கருப்பு ஆடு இருக்கு.. கண்கள் சிவந்த விஜய்.. நிர்வாகிகளுக்கு முன் இப்படி சொல்லிட்டாரே.. என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் சிலர் மீது ஆக்சன் எடுக்கும் திட்டத்தில் நடிகர் விஜய் இருக்கிறாராம். கட்சியில் இருக்கும் சில கருப்பு ஆடுகளை தட்டி தூக்கும் திட்டத்தில் நடிகர் விஜய் உள்ளாராம்.

தமிழக வெற்றிக்கழகத்தின் செயற்குழுவை இரண்டு நாட்களுக்கு முன் கூட்டியிருந்தார் அக்கட்சியின் தலைவர் விஜய். இந்த கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்களும் கலந்து கொண்டனர். 26 தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. சாதிவாரியாகக் கணக்கெடுப்பு நடத்தி, சமூக நீதியை நிலைநாட்ட எந்த நடவடிக்கையும் எடுக்காமல், சமூக நீதியின் பாதையில் பயணிக்கிறோம் என்று திமுக அரசு கூறி வருவதை மக்கள் நம்ப மாட்டார்கள். ஒன்றிய அரசின் மீது பழிபோட்டுவிட்டுத் தப்பித்துக்கொள்ள நினைக்கும் முயற்சி பலிக்காது. உண்மையான சமூக நீதியை நிலை நாட்டிட, தமிழக அரசு முதலில் உடனடியாகச் சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு அச்சாரமிடும் ஆய்வைக் காலதாமதமின்றி உடனே நடத்த வேண்டும் என்று இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

seeman naam tamilar katchi vijay


தீர்மானங்கள்: நெய்வேலி பழுப்பு நிலக்கரிச் சுரங்கத்தில் பணியமர்த்தப்பட்டுள்ள ஒப்பந்தத் தொழிலாளர்களுக்குப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். என்.எல்.சி.க்காக நிலம் வழங்கிய நில உரிமையாளர்களின் வாரிசுகளுக்கு. இதுவரை யாருக்கெல்லாம் பணி வாய்ப்பு வழங்கவில்லையோ அவர்களுக்கும் நிரந்தரப் பணிவாய்ப்பு வழங்கப்பட வேண்டும். விவசாயிகளின் ஒப்புதலின்றி நிலக்கரிச் சுரங்கம் அமைப்பதற்கு ஓர் அங்குலம் நிலத்தைக் கூடக் கையகப்படுத்தக் கூடாது என்று இச்செயற்குழு. ஒன்றிய அரசை வலியுறுத்துகிறது.

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் 13 நீர்நிலைகள் உள்ளன. இவற்றை அழிப்பது சென்னையை நிரந்தரமாக வெள்ளக் காடாக்கும் சீர்கேட்டுக்கு வழிவகுக்கும். சென்னையைப் பாதுகாக்கவும், விவசாயிகளின் மனநிலையை உணர்ந்து ஒன்றிய, மாநில அரசுகள், பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் முடிவைத் திரும்பப் பெற வேண்டும். விவசாயம் மற்றும் விவசாய நிலங்களின் பாதுகாப்பை, ஒரு கொள்கையாகவே முன்னெடுக்கும் தமிழக வெற்றிக் கழகம், தன் மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் சட்டரீதியாகப் போராடவும் தயங்காது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறது, என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

விஜய் வார்னிங்: இந்த கூட்டத்தில் சில நிர்வாகிகளை விஜய் கண்டித்து உள்ளாராம். அதன்படி கட்சியில் கருப்பு ஆடுகள் உள்ளன. சில கட்சி முடிவுகளை சிலர் அடிக்கடி லீக் செய்கின்றனர். முக்கியமாக நமக்கு எதிராக இருக்கும் கட்சியில் முன்னாள் நிர்வாகிகளாக அவர்கள் இருந்துள்ளனர். அவர்களிடம் தகவலை லீக் செய்கின்றனர்.

தீர்மான விவகாரம் கூட கசிந்துவிடுகிறது. இதை அனுமதிக்க முடியாது. கட்சியில் உள்ள சில நிர்வாகிகளை மாற்ற வேண்டும். அனுபவம் வாய்ந்த மாவட்ட செயலாளர்கள் தேவை. அனுபவம் வாய்ந்தவர்கள் இருந்தால்தான் கட்சி நிர்வாக பணிகளை செய்ய முடியும். தேர்தலுக்கும் தயாராக முடியும் என்று விஜய் கண்டிப்புடன் பேசியதாக கூறப்படுகிறது. முதல் மாநில மாநாட்டில் மா.செ.க்களுக்கு பேசும் வாய்ப்புகள் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனால், நிறைய விசயங்களை பதிவு செய்ய ஹோம் வொர்க் பண்ணிக்கொண்டு வந்திருந்தனர். ஆனால், நேரம் ஒத்துழைக்காததால் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்த சூழலில்தான் செயற்குழு கூட்டம் கூட்டப்பட்டதும் அதில் மா.செ.க்கள் கலந்துகொள்ள அழைக்கப்பட்டதாலும் தங்களுக்கு பேச வாய்ப்புக்கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்புகளுடன் வந்திருந்தனர். ஆனால், இந்த முறையும் வாய்ப்பு கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்தனர். விரைவில் தவெக மாவட்ட நிர்வாகிகள்.. கட்சி நிர்வாகிகள் மாற்றப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+