எடுத்துள்ளார்.
தனிப்பட்ட காரணங்களுக்காக பதவியில் இருந்து விலகுகிறேன்; உங்களது தலைமையின் கீழ் மக்களுக்கு பணியாற்ற வாய்ப்பு அளித்ததற்கு நன்றி. நீதிக்காக போராட எனக்கு தொடர்ந்து ஆதரவு அளித்த உங்களுக்கு நன்றி. நான் நிரபராதி உண்மையை வெளிக் கொண்டு வர சட்டரீதியாக தொடர்ந்து போராடுவேன்; நீதித்துறை மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது விரைவில் நீதி வெல்லும் என்று செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
இவருக்கு ஜாமீன் கிடைக்காமல் போக.. இவர் அமைச்சராக நீடித்தது ஒரு காரணமாக இருந்தது. தற்போது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த நிலையில் அவருக்கு ஜாமீன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications