சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"பலிஆடு".. விழுந்து விழுந்து செய்தாரே.. "தங்கம்" வீசிய வெடி.. எல்லாம் போச்சா.. ஓபிஎஸ் வாயே திறக்கலயே

எடப்பாடி பழனிசாமி ஓபிஎஸ்ஸுடன் விரைவில் இணைவார் என்கிறார்கள்

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுவில், விரைவில் இரு தலைவர்களும் இணையக்கூடும் என்ற நம்பிக்கை ஓரளவு துளிர்த்து உள்ளது.. இது ரத்தத்தின் ரத்தங்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியும் வருகிறது.

அதிமுகவை பொறுத்தவரை, தன்னை சுற்றி 95 சதவீத ஆதரவாளர்கள் உள்ள பலத்தில், கட்சியை கைப்பற்ற முயன்று வருகிறார் எடப்பாடி பழனிசாமி..

அதேசமயம், எவ்வளவு ஆதரவு மெஜாரிட்டி உள்ளது என்பதை நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் ஒருபோதும் முழுமையான பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வதில்லை என்பது இயல்பு என்றாலும், இதைதான் கடந்த வாரம் உச்சநீதிமன்றமும் தன்னுடைய உத்தரவில் கூறியிருந்தது..

 4800.. ஆசை ஆசையாய் 2 ப்ளான்.. பரம ரகசியம் காக்கும் 2 'தலைகள்'.. யாரு எடப்பாடி பழனிசாமி? திமுகவிடமா? 4800.. ஆசை ஆசையாய் 2 ப்ளான்.. பரம ரகசியம் காக்கும் 2 'தலைகள்'.. யாரு எடப்பாடி பழனிசாமி? திமுகவிடமா?

 கப்சிப் மோடு

கப்சிப் மோடு

இதற்கு பிறகு எடப்பாடி பழனிசாமி உண்மையிலேயே அதிர்ந்து போனதாகவும், அப்செட்டுக்கு ஆளாகி உள்ளதாகவும் தகவல்கள் வந்தன. ஒருவேளை, இரட்டை தலைமையுடன் செயல்படுங்கள் என்று தேர்தல் ஆணையம் சொல்லிவிட்டால் என்னாவது? நிறைய சட்டசிக்கல்களில் சிக்கி உள்ள நிலையில், சுப்ரீம்கோர்ட் மூலம் எடப்பாடிக்கு தடை வந்துவிட்டால் என்னாவது? இலையை முடக்கிவிட்டால் என்னாவது? என்பன போன்ற குழப்பங்கள் எடப்பாடியை சூழ்ந்துள்ளதாகவும் தெரிகிறது.

 இலை + தலை

இலை + தலை

இப்படி பல குழப்பங்கள் உள்ளதால்தான், ஓபிஎஸ், எடப்பாடி இருவரும் இணைய வேண்டும் என்று அரசியல் நோக்கர்களும், அதிமுக நலன் விரும்பிகளும், அக்கட்சியின் தொண்டர்களும் ஆசைப்படுகிறார்கள்.. எந்த ஒரு அறிவிப்பிலுமே, இருவருமே சேர்ந்து கையெழுத்திட்டால்தான், செல்லுபடியாகும் என்ற சூழல் வரும்பட்சத்தில், அதையெல்லாம் எப்படி எடப்பாடி எதிர்கொள்வார் என்ற கேள்வியும் எழுந்து வருகிறது.. இப்படிப்பட்ட சூழலில்தான், எடப்பாடி டீமில் உள்ளவர்கள், லேசாக ஓபிஎஸ் பக்கம் சாய்வது போல கூறுகிறார்கள்.

 நத்தம் + வைத்தி

நத்தம் + வைத்தி

குறிப்பாக, மூத்த தலைவர் தங்கமணி பேசியதன் சலசலப்பும் இன்னமும் அடங்கவில்லை.. ஓபிஎஸ்ஸிடம் பல்வேறு பிரச்சினைகளுக்கு பேசும்போது வைத்திலிங்கம், அதிமுக ஒற்றுமையாக இருக்க கூடாது என்பதற்காக செயல்பட்டார். ஒற்றை தலைமை வேண்டும் என பேச்சுவார்த்தை நடக்கும்போதே நெருங்கிய நண்பரான நத்தம் விஸ்வநாதனை அடிக்க பாய்ந்தவர் வைத்திலிங்கம்" என்று பகீர் குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார்.

 வைத்திலிங்கம்

வைத்திலிங்கம்

அதாவது, ஓபிஎஸ்ஸை எடப்பாடி பழனிசாமி இணைத்துக் கொள்ள சம்மதித்தாலும், அதற்கு வைத்திலிங்கம்தான் குறுக்கே நிற்கிறார் என்பதுபோல தங்கமணி பேச்சு அமைந்திருந்தது.. இது ஒரு பக்கம் வைத்திலிங்கத்துக்கு அதிர்ச்சி என்றாலும், இப்போதுவரை தங்கமணி பேசியதற்கு ஓபிஎஸ் வாயே திறக்கவில்லையாம்.. பதிலும் சொல்லவில்லையாம்.. மறுப்பும் சொல்லவில்லையாம்.. இது வைத்திலிங்கம் தரப்புக்கு லேசான கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாம்..

 ப்ளான் A

ப்ளான் A

வைத்திலிங்கத்தை பொறுத்தவரை, எடப்பாடி உட்பட அனைவருமே கைவிட்டபோது, வைத்திலிங்கம்தான் பக்கபலமாக உறுதுணையாக இருந்து வருகிறார்.. வைத்திலிங்கம் ஆலோசனைபடியே அனைத்தையும் செய்து வருகிறார் ஓபிஎஸ்.. எனினும், தங்கமணி இவ்வாறு பேசியதற்கு பிறகு, அதை பற்றி கருத்து சொல்லாமல் உள்ளது, குழப்பத்தை தந்து வருகிறதாம்.. இன்னொன்றும் சொல்கிறார்கள்..

 ப்ளான் B

ப்ளான் B

தங்கமணி பேசியபிறகு, எடப்பாடி டீமில் உள்ள வேறு சிலரும், வைத்திலிங்கத்தையே குற்றஞ்சாட்டி, ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக பேச ஆரம்பித்துள்ளனராம்.. இன்னொன்றையும் சொல்கிறார்கள்.. தென்மண்டலத்தில் உள்ள எடப்பாடிக்கு ஆதரவாக உள்ள சில மாஜிக்கள், ஓபிஎஸ் என்றாலே கப்சிப் மோடுக்கு சென்றுவிடுகிறார்களாம்.. இதெல்லாம் பார்த்து, வைத்திலிங்கம் தரப்பு கலங்கி உள்ளதாம்.. ஓபிஎஸ் வாயை திறந்து தங்கமணி குறித்த பேச்சுக்கு பதிலளித்தால் மட்டுமே இந்த கலக்கம் தீரும் என்றும் நம்பப்படுகிறது.. பார்ப்போம்..

English summary
Why didn't O Panneerselvam respond about Thangamani and What is Vaithilingam going to do
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X