தமிழ் இண்டஸ்ட்ரியை அசிங்கப்படுத்திய பவன் கல்யாண்! இதுவரை ஒரு வார்த்தை சொல்லாத விஜய்.. அந்த 2 மேட்டர்
சென்னை: ஆந்திர பிரதேச துணை முதல்வர் நடிகர் பவன் கல்யாண் இந்தி திணிப்பிற்கு எதிரான தமிழர்களின் போராட்டத்தையும், தமிழ் சினிமா உலகையும் அவமதிக்கும் வகையில் பேசி இருக்கிறார்.
தற்போது இந்தி திணிப்பு பிரச்சனை உச்சத்தில் இருப்பது பலருக்கும் தெரிந்தது. மும்மொழி கொள்கை வழியாக இந்தியை திணிக்கும் முயற்சிக்கு கடுமையான எதிர்ப்பு வர தொடங்கி உள்ளது. இப்படிப்பட்ட நிலையில்.. பவன் கல்யாண்.. ஒரு விஷயத்தை சொல்லி இருக்கிறார்.. அதன்படி தமிழர்கள் இந்தியை எதிர்க்கிறார்கள். ஆனால் தங்களின் கோலிவுட் படங்களை மட்டும் இந்தியில் மொழி பெயர்க்கிறார்கள். உங்களுக்கு இந்தி வேண்டாம்.. இந்தி மார்க்கெட் பணம் மட்டும் வேண்டுமா? என்று பவன் கல்யாண் கேட்டு உள்ளார்.

ஆனால் இதை பற்றி பவன் கல்யாண் போலவே சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்த விஜய் அதை எதிர்க்கவில்லை. தமிழர்கள் போராட்டத்தை கிண்டல் செய்யும் பவனை.. அதே சினிமா துறையை சேர்ந்த அரசியல்வாதி விஜய் எதிர்க்காமல் மவுனம் காக்கிறார்.
அந்த 2 மேட்டர்
கடந்த 4 நாட்களில் விஜய் 2 அறிக்கைகளை வெளியிட்டார். ஒன்று பட்ஜெட் பற்றிய அறிக்கை. இன்னொன்று டாஸ்மாக் ரெய்டு பற்றிய அறிக்கை.
பட்ஜெட் பற்றிய அறிக்கையில், தமிழ்நாடு அரசின் 2025-26 ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் புதிதாக 9 இடங்களில் தொழிற்பேட்டை அமைக்கப்படும், பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்கு மாதந்தோறும் உதவித் தொகை, ஈட்டிய விடுப்பு சரண் 15 நாட்கள் வரை பணப்பலன், பத்து லட்சம் வரை மதிப்புள்ள சொத்தைப் பெண்கள் பெயரில் பதிவு செய்தால் பதிவுத் தொகையில் சலுகை என்பது போன்ற அறிவிப்புகளை வரவேற்கிறோம்.
அறிவிப்புகள் எல்லாம் நடைமுறைக்கு வருமா என்ற பலமான கேள்வி எழாமல் இல்லை. காரணம். இந்த விளம்பர மாடல் அரசின் கடந்த கால வெற்று விளம்பர அறிவிப்புகளே. புதிய அரசு கலை & அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கல்லூரிக் கல்வியின் தரத்தை நிலைநிறுத்த என்ன முன்னெடுப்புகளை எடுக்கப் போகின்றீர்கள்?
ஆசிரியப் பணி இடங்கள் நிரப்பப்படும் என்ற அறிவிப்பு, வெற்றிடங்களை நிஜமாகவே நிரப்பும் அறிவிப்பா? இல்லை. வழக்கம் போலான விளம்பர மாடல் அரசின் வெற்று அறிவிப்பா? என்பது போகப் போகத்தான் தெரியும். அண்ணா பல்கலையைத் தரவரிசையில் மேம்படுத்தும் அறிவிப்பெல்லாம் இருக்கட்டும். முதலில், அண்ணா பல்கலையில் பயிலும் மாணவிகளுக்கு முறையான பாதுகாப்பை உறுதி செய்யுங்கள், என்று கூறினார்.
டாஸ்மாக் பற்றிய அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும். தி.மு.க. அரசின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் அலுவலகங்கள் மற்றும் டாஸ்மாக் தொடர்புடைய பல்வேறு நிறுவனங்கள்/நபர்களுக்குத் தொடர்புடைய இடங்களில் கடந்த 6-ஆம் தேதி (06.03.2025) அன்று அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. அச்சோதனையின் முடிவாக, அமலாக்கத் துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கணக்கில் வராத பணம் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
டாஸ்மாக் பணியாளர்களைப் பணியமர்த்துதல், இடமாற்றம் செய்தல். வாகனங்கள் டெண்டர் ஒதுக்கீடு, பார் உரிமம் வழங்கும் டெண்டர் ஒதுக்கீடு, கடைகளில் விற்பனையாகும் ஒவ்வொரு மது பாட்டினுக்கும் பெறப்பட்ட ரூபாய் 10 முதல் 30 வரையிலான கூடுதல் தொகை, டிஸ்டில்லரீஸ் மற்றும் பாட்டிலிங் கம்பெனிகள் மூலம நடந்த முறைகேடுகளைப் பற்றிப் பெரிய பட்டியலே அந்த அறிக்கையில் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த முறைகேடு பற்றி விளக்கும்போது, நன்கு திட்டமிடப்பட்ட கணக்கில் வராத பணம் ஈட்டுதல் மற்றும் சட்டத்திற்குப் புறம்பான பணம் பெறுதல் (a well-orchestrated scheme of unaccounted cash generation and illicit payments), ιρετιρχαιδείς ώρ கம்பெனிகளுக்கும் இடையில் இருந்த மிகப் பெரிய கூட்டு (the collusion between distilenes and bottling companies) மூலம் நிதி சம்பந்தமான ஆவணங்கள் தவறாகக் கையாளப்பட்டு (manipulation of financial records) மறைமுகமாக அல்லது மறைக்கப்பட்ட முறையில் பணம் வருதல் (concealed cash flows) முறையான ஏய்ப்பு (Systematic Evasion) நடந்துள்ளது என்று விவரிக்கப்பட்டுள்ளது., என்று கூறி உள்ளார்.
தினமும் இப்படி அறிக்கை வெளியிடும் விஜய்.. இப்போது வரை பவன் கல்யாண் பற்றி ஒரு வார்த்தை பேசவில்லை. அவரின் சொந்த இண்டஸ்ட்ரி பற்றி கூட விஜய் பேசாமல் மௌனம் காப்பது கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications