Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"முருங்கை மரம்".. அதிமுக + பாஜக கூட்டணி உடையுதா.. அப்ப எல்லாமே போச்சா? எடப்பாடிக்கே ஷாக்.. என்னவாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்னும் எம்பி தேர்தலே வரவில்லை.. அதற்குள் தமிழக அரசியல் களமே அனலடித்து காணப்படுகிறது.. அதிலும் சொந்த கூட்டணிக்குள்ளேயே புகைச்சல்கள் கிளம்பி கொண்டே உள்ளன... என்ன காரணம்?

கடந்த சில மாதங்களாகவே அதிமுக - பாஜக இடையே சுமூக சூழல் ஏற்படவில்லை.. இரு தரப்பிலுள்ள 2ம்கட்ட தலைவர்கள் வெளிப்படையாகவே விமர்சித்து கொண்டார்கள்.. எடப்பாடி பழனிசாமி கொடும்பாவியும் எரிக்கப்பட்டன.

Why did tn bjp leader Annamalai protest today and What is happening in the AIADMK alliance

இதற்கு பிறகு, மூத்த தலைவர்கள் இந்த விஷயத்தில் தலையிட்டு, ஓரளவு சுமூகமாக்கினர்.. ஆனாலும், கூட்டணி விவகாரம் இழுபறியாகவே இருந்தது.. தனித்து போட்டி என்று, எடப்பாடி பழனிசாமியும், அண்ணாமலையும் மாறி மாறி சொல்லி கொண்டேயிருந்தனர்.. இறுதியில், அமித்ஷாவின் பேட்டியும், சந்திப்பும் இதற்கு முற்றுப்புள்ளியாக அமைந்தன.

பஞ்சாயத்து: "தமிழகத்தில் அதிமுக - பாஜக இரு தரப்பிலுமே சுமூகமான மனப்போக்குடன் நடந்து கொள்வோம்" என்று எடப்பாடி + அண்ணாமலை சார்பில் மேலிடத்தில் அன்று உறுதி அளிக்கப்பட்டதாம்.. இந்த சந்திப்புக்கு பிறகு, எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி தந்திருந்தார். அப்போது, "அண்ணாமலைக்கும், உங்களுக்கும் இடையேயான தகராறு குறித்து நேற்றைய சந்திப்பில் பஞ்சாயத்து எதுவும் நடைபெற்றதா?" என்று கேட்டார்கள்..

அதற்கு எடப்பாடி பழனிசாமி, "நீங்க தவறான கருத்தை சொல்றீங்க.. எங்களுக்கும், பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் எந்தவிதமான தகராறும் இல்லையே.. தகராறு இருந்தால் எப்படி ஈரோட்டில் வந்து அவர் பிரச்சாரம் செய்திருப்பார்? இதுபோன்ற உள்நோக்கத்துடன் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பக் கூடாது... எங்கள் கூட்டணி தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இனியும் தொடரும்" என்று பதிலை சொல்லி அசரடித்தார் எடப்பாடி பழனிசாமி.

சாத்தியமா? இல்லையா?: எடப்பாடி பழனிசாமி இப்படி சொன்னாலும், அண்ணாமலை தரப்பில் இதுவரை கூட்டணி குறித்து வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.. எடப்பாடி பழனிசாமியும், அண்ணாமலை தரப்பும் இதுவரை நேருக்கு நேர் வெளிப்படையாக சந்தித்து கொள்ளவில்லை.. ஒருவரையொருவர் பற்றி பேட்டிகளையும் தந்து கொள்ளவில்லை.. குறைந்தபட்சம் கூட்டணி பற்றியும் பேட்டிகளை தரவில்லை.. கர்நாடக தேர்தல் வந்துவிட்டதால், அண்ணாமலை படுபிஸியாக இருந்ததால், இதற்கான சாத்தியங்கள் அமையவில்லை.

இப்போதுதான் தமிழக அரசியலில் முழுகவனம் செலுத்த துவங்கி உள்ளார்.. அந்தவகையில், நேற்றைய பாஜகவின் மாநில செயற்குழு கூட்டம் கோவையில் நடந்தது.. இந்த கூட்டத்தில் கூட்டணி குறித்து பேசுவாரா என்று எதிர்பார்க்கப்பட்டது.. காரணம், இப்போதைக்கு கூட்டணி உறுதிப்படுத்தினாலும், அகில இந்திய அளவில்தான் அது உறுதியாகி உள்ளது..

வெளிப்படையான பேச்சு: மாநில அளவில் இன்னும் இணக்கமான போக்கு ஏற்படவில்லை.. அப்படி இணக்கமான போக்கு ஏற்படவேண்டுமானால், அதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுகவுடனான கூட்டணியை அதிகாரப்பூர்வமாக வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.. அப்படி அறிவித்தால்தான், 2 கட்சி தொண்டர்களும் இணைந்து களத்தில் பணியாற்ற முடியும்.. ஆனால், அப்படி எதையுமே அண்ணாமலை பேசவில்லை என்று தெரிகிறது.

இதனிடையே, கள்ளச்சாராயம் மற்றும் சட்ட ஒழுங்குப் பிரச்சினை குறித்து அதிமுகவினர் தன்னுடைய தலைமையில் 22ம் தேதியன்று பேரணியாக சென்று, மனு கொடுக்கவுள்ளதாக எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.. இப்போது விஷயம் என்னவென்றால், பாஜகவும் திமுக அரசுக்கு எதிரான போராட்டத்தை துவங்கி உள்ளது. அதாவது, அதிமுகவிற்கு முன்னதாகவே, போராட்டத்தை நடத்தி பாஜக முடிவு செய்துவிட்டதாம்..

அதிரடி ட்வீட்: அதனால்தான், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக திமுகவை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் நடைபெற்றுள்ளது..

சமாதானம்: இது அதிமுக தரப்புக்கு எரிச்சலை உண்டு பண்ணி வருகிறதாம்.. எப்ப பார்த்தாலும், அதிமுகவுடன் மோதுவதே அண்ணாமலைக்கு வேலையாகி போய்விட்டது என்று மூத்த தலைவர்கள் அனைவரும் கடும் கோபத்தில் இருக்கிறார்களாம்.. அதிமுக சார்பில் எத்தகைய அறிவிப்பு வெளியிட்டாலும், உடனே அதற்கு பதிலடி கொடுப்பது போல, அதிமுகவை முந்திக்கொண்டு, அதை செய்து முடித்துவிடுவது என்பதில் அண்ணாமலை தீவிரமாக இருக்கிறார்... இதனால் பலதடவை அண்ணாமலைக்கும், அதிமுக தலைவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது..

அதனால்தான், டெல்லி மேலிடமும் இவர்களை அழைத்து சமாதானம் செய்தது.. இதற்கு பிறகு இந்த மாதிரி சர்ச்சை ஓய்ந்துவிடும் என்றே பலரும் எதிர் பார்த்தனர். ஆனால் வேதாளம் மறுபடியும் முருங்கை மரத்தில் ஏறிய கதையாக, தமிழக பாஜக அதிமுகவுக்கு எதிராக செயல்பட தொடங்கி இருக்கிறாரே என்று சொந்து கொள்கிறார்களாம் சீனியர்கள்.

திமுக பலம்: ஒரே விஷயத்துக்காக கவர்னரை தனித்தனியாக சந்திப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை என்றாலும், அதிமுகவை லேசாக டேமேஜ் செய்யும் நடந்துகொள்வதை தான் ஏற்க இயலவில்லை என்று கடுப்பாகி சொல்கிறார்களாம் அதிமுக சீனியர்கள்..

அதுமட்டுமல்ல, அதிமுகவுடன் இணைந்து கவர்னரை சந்திக்க சென்றால் கூடுதல் முக்கியத்துவம் கிடைக்குமே என்று அரசியல் நிபுணர்கள் தெரிவித்து வருகிறார்கள்.. இந்த விவகாரம் என்றில்லை, தமிழக அரசை எதிர்த்து எந்த காரியத்தை செய்தாலும், இணைந்து செய்தால்தான், திமுக என்ற அசுர பலத்தை வீழ்த்த முடியும் என்றும் கருத்துக்களை சொல்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+