Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கல்வியில் சிறந்த தமிழ்நாடு அரசு நிகழ்வில் ஏன் இத்தனை சினிமா ஸ்டார்ஸ்? எழும் விமர்சனம்! என்ன காரணம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நேற்று சென்னையில் நடைபெற்ற கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்வு பெரிய அளவில் கவனம் பெற்றது. இந்த நிகழ்ச்சி மக்கள் இடையே பெரிய அளவில் பாராட்டுகளை பெற்று வருகிறது. ஆனால் அதே சமயம் இந்த நிகழ்ச்சி முழுக்க சினிமா திரைத்துறையினருக்கு முக்கியத்துவம் கொடுப்பது, திரை பிரபலங்கள் பலர் அழைக்கப்பட்டது விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

நேற்று கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, துணை முதல்வர் உதயநிதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் தமிழக அரசின் திட்டங்கள் மூலம் தாங்கள் எந்தளவுக்குப் பயன் பெற்றுள்ளனர் என்பது குறித்து விளக்கிப் பேசினர்.

dmk

புதுமைப்பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் மூலம் பயன் அடைந்த மாணவ, மாணவியர் நேற்று மேடையில் தங்கள் அனுபவங்களை, திட்டத்தால் அடைந்த பயன்களை பேசினர்.

இந்த நிகழ்வில் மாணவ, மாணவியர் பலர் உணர்வுபூர்வமான கருத்துக்களை பகிர்ந்தனர். வாழ்க்கையில் நிலவும் கடும் கஷ்டங்களுக்கும், வறுமைக்கும் இடையில் அரசின் திட்டங்கள் தங்களுக்கு எப்படி உதவியது என்று நெகிழ்ச்சியாக தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

dmk

கல்வியில் சிறந்த தமிழ்நாடு

நேற்று நடந்த இந்த நிகழ்வில் நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குனர்கள் வெற்றிமாறன், தியாகராஜா குமாரராஜா, தமிழரசன் பச்சமுத்து, TJ ஞானவேல் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் அவர்கள் பேசிய விஷயங்கள் பெரிய அளவில் கவனம் பெற்றது. உதாரணமாக புதிய கல்வி கொள்கைக்கு எதிராக வெற்றிமாறன், தியாகராஜா குமாரராஜா பேசியது, நான் 2 டிகிரி வச்சு இருக்கேன்.. எனக்கு சினிமா போனா கூட வேலை கிடைக்கும் என்று என்று சிவகார்த்திகேயன் பேசியது போன்ற விஷயங்கள் கவனம் பெற்றது.

இப்படி இந்த நிகழ்ச்சி மக்கள் இடையே பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால் அதே சமயம் இந்த நிகழ்ச்சி முழுக்க சினிமா திரைத்துறையினருக்கு முக்கியத்துவம் கொடுப்பது, திரை பிரபலங்கள் பலர் அழைக்கப்பட்டது விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

dmk

விமர்சனங்கள் என்னென்ன?

1. அரசு நடத்தும் கல்வி சார்ந்த விழாவில் சினிமா பிரபலங்களுக்கு ஏன் முக்கியத்துவம் தருகிறார்கள்? என்ற கேள்வி வைக்கப்படுகிறது.

2. பல எழுத்தாளர்கள் உள்ளனர், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளனர், தமிழ்நாட்டிலேயே சாதித்த பல முகங்கள் உள்ளனர். அவர்களை பேச அழைத்து இருக்கலாம்.

3. இளைஞர்களே பலர் சாதனை படைத்து இதுபோன்ற மேடைகளில் பேச வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார்கள், அவர்களை அழைத்து இருக்கலாமே என்று விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.

4. இன்னும் ஒரு சாரர்..கல்லூரிகளில்தான் இன்ஸ்டாகிராம் பிரபலங்களை அழைக்கிறார்கள். அரசுமா இப்படி சினிமா பிரபலங்களை பயன்படுத்த வேண்டும் என்றும் விமர்சனங்கள் வைக்கிறார்கள்.

5. இன்னும் சில தவெக ஆதரவு தரப்பினர்.. விஜய்க்கு இருக்கும் சினிமா பிரபலத்தை சமாளிக்க சினிமா பிரபலங்களை வைத்தே அரசு தனக்கு விளம்பரம் செய்து கொள்கிறது என்றும் விமர்சனங்களை வைக்கின்றனர்.

dmk

திமுக தரப்பினரின் விளக்கம்

1. இதற்கு திமுக தரப்பினர் பலரும்.. அரசு திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வது முக்கியம். அதற்கு சினிமா துறையினர் போன்ற பிரபல முகங்கள் தேவை.

2. இளைஞர்களிடம் அரசு திட்டங்கள் எளிதாக செல்ல.. அவர்கள் அதிகம் ரசிக்கும் நபர்கள் அதை பற்றி பேச வேண்டும். அதற்குத்தான் சினிமா பிரபலங்கள் அழைக்கப்படுகிறார்கள்.

3. அரசு திட்டங்களை சினிமா பிரபலங்கள் விளம்பரம் மூலம் சொல்லும் வழக்கம்.. பல வருடங்களாக எல்லாம் அரசும் செய்யும் யுக்திதான் இது. முன்பில் இருந்தே இருக்கிறது. அதன் ஒரு பகுதிதான் இது என்றும் கூறுகிறார்கள்.

4. நேற்று சினிமா பிரபலங்கள் வந்ததால்தான் சமூக வலைத்தளங்களில் இது டிரெண்டாகிறது. மக்களுக்கும் அந்த திட்டங்களை பற்றி வெளிச்சம் கிடைக்கிறது என்றும் விளக்கங்களை அளிக்கின்றனர்.

என்ன விளக்கங்கள் இருந்தாலும் அரசு தரப்பில் சினிமா பிரபலங்களுக்கு இடம் கொடுப்பது போல மற்ற துறை சாதனையாளர்களுக்கு இடம் கொடுக்கலாம் என்றே விமர்சனங்கள் வைக்கப்படுகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+