Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விஜய் எடுக்கும் முக்கிய முடிவு! முன்பே தெரிந்து பின்வாங்கிய டிடிவி, ஓபிஎஸ்! தவெகவிற்கு எண்டு கார்டு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் சார்பாக விஜய் முக்கிய முடிவு ஒன்றை எடுக்க போவதாகவும், அந்த முடிவு தெரிந்தே டிடிவி தினகரன், ஓ பன்னீர்செல்வம் பின்வாங்கியதாகவும் கூறப்படுகிறது.

பாஜக - அதிமுகவின் என்டிஏ கூட்டணியில் இன்று அமமுக இணைந்தது. என்டிஏ கூட்டணியில் அமமுக இணையவுள்ளதாகக் கூறப்படும் நிலையில், டிடிவி தினகரன் இது தொடர்பாகத் தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரன், அதிமுக- பாஜக கூட்டணியில் இணைவதாக அறிவித்தார். கூட்டணியை அறிவித்த கையோடு அவர் பியூஷ் கோயலையும் நேரில் சந்தித்தார்.

Vijay tvk jananayagan

தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலுக்குச் சில மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், கூட்டணியை இறுதி செய்யும் முயற்சிகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஆளும் திமுகவுக்கு எதிராக மிகவும் வலிமையான ஒரு கூட்டணியை உருவாக்க பாஜக- அதிமுக முயன்று வருகிறது.

என்டிஏ கூட்டணி

இப்போது வரை இந்தக் கூட்டணியில் அன்புமணியின் பாமக மற்றும் ஐஜேகே கட்சிகள் இணைந்துள்ளன. வரும் 23ம் தேதி பிரதமர் மோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சி மதுராந்தகத்தில் நடைபெறும் நிலையில், அதில் அனைத்துக் கூட்டணிக் கட்சித் தலைவர்களையும் மேடை ஏற்ற பாஜக திட்டமுள்ளது. அதற்குள் அதிமுக உடன் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்யவும், இதர கட்சிகளுடன் கூட்டணியை உறுதி செய்யவும் பாஜக திட்டமிட்டு வருகிறது.

இன்னொரு பக்கம் ஓ பன்னீர்செல்வமும் என்டிஏ கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அதிமுக முன்னாள் அமைச்சரான ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த வைத்திலிங்கம் இன்று திமுகவில் இணைந்துள்ளார். எம்.எல்.ஏ பதவியை இன்று ராஜினாமா செய்த வைத்திலிங்கம் தனது மகன் பிரபு உடன் அண்ணா அறிவாலயம் வந்தார். திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார் வைத்திலிங்கம்.

மேலும் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், முன்னாள் எம்.எல்.ஏகுன்னம் ராமச்சந்திரன் ஆகிய இருவரும் இன்று சென்னையில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து தங்களது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைய உள்ளனர். இதனால் வேறு வழியின்றி ஓ பன்னீர்செல்வம் திமுகவிற்கு அல்லது பாஜக கூட்டணிக்கு செல்வார் என்கிறார்கள்.

டிடிவி - ஓ பன்னீர்செல்வம் என்று இரண்டு தரப்புமே.. விஜயின் முடிவு ஒன்று தெரிந்தே இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. தமிழக வெற்றிக் கழகம் சார்பாக விஜய் முக்கிய முடிவு ஒன்றை எடுக்க போவதாகவும், அந்த முடிவு தெரிந்தே டிடிவி தினகரன், ஓ பன்னீர்செல்வம் பின்வாங்கியவதாகவும் கூறப்படுகிறது.

விஜய் சிபிஐ

சிபிஐ வழக்கு, ஜனநாயகன் படம் என்று விஜய் தொடர்ந்து பிரச்சனைகளில் சிக்கி தவித்து வருகிறார். இதனால் வேறு வழியின்றி விஜய் அரசியலில் இருந்தே விலகலாம், அல்லது தவெக போட்டியிடலாம் நாம் போட்டியிட வேண்டாம் என்ற திட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான முடிவை அவர் எடுத்துவிட்டாராம்.

தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் நெருங்க நெருங்க.. விஜயின் அரசியல் நடவடிக்கைகள் குறைய தொடங்கி உள்ளன. கடந்த 1 மாதத்திற்கு முன் ஈரோடு கூட்டத்திற்கு விஜய் சென்று இருந்தார்.. அதன்பின் கட்சி சார்பாக கிறிஸ்துமஸ் நிகழ்வில் கலந்து கொண்டார்.

இதையடுத்து கடந்த 1 மாதங்களாக அவர் அரசியல் நிகழ்வுகள் எதிலும் கலந்து கொள்ளாமல் ஒதுங்கிவிட்டார். ஜனநாயகன் ஆடியோ லான்ச்சில் கலந்து கொண்டாலும் அது அரசியல் நிகழ்வு கிடையாது. அரசியல் ரீதியாக விஜய் கிட்டத்தட்ட முடங்கியே விட்டார். கிட்டத்தட்ட கடந்த 4 வாரங்களாக தவெக கட்சி அமைதியாக இருக்கிறது. கணினிகளில் இருக்கும் sleep modeஐ அழுத்தியது போல தவெக மொத்தமாக அமைதியாகி உள்ளது.

கட்சியின் தலைவர் விஜய் எங்கும் பேசவில்லை, எதற்காகவும் பேசவில்லை, ஒரு சில வாழ்த்து போஸ்டுகளை தவிர வேறு போஸ்டுகள் எதையும் விஜய் செய்யவில்லை. கட்சியின் மற்ற மூத்த தலைவர்கள் ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் , கட்சியில் புதிதாக இணைந்த நாஞ்சில் சம்பத் என்று ஒருவர் கூட கட்சி சார்பாக எதுவும் பேசவில்லை. அருண் மட்டுமே ஒரு சில நிகழ்வுகளில் பங்கேற்றார்.

தமிழக வெற்றிக் கழகம் சார்பாக பொங்கல் விழா நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் அந்த விழா கடைசி நேரத்தில் கேன்சல் செய்யப்பட்டது. இப்படி கட்சி மொத்தமும் அப்படியே சைலன்ட் மோடிற்கு சென்றுள்ளது. சிபிஐ விஜய் விசாரணை நாளை நடக்க உள்ளது அதேபோல் நாளை மறுநாள் ஜனநாயகன் வழக்கு நடக்க உள்ளது. இது இரண்டிற்கும் இடையில் விஜய் மொத்தமாக அமைதியாகி உள்ளார்.

இவை எல்லாம் விஜய் அரசியலில் இருந்தே விலகலாம், அல்லது தவெக போட்டியிடலாம் நாம் போட்டியிட வேண்டாம் என்ற திட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான முடிவை அவர் எடுத்துவிட்டாராம்.. இதை டெல்லி சோர்ஸ் வழியாக தெரிந்து கொண்டே பின்பே டிடிவி - ஓ பன்னீர்செல்வம் இப்படியான முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. முதலில் விஜயுடன் சேர ஆர்வம் காட்டிய இரண்டு பேருமே.. விஜயை சீண்டாமல் போனதற்கு காரணம் இதுவே என்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+