"சோ. ராமசாமி" அப்பவே பேசினாரே, தெரியலயா.. ரஜினி இதை பேசியிருக்கணும்.. காரைக்குடியில் சீறிய எச்.ராஜா
ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணனுக்கு எச்.ராஜா மீண்டும் ஆதரவு தெரிவித்துள்ளார்
சென்னை: கனல் கண்ணன், ஈவெரா சிலை அகற்றம் குறித்து பேசியதில் தவறில்லை. ஏன், இதுக்கு முன்பு சோ.ராமசாமி கூட பேசியிருக்கிறார் என்று தமிழக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கருத்து தெரிவித்துள்ளார்.
Recommended Video
"ஸ்ரீரங்கத்தில் கடவுள் இல்லை என்று சொன்னவரின் சிலை என்று உடைக்கப்படுகிறதோ அன்றுதான் இந்துக்களின் எழுச்சி நாள்" என்று பேசியிருந்தார்.
கனல் கண்ணன் பேசிய வீடியோ இணையத்தில் வெளியாகி கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதுடன், அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று புகார்கள் வெடித்து கிளம்பின.

புரளிகள்
தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் சென்னை கமிஷனர் அலுவலத்தில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து, அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து கனல் கண்ணன் தலைமறைவாகிவிட்ட நிலையில், அவரை கைது செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பமாகின.. தொடர்ந்து அவர் தலைமறைவாகவே உள்ளார்.. கோர்ட்டில் முன்ஜாமீன் தாக்கல் செய்து, அதையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. அந்தவகையில், கனல் கண்ணன் எப்போது வேண்டுமானாலும் கைதாகலாம் என்ற சூழலில், தமிழக பாஜக தலைவர்கள், கனல் கண்ணன் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

சிவபெருமான்
அந்தவகையில், மூத்த தலைவர் எச்.ராஜா கடந்த வாரமே கனல் கண்ணனுக்கு ஆதரவு தந்ததுடன், ட்வீட் போட்டு கடுமையான கண்டனத்தை திமுக அரசுக்கு விடுத்திருந்தார்.. சிவபெருமானை இழிவுபடுத்திய யூ டியூபர் மைனர் விஜய்யை கைது செய்ய துணிச்சலற்ற காவல்துறை, கனல் கண்ணனை கைது செய்யலாமா? கடவுளை இழிவு படுத்தலாம் என்றால் மனிதனை பற்றி பேசியது தவறா? இதற்கு தமிழக இந்து விரோத காவல் (ஏவல்) துறையின் பதிலென்ன என்று கேள்வி எழுப்பியிருந்தார்..

சோ ராமசாமி
இந்நிலையில், மீண்டும், கனல் கண்ணன் கைது கண்டனம் தெரிவித்துள்ளார்.. சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசும்போது, கனல் கண்ணன், ஈவெரா சிலை அகற்றம் குறித்து பேசியதில் தவறில்லை. ஏன், இதுக்கு முன்பு சோ.ராமசாமி கூட பேசியிருக்கிறாரே.. காவல்துறை ஆளுங்கட்சியின் கைக்கூலியாக செயல்படக் கூடாது... கள்ளக்குறிச்சி விவகாரத்தில், தகராறு செய்தவர்களை தான் கைது செய்தது... யாரையும் ஜாதி பார்த்து கைது செய்யவில்லை... ஆளுநரை ரஜினி சந்தித்தது தவறு இல்லை. மரியாதை நிமித்தமாக சந்தித்திருக்கலாம்.

பாஸ்போர்ட்
ரஜினி அரசியல் சம்பந்தமாக உரையாடினோம் என்று சொன்னதிலும் தவறில்லை.. அரசு, அரசியல் எல்லாம் ஒன்று தான்... மதுரையில் அதிகமாக புழங்கிய போலி பாஸ்போர்ட் குறித்து கூட ரஜினி பேசி இருக்கலாம்... பாடப்புத்தகத்தில் இருந்த பல நல்ல விஷயங்களை கல்வித்துறையினர் அகற்றி விட்டனர்... இதனால், மாணவர்களுக்கு நல்ல விஷயங்கள் சென்றடையவில்லை... அரசு போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையாக, முதலில் மதுக்கடைகளைத் தான் மூட வேண்டும்" என்றார்.

துக்ளக்
2 வருடங்களுக்கு முன்பு, துக்ளக் இதழின் 50ஆம் ஆண்டு விழாவில், ரஜினிகாந்த் காந்த் பெரியார் பற்றி பேசியிருந்தது பெரும் சர்ச்சையை அப்போது ஏற்படுத்தியிருந்தது.. 1971ல் பெரியார் கலந்து கொண்ட ஊர்வலத்தில் ராமர் படங்களை செருப்பால் அடித்ததாகவும் இதனால் திமுகவுக்குப் பின்னடைவு ஏற்பட்டதாகவும், இந்த சம்பவத்தை துக்ளக் மட்டுமே அன்றைய தினம் வெளியிட்டிருந்ததாகவும் கூறியிருந்தார்.. இதற்கு பலரும் உடனடியாக எதிர்ப்பு தெரிவித்ததுடன், உண்மைத்தன்மையையும் விளக்கி சொல்லி இருந்தார்.. அப்போதும் ரஜினிக்கு எச்.ராஜாதான் முதல் நபராக ஓடிவந்து சப்போர்ட் செய்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications