மின் கட்டணத்தை கூட்டுங்க! கறாராக சொன்ன மத்திய அரசு! டெல்லியில் என்ன நடந்தது? செந்தில் பாலாஜி பளீர்
சென்னை: மின் கட்டண உயர்வை தடுக்க டெல்லிக்கு சென்று மத்திய அமைச்சரிடம் பேசியதாகவும், ஆனால் மத்திய அரசு இதில் கறாராக இருந்ததாகவும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
Recommended Video
மத்திய அரசின் கட்டாயத்தின் பெயரிலேயே மின்சார கட்டணத்தை உயர்த்தியதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். மின்சார கட்டணத்தை உயர்த்தவில்லை என்றால் கடன் வழங்க முடியாது, தனியாரிடம் மின்சாரம் வாங்க முடியாது, மானிய விலையில் மின்சாரம் வாங்க முடியாது என்று மத்திய அரசு தெரிவித்தாக அவர் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு இதற்காக மேற்கொள்ளப்பட்ட டெல்லி பயணம் குறித்து செந்தில் பாலாஜி விளக்கிஉள்ளார்.

பேட்டி
செந்தில் பாலாஜி அளித்த பேட்டியில், நானும், மின்சாரத்துறை செயலாளர், நிர்வாகிகள் எல்லோரும் சென்று ஒன்றிய எரிசக்தி துறை அமைச்சரை பார்த்தோம். கடந்த டிசம்பர் மாதம் 16ம் தேதி டெல்லிக்கு இதற்காக சென்றோம். தமிழ்நாடு அரசின் மின் திட்டங்களையும், தேவைகளையும் பட்டியலிட்டு அவரிடம் கொடுத்தோம். எங்களிடம் நேரிலும் கறாராக பேசினார். மின் கட்டணத்தை நீங்கள் மாற்ற வேண்டும் என்று அமைச்சர் எங்களிடம் சொன்னார்.

செந்தில் பாலாஜி
உடனே மின் கட்டணத்தை மாற்றுங்கள் என்று அமைச்சர் எங்களிடம் சொன்னார். இல்லையென்றால் உங்களிடம் வழங்க கூடிய மானியம் நிறுத்தப்படும் என்று கண்டிப்புடன் கூறினார். வரும் காலங்களில் உங்களுக்கு பாதிப்பு வராமல் பார்க்கிறோம் என்று சொன்னோம். ஆனால் அவர்கள் கண்டிப்பாக மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று கூறினார்கள்.

டெல்லி பயணம்
அதோடு வெளிநாடுகளில் இருந்து கண்டிப்பாக 10 சதவிகிதம் நிலக்கரி இறக்குமதி செய்ய வேண்டும் என்று மாநிலங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர். இப்போது வெளிநாட்டு நிலக்கரி அதிக விலைக்கு விற்கிறது. இதனால் செலவு கூடி உள்ளது. இது போக மூன்றில் இரண்டு பங்கு மின்சாரம் நாம் தனியாரிடம் வாங்குகிறோம். இதனால் செலவு அதிகம் ஆகி உள்ளது.

முதல்வர் முயற்சி
கடந்த ஆட்சியில் இதற்காக வாங்கிய கடனும் சேர்த்து செலவு அதிகம் ஆகி உள்ளது. மின்சார கட்டணத்தை உயர்த்தாமல் முதல்வர் ஸ்டாலின் தொடரும்படி கடந்த 1 வருடமாக கூறினார். ஆனால் இப்போது வேறு வழி இல்லாமல் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் கொடுத்துள்ளார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications