"உயிருள்ளவரை உஷா".. 12 நாட்களும் உல்லாசம்.. கடைசி நாளில் நடந்த அக்கிரமம்.. 17 வயது சிறுவன் வேற.. ஐயோ
மைனர் சிறுமியை கொடூரமாக கொன்று ஏரியில் வீசிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்
சென்னை: 12 நாட்களும் சிறுமியுடன் ஜாலியாக இருந்துவிட்டு, கடைசியாக கொடூரமாக கொன்று வீசியுள்ளார் ஒரு இளைஞர்.. இப்போது சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.
சென்னை கும்மிடிப்பூண்டி அடுத்த பிச்சாட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம்.. 45 வயதாகிறது.. மனைவி பெயர் திலகா.. இவர்களது ஒரே மகள்.. 15 வயதாகிறது..
ஆனால், கணவன் மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர்.. திலகா தன் மகள் உஷாவுடன் நெல்வாய் கிராமத்தில் சில ஆண்டுகளாக வசித்து வந்தார்.

உஷா எங்கே
பெரியபாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார் உஷா.. கடந்த 10ம் தேதி வெளியே சென்ற உஷா, மறுபடியும் வீட்டுக்கு திரும்பவில்லை... இதனால், அதிர்ச்சியடைந்த உறவினர்கள் பல இடங்களில் உஷாவை தேடினார்கள்.. எங்கேயும் கிடைக்கவில்லை. அதனால், இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கவும், போலீசாரும் வழக்கு பதிந்து மாணவியை தேடி வந்தனர்.. இந்நிலையில், கடந்த 23ம் தேதி காலை கொள்ளனூர் ஏரிக்கரையில் சிறுமி சடலம் ஒன்று கிடப்பது பற்றி அறிந்த பாதிரிவேடு போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

ஏரிக்கரை
சிறுமி சடலத்தை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்ய அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர்.. சிறுமியின் கழுத்து மற்றும் முகத்தில் நிறைய காயங்கள் இருந்ததால், அவரை கொடூரமாக யாரோ கொலை செய்துள்ளதாகவும் போலீசார் சந்தேகித்தனர்.. விசாரணையையும் துவங்கினர்.. முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்டது உஷா என்பது உறுதியானது.. அப்போதுதான், அவரது காதல் விவகாரமும் வெளிச்சத்துக்கு வந்தது.. மூக்கரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த பிரவீன் என்ற 19 வயது இளைஞரை காதலித்து வந்துள்ளார்..

உல்லாசம்
ஆனால் போலீசார் இதை கண்டுபிடிப்பதற்குள், பிரவீன் தலைமறைவாகி விட்டார். அவரை பிடிக்க ஆரம்பாக்கம் இன்ஸ்பெக்டர் அய்யனாரப்பன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது... நேற்று முன்தினம் முக்கரம்பாக்கம் காட்டுப் பகுதியில் பதுங்கி இருந்த பிரவீனையும், அவருடன் இருந்த 17 வயது சிறுவனையும் தனிப்படை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர்.. கைதான பிரவீன் போலீசாருக்கு வாக்குமூலம் தந்துள்ளார்.. அந்த வாக்குமூலத்தில் சொன்னதாவது:

உஷா.. உஷா
'ஸ்கூலுக்கு போகும்போதுதான், உஷாவை முதன்முதலாக பார்த்தேன்.. பழக்கம் ஏற்பட்டு அதுவே எங்களுக்குள் காதலமாக மாறியது.. திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை சொன்னேன்.. பலமுறை உஷாவுடன் உல்லாசமாக இருந்தேன்.. ஒருகட்டத்தில் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று உஷா நெருக்கடி தர ஆரம்பித்தார்.. தினமும் இந்த தொல்லை அதிகமானதால்தான் கொலை செய்ய முடிவு செய்தேன்.. அதற்காக என் ஏரியாவில் உள்ள 17 வயது சிறுவனின் உதவியை நாடினேன்.. அவன் என் நண்பனும்கூட... அதனால் நாங்கள் இருவரும் சேர்ந்து தீர்த்துக்கட்ட முடிவு செய்தோம்..

ஜாலி
அதன்படி, உஷாவின் ஆசைப்படியே கல்யாணம் செய்வதாக சொல்லி, கடந்த 10ம் தேதி உஷாவை வெளியே அழைத்து சென்றேன்.. ஊத்துக்கோட்டை, பெரியபாளையம் என நிறைய இடங்களுக்கு சென்று ஜாலியாக இருந்தோம்.. கடந்த 22ம் தேதி இரவு 11 மணிக்கும் கடைசியாக உஷாவுடன் உல்லாசமாக இருந்தேன்.. ஒரு கயிறு எடுத்து, நண்பரின் துணையுடன் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டேன்.. உஷாவின் சடலத்தை ஏரியில் வீசிவிட்டோம்' என்றனர்.. இந்த வாக்குமூலத்தையடுத்து, பிரவீன் புழல் ஜெயிலிலும், செங்கல்பட்டு சீர்திருத்தப் பள்ளியில் அந்த 17 வயது சிறுவனையும் போலீசார் அடைத்துள்ளனர்.. 12 நாட்களும் ஜாலியாக இருந்துவிட்டு, கடைசியில் கொடூரமாக பிஞ்சுவை கொன்ற இந்த சம்பவம் கும்மிடிப்பூண்டியில் பகீரை கிளப்பி விட்டு வருகிறது,
-
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
கேரளா Amusement park-ல் ஆகாய ஊஞ்சல் உடைந்து தமிழர்கள் உள்பட 7 பேர் காயம்! நடந்தது என்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல்












Click it and Unblock the Notifications