பெரிய இன கலவரத்தையே தடுத்தவர்.. சுபையருக்கு தமிழ்நாடு அரசு விருது தந்தது ஏன்? இதுதான் காரணம்!
சென்னை: சென்னையில் நடைபெற்ற குடியரசு தின நிகழ்ச்சியில் பத்திரிகையாளர் முகமது சுபையருக்கு 2024ம் ஆண்டுக்கான 'கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது' வழங்கப்பட்டிருக்கிறது. இதற்கு பின் முக்கியமான காரணம் உள்ளது.
கடந்த வருடம் மார்ச் மாதம் தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சோஷியல் மீடியாக்களில் இரண்டு வீடியோக்கள் வேகமாக பரவின. பீகாரில் இந்த வீடியோ பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அதாவது ஈரோடு, நாமக்கல், கோவையில் வேலை பார்க்கும் வடஇந்தியர்கள் தாக்கப்படுவதாக பொய்யான செய்திகள் பரவி வந்தன.

வட இந்தியர்களை தமிழர்கள் குறி வைத்து தாக்குவதாகவும், கொலை செய்வதாகவும் பொய்யான புகார்கள் வைக்கப்பட்டன.
பாஜக பிரச்சனை; பீகார் மாநில எதிர்க்கட்சியாக இருக்கும் பாஜகதான் இந்த விவகாரத்தில் முதலில் பிரச்னையை கிளப்பியது. தமிழ்நாட்டில் பீகார் மாநில தொழிலாளர்கள் மீது கடுமையான தாக்குதல்கள் நடத்தப்படுகிறது என்று அம்மாநில சட்டசபையில் அமளி செய்தது. இதற்கு பொய்யான வீடியோக்களையும் ஆதாரமாக காட்டியது.
இதனை தடுக்காமல் பீகார் மாநில அரசு, தமிழ்நாடு அரசுடன் கைகோர்த்து வேடிக்கை பார்க்கிறது என்றும் பொய்யான வீடியோக்களை பாஜக காட்டி அமளி செய்தது. இதையடுத்து தமிழ்நாட்டில் வட இந்தியர்கள், முக்கியமாக பீகார் மக்கள் தாக்கப்படுவதாக வைக்கப்படும் பொய்யான புகார்கள், வீடியோக்கள் இணையத்தில் பரவியது.
அல்ட் நியூஸ்: இந்த விவகாரம் பெரிய சர்ச்சையான போது.. அந்த வீடியோக்கள் பொய்யானது என்று முதலில் கூறி வதந்தியை காலி செய்ததே அல்ட் நியூஸ் நிறுவனத்தின் முகமது சுபையர்தான். இந்த விவகாரம் கலவரமாக மாறாமல் தடுத்தது அவர்தான்.
இந்த இரண்டு வீடியோவில் ஒன்று, பீகார்-ஜார்க்கண்ட் தொழிலாளர்கள் மோதல் சம்பவம். அது இங்கே நடக்கவே இல்லை. மற்றொன்று தமிழ்நாட்டு மக்கள் அவர்களுக்குள் நடத்திக்கொண்ட சண்டை. இதைத்தான் பொய்யாக தமிழ்நாடு சம்பவம் என்று இவர்கள் பரப்பி வருகிறார்கள்.
முக்கியமாக பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி தமிழ்நாடு அப்போது வந்த நிலையில், அவருக்கு அழுத்தம் தர வேண்டும் என்று பாஜக சார்பாக அம்மாநில சட்டசபையில் இந்த விவகாரம் எழுப்பப்பட்டது. அவர் விளக்கம் அளித்தும் கூட அம்மாநில பாஜக இந்த விவகாரத்தில் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. தேசிய அளவில் ஸ்டாலின் கூட்டணி அமைக்க வேண்டும், ஸ்டாலின் பிரதமர் ஆக வேண்டும் என்ற குரல்களுக்கு இடையே தமிழ்நாடு குறித்த தவறான பிம்பம் வடஇந்தியர்கள் இடையே பரப்பப்பட்டு வருகின்றன.
கலவரத்தை தடுத்தார்; இந்த உண்மையை வெளியே கொண்டு வந்தது அல்ட் நியூஸ் நிறுவனத்தின் முகமது சுபையர்தான். அன்று பெரிய கலவரத்தை தடுத்தது அல்ட் நியூஸ் நிறுவனத்தின் முகமது சுபையர்தான். இதையடுத்தே தமிழ்நாட்டில் சென்னையில் நடைபெற்ற குடியரசு தின நிகழ்ச்சியில் பத்திரிகையாளர் முகமது சுபையருக்கு 2024ம் ஆண்டுக்கான 'கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது' வழங்கப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றாக கருதப்படும் 'கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது' அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இவர் வடஇந்தியாவில் பணியாற்றினாலும், பெங்களூரில் வசித்தாலும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தை இவர் பூர்வீகமாக கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இது மட்டுமின்றி ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக சிலர் மத ரீதியான கருத்துக்களை பகிர்ந்து கலவரத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்.

ஒடிசா ரயில் விபத்தின் துயரம் அடங்கும் முன் அதை வைத்து ஒரு கும்பல் மத கலவரத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கி உள்ளன. அதன்படி The Random Indian என்ற ட்விட்டர் கணக்கில், இந்த ரயில் விபத்து வெள்ளிக்கிழமை நடந்து உள்ளது. அருகிலேயே பாருங்கள் மசூதி உள்ளது என்று போஸ்ட் செய்துள்ளார். எப்படியாவது இந்த விஷயத்தை பயன்படுத்தி இஸ்லாமியர்களை மேலும் தனிமைப்படுத்த முடியாதா, கலவரத்தை உருவாக்க முடியாதா என்று இவர்கள் முயன்று வந்தனர்.
வெள்ளிக்கிழமை இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தும் தினம் மற்றும் அருகே மசூதி உள்ளது என்பதை சுட்டிக்காட்டி இது இஸ்லாமியர்களின் வேலை.. இது விபத்து கிடையாது என்பது போல அந்த நபர் மத கலவரத்தை உண்டாக்கும் விதமாக போஸ்ட் செய்து இருந்தார். இதில் அந்த இடம் மசூதி கிடையாது என்ற உண்மையை கூறி.. கலவரம் ஏற்படாமல் தடுத்ததும் இதே அல்ட் நியூஸ் நிறுவனத்தின் முகமது சுபையர்தான். என்பது குறிப்பிடத்தக்கது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications