என்னங்க இது.. திமுக, பாஜக பற்றி அவ்வளவு பேசிய விஜய்.. எடப்பாடியை சீண்டவே இல்லையே.. இதுதான் காரணம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நேற்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பேச்சில் திமுக மற்றும் பாஜகவை மறைமுகமாக விமர்சனம் செய்தார். ஆனால் அவர் தனது பேச்சில் எங்கும் அதிமுகவை.. எடப்பாடியை விமர்சனம் செய்யவில்லை.. பாராட்டவும் இல்லை.

திமுக பற்றி விஜய் மறைமுகமாக பேசுகையில்.. யார் அரசியலுக்கு வந்தாலும் இவர்கள் கலர் பூசுகிறார்கள். நீ பாஸிசம்.. நீ அது.. நீ இது என்று கலர் அடிக்கிறார்கள். எனக்கு கலர் அடிக்க முடியாது. சொல்லிவிட்டேன். அவர்கள் பாசிசம் பேசுகிறார்கள் என்றால்.. நீங்கள் என்ன பேசுகிறீர்கள். நீங்கள் என்ன பாயாசமா பேசுகிறீர்கள்.

tvk maanadu tamilaga vetri kazhagam actor vijay

மக்கள் விரோத ஆட்சியை திராவிட மாடல் ஆட்சி என சொல்லி மக்களை ஏமாத்துறீங்க. திராவிட மாடல் என சொல்லிக்கொண்டு ஒரு குடும்ப சுய நலக்கூட்டம் தான் எங்களின் அரசியல் எதிரி. அரசியல் எதிரி மட்டும்தான் எங்களுக்கு. ஆபாசம், அள்ளு சில்லு எல்லாம் வச்சு அவதூறு பரப்பி இந்த படையை . வீழ்த்தலாம்னு கனவுல கூட நினைச்சுறாதீங்க. திராவிட மாடல் ஆட்சி என்று சொல்லி மக்களை ஏமாற்றுகிறீர்கள். இந்த கலர் அந்த கலர் என்று பூசும் இந்த மோடி மஸ்தான் வேலை இங்கு எடுபடாது. இறங்கியாச்சு, என்று கூறினார்.

பாஜக பற்றி மறைமுகமாக பேசிய விஜய், பெரியார் எங்கள் கொள்கை தலைவர் என்றவுடன் ஒரு கும்பல் பெயிண்ட் டப்பாவை கையில் எடுத்துக்கொண்டு கிளம்பி இருப்பார்கள். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சொன்னதும்.. ஒரு கட்சி.. ஒரு குரூப் எங்களை எதிர்த்தது.

தவெக அறிவிக்கும் போதே கதறல் கேட்டுச்சு. இந்த மாநாட்டுக்கு அப்புறம் இன்னமும் கதறல் அதிகரிக்கும். நாம் அவர்களுக்கு மட்டும் எதிரியா? கிடையாது.. நமக்கு இன்னொரு எதிரியும் இருக்காங்க. ஊழல் இல்லாத ஆட்சியை கொடுப்போம் என்று கூறி உள்ளோம். இதன் அர்த்தம் என்ன.. முகமுடி போட்ட கரெப்ஷன் கபடதாரிகள் தான் இப்ப நம்மை ஆண்டு கொண்டிருக்கிறார்கள். முகமுடி போட்ட கரெப்ஷன் கபடதாரிகள் அகற்றப்பட வேண்டும். இவர்களை எல்லாம் அகற்ற வேண்டும்.

முகமுடி போட்ட கரெப்ஷன் கபடதாரிகள் இருக்கிறார்களே.. அவர்களும் நம்முடைய எதிரிகள்தான். வெறுப்பு அரசியலை ஒருபோதும் கையிலெடுக்கப் போவதில்லை. நம்மள பாத்து யாரும் விசிலடிஞ்சான் குஞ்சு என சொல்லிட கூடாது. பெண்களை அரசியல் வழிகாட்டிகளாக ஏற்கும் முதல் அரசியல் கட்சி தவெக, என்றார்.

எடப்பாடி பற்றி பேசவில்லை: நேற்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பேச்சில் திமுக மற்றும் பாஜகவை மறைமுகமாக விமர்சனம் செய்தார். ஆனால் அவர் தனது பேச்சில் எங்கும் அதிமுகவை.. எடப்பாடியை விமர்சனம் செய்யவில்லை.. பாராட்டவும் இல்லை. இதற்கு பின்வரும் காரணங்கள் சொல்லப்படுகின்றன.

1. திமுக இங்கேயும்.. பாஜக மத்தியிலும் ஆட்சியிலும் உள்ளது. இவர்களை மட்டுமே எதிர்க்கலாம் என்று விஜய் நினைக்கலாம்.

2. அதிமுக - எடப்பாடி இப்போது ஆக்டிவாக பெரிதாக அரசியல் செய்வது இல்லை. வரிசையாக 11 தேர்தல்களில் அந்த கட்சி தோல்வி அடைந்துள்ளது. இதனால் அவர்களை தவிர்த்து இருக்கலாம்.

3. எதிர்காலத்தில் அதிமுகவுடன் கூட்டணி வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

4. அதிமுகவின் இடத்தை நிரப்பி.. திமுகவிற்கு எதிராக 2ம் இடத்தை பிடிக்க விஜய் நினைக்கலாம். இதனால் அதிமுக மீது போகஸ் தருவதை விஜய் தவிர்த்து இருக்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+