மைக்கை பிடித்து ஆதவ் அர்ஜூனா பேச பேச உற்று பார்த்த விஜய்.. இதுக்குதான் அந்த பொதுக்குழு? அப்ப பாஜக?
சென்னை: திமுகவில் ஸ்டாலினை எதிரியாக காட்டுவதுபோல, கரூரில் செந்தில் பாலாஜியை எதிரியாக காட்டுகிறார்கள்.. நீ ரவுடியா? நான் ரவுடியா என்பதுபோல அவரது பேச்சு இருந்தது.. ஆதவ் அர்ஜூனா பேச்சால், பாதிக்கப்பட போவது தவெக தொண்டர்கள்தான்.. இப்படி பேசுவதால் இவர்களுக்கும், களத்தில் இறங்கி வேலை பார்க்கும் தொண்டர்களுக்கும்தான் உரசல் ஏற்படும் என்று கருத்து கூறியிருக்கிறார் பத்திரிகையாளர் அய்யநாதன்.
Tamil Niram என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகருமான அய்யநாதன், சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் விஜய் பேசியதை கவனிக்க வேண்டியிருக்கிறது..

"முதலமைச்சர் பெருந்தன்மையோடு நடந்து கொள்வதாக காட்டி கொள்கிறார், ஆனால் அது உண்மையில்லை" என்று விஜய் பேசியிருக்கிறார்.. இந்த பேச்சானது தமிழகத்தில் எதிர்ப்பு மிகப்பெரிய எதிர்ப்பு உணர்வுகளை விஜய்க்கு எதிராக உருவாக்கி வருகிறது.
கரூர் விவகாரத்தில் முதலமைச்சர் பேசியதற்கு இதுவரை எதற்காவது விஜய் எதிர்விளக்கம் தந்துள்ளாரா? மறுப்பு சொல்லியிருக்கிறாரா? கிடையவே கிடையாது
வெறுப்பு அரசியல்
இதற்கு வெறும் காழ்ப்புணர்ச்சி காரணம்.. முழுக்க முழுக்க திமுக மீதான வெறுப்பு அரசியலையே செய்துக்கொண்டு, அதில் வளர்ந்துவிடலாம் என்று விஜய் நினைக்கிறார். இந்த அரசியல் கீழ்த்தரமானது, இது வெற்றி பெற போவதும் இல்லை.
முன்பெல்லாம் விஜய் எது பேசினாலும் கை தட்டி கொண்டிருந்தார்கள்.. ஆனால், விஜய் இவ்வளவுதானா? அக்கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்களே இப்போது பார்த்துவிட்டார்கள்.. இவரை நம்பியா தவெகவில் பயணிக்க போகிறோம்? என்ற எண்ணத்துக்கும் அவர்கள் வந்துவிட்டார்கள்.
ஆதவ் அர்ஜூனா பேசுவதை விஜய் கண்டிக்கணும் தானே? நீ என்ன ரவுடி பெரிய ரவுடியா என்று செந்தில் பாலாஜியை கேட்கிறார்.. அவரை இழுத்து பேசுவதற்கு, இவர்களிடம் என்ன ஆதாரம் உள்ளது?
செந்தில் பாலாஜி
கரூர் கூட்டத்தில் செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் உள்ளே புகுந்துவிட்டார்கள், ஆயுதங்கள் வந்தார்கள் என்றெல்லாம் சொன்னார்கள். அதற்கு எதற்காவது இவர்களிடம் ஆதாரம் உண்டா? காவல்துறையில் புகார் தந்தார்களா? நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களிடம் சொன்னார்களா? இதில் எதுவுமே இல்லாமல் செந்தில் பாலாஜியை தேவையில்லாமல் இப்போது ஏன் இழுக்க வேண்டும்?
திமுகவில் ஸ்டாலினை எதிரியாக காட்டுவதுபோல, கரூரில் செந்தில் பாலாஜியை எதிரியாக காட்டுகிறார்கள்.. நீ ரவுடியா? நான் ரவுடியா என்பதுபோல அவரது பேச்சு இருந்தது.. ஆதவ் அர்ஜூனா பேச்சால், பாதிக்கப்பட போவது தவெக தொண்டர்கள்தான்.. இப்படி பேசுவதால் இவர்களுக்கும், களத்தில் இறங்கி வேலை பார்க்கும் தொண்டர்களுக்கும்தான் உரசல் ஏற்படும்..
விழித்த விஜய்
ஆதவ் அர்ஜூனா விஜய்யை பிரச்சனையில் இழுத்து விடுகிறார்.. இது விஜய்க்கே தெரியாமல், ஆதவ் அர்ஜூனா பேசுவதையே விழித்து பார்த்து கொண்டிருக்கிறார்.. இப்படி அவரை பேச விஜய் எப்படி அனுமதிக்கலாம்?
பொதுக்குழு கூட்டம் என்பது எதுக்கு? கட்சியின் செயல்பாடு, அடுத்தக்கட்ட வளர்ச்சி இதுகுறித்துதானே பேசியிருக்க வேண்டும். விஜய் உச்சநீதிமன்ற உத்தரவை பற்றி பேசுகிறார்..
முதலில் விஜய்யை நம்பி அவரது ரசிகர்களே இனி வருவார்களா தெரியவில்லை. அதற்கு பிறகு இளைஞர்கள் ஆதவ் அர்ஜூனாவை நம்பி களமிறங்குகிறார்களா என்று பார்ப்போம்.
ஆதவ் அர்ஜூனா அரசியல்
ஆதவ் அர்ஜூனாவுக்கு அரசியல் என்ன தெரியும்? சம்பவம் நடந்ததுமே தலைமறைவாகிவிட்டு, பாஜக, ஆர்எஸ்எஸ் வழக்கறிஞர்கள் மூலம் பேசி விஜய்யை சிக்க வைத்துவிட்டார்... அத்துடன் விஜய்யின் அரசியலையும் முடித்து விட்டார்..
கொள்கை எதிரி பாஜக, அரசியல் எதிரி அதிமுக என்று தவெக அன்றே சொல்லிய நிலையில், இப்போது பாஜக அழுத்தம் தர துவங்கியிருக்கிறது.
இந்நிலையில்தான், கூட்டணி அமைக்கக்கூடிய அதிகாரத்தை விஜய்க்கு, தவெக பொதுக்குழு உறுப்பினர்கள் தந்துள்ளார்கள்.. இதற்காகவே அந்த பொதுக்குழு கூட்டப்பட்டிருக்கிறது. அப்படியானால் இனி கொள்கை விஷயத்தில் விஜய் மாற போகிறார்.. பல்டி அடிக்க போகிறார் என்று அர்த்தம்..
திமுக திமுக திமுக
தமிழகத்தில் எந்த விஷயத்தை பற்றியும் அந்த பொதுக்குழுவில் பேசவில்லை, தவெகவின் கட்சி வளர்ச்சி பற்றியும் பேசவில்லை.. கட்சியில் அமைப்பு உருவாக்குவதை பற்றியும் பேசவில்லை. எப்படி பிரச்சாரத்தை மேற்கொள்ள போகிறார்கள் என்பதை பற்றி பேசவில்லை.. எதையுமே பேசாமல், வெறும் திமுக மீது குற்றச்சாட்டுதான் வைக்கப்பட்டது. அந்த பொதுக்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானத்தைகூட, எந்த மீடியாவிலும் விவாதிக்கப்படவில்லை" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.
-
பெரம்பூரில் விஜய் போட்டியிட விரும்புவதன் பின்னணி? திமுகவை அசரடிக்கும் செல்வாக்கு உள்ளதா? -
விஜய் எவ்வளவு ஓட்டு வாங்குவார்? நேர்காணலின் போது திமுக நிர்வாகிகளிடம் ஸ்டாலின் எழுப்பிய கேள்வி! -
அழுத்தக்காரர் எடப்பாடி.. பின்னாலேயே வந்த பழைய கேஸ்.. டெல்லி செக் மேட்! மொத்தமும் விஜய்யால் வந்த வினை -
இரவோடு இரவாக ட்விஸ்ட்.. திமுக, அதிமுகவுக்கு 3ம் சக்தி செக்? முதல்வர் நாற்காலியில் அமரப்போவது இவரா? -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே -
காலம் கடந்துவிட்டது விஜய்! இந்த சமாளிப்புகள் இனி உதவாது! இப்தாருக்கு காத்திருந்தது ஏன்? -
விஜய் பாடல்களுக்கு தடை.. பள்ளி ஆண்டு விழாவில் பயன்படுத்த கட்டுப்பாடு.. காரணம் இதுதான் -
வதந்திகளை நம்பாதீங்க.. மதசார்பில் உறுதி! இப்தார் விழாவில் பாஜக கூட்டணிக்கு ரெட் சிக்னல் போட்ட விஜய் -
‘ஜன நாயகன்’ சென்சார் சிக்கல் தொடர்கிறது… படம் பார்க்க ரிவைசிங் கமிட்டியே வரலையாம்! விஜய்க்கு ஷாக்! -
சிரிச்சுக்கிட்டே சிபிஐ ஆபீஸில் இருந்து வந்த விஜய்! இரவில் விஜய்யை சந்தித்த டெல்லி அதானி தூதுவர் யார் -
திருப்பரங்குன்றத்திற்கு பேசாதது ஏன்? விஜய்க்கு சரமாரியாக கேள்வி எழுப்பிய தமிமுன் அன்சாரி! -
மம்தாவை சுத்துபோடும் பாஜக.. பதிலுக்கு சக்கர வியூகம் போட்டு தூக்கும் திரிணாமுல்! யாரும் எதிர்பார்க்கல












Click it and Unblock the Notifications