கையெழுத்து போட மறுத்த ‘தலை’.. தனியா பறந்த லெட்டர்.. இப்படி ஒரு ‘முடிச்சு’! ஆஹா.. என்னங்க நடக்குது?
சென்னை : டெல்லி துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டதைக் கண்டித்து பிரதமர் மோடிக்கு 9 எதிர்க்கட்சித் தலைவர்கள் கடிதம் எழுதினர். அதில் ஸ்டாலின் கையெழுத்துப் போட மறுத்ததாக கூறப்படுகிறது. இதற்குப் பின்னணி என்ன என்பது பற்றி பல்வேறு யூகங்கள் எழுந்துள்ளன.
எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டாக அனுப்பிய கடிதத்தில் கையெழுத்திடாத திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு தனியாக ஒரு கடிதம் எழுதினார்.
காங்கிரஸ் கட்சி மணீஷ் சிசோடியா கைதை ஆதரிக்கும் நிலையில், அதன் காரணமாக முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சிகளின் கடிதத்தில் கையெழுத்துப் போட மறுத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இதுகுறித்துப் பேசியுள்ள மூத்த பத்திரிகையாளர் மணி, திமுகவினரை குறிவைத்து எந்த ரெய்டும் நடக்கவில்லை என்பதையும், இந்த நடவடிக்கையையும் முடிச்சுப் போடாமல் இருக்க முடியாது என்கிறார்.

9 தலைவர்கள் கடிதம்
டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டது தேசிய அரசியலில் பேசுபொருளாக மாறிய நிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கடிதம் எழுதினர். சந்திர சேகர் ராவ், மம்தா பானர்ஜி உள்ளிட்ட 8 எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பிரதமருக்கு கடிதம் எழுதினர். அதில் மணீஷ் சிசோடியா ஆதாரங்கள் இன்றி கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மத்திய புலனாய்வு அமைப்புகளை மத்திய பாஜக அரசு தவறாக பயன்படுத்துவதாகவும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் குற்றம்சாட்டினர்.

கையெழுத்து போடாத ஸ்டாலின்
ஆம் ஆத்மி முன்மொழிந்த இந்தக் கடிதத்தில் காங்கிரஸ் கட்சி கையெழுத்திடவில்லை. அதேபோல, இந்தக் கடிதம் திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பப்பட்டும் அவர் கையெழுத்திட மறுத்ததாக கூறப்படுகிறது. பின்னர் தனியாக இந்த கைது தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார் முதல்வர் ஸ்டாலின். எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை தொடர்ந்து வலியுறுத்தி வரும் ஸ்டாலின், எதிர்க்கட்சிகளின் இந்தக் கடிதத்தில் கையெழுத்துப் போடாமல் தவிர்த்ததற்கு, காங்கிரஸ் காரணமா? அல்லது பாஜக காரணமா? என்ற கேள்விகள் எழுந்தன. இந்நிலையில், இது தொடர்பாக ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த பேட்டியில் பேசியுள்ளார் மூத்த பத்திரிகையாளர் மணி.

இரண்டுக்கும் முடிச்சு
பத்திரிகையாளர் மணி கூறுகையில், "தேஜஸ்வி யாதவ், அகிலேஷ் யாதவ், சரத் பவார், ஃபரூக் அப்துல்லா, மம்தா பானர்ஜி, சந்திரசேகர் ராவ், உத்தவ் தாக்கரே, அரவிந்த் கெஜ்ரிவால், பகவந்த் மான் ஆகிய 9 பேர் கையெழுத்து போட்ட கடிதத்தில் ஸ்டாலின் கையெழுத்து போடவில்லை. இதையும், திமுக ஆட்சிக்கு வந்த இந்த 2 ஆண்டு காலத்தில் திமுகவினரை குறிவைத்து எந்த ரெய்டும் நடக்கவில்லை என்பதையும் முடிச்சுப் போடாமல் இருக்க முடியாது. எதிர்க்கட்சித் தலைவர்கள் எழுதிய கடிதத்திற்கு பாஜக எதிர்வினை ஆற்றுகிறது. அதில் கையெழுத்து போடாத தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின், 2 நாட்கள் கழித்து தனியாக கடிதம் எழுதுகிறார் என்றால் என்ன அர்த்தம்? சில சம்பவங்களுக்கு பொழிப்புரை எழுத முடியாது. அந்த நிகழ்வுகளே உணர்த்தும். பொறுத்திருந்து பார்ப்போம்.

அரசியல் ஆயுதம்
விசாரணை அமைப்புகளை ஆயுதங்களாக பயன்படுத்துகிறது மத்திய பாஜக அரசு. டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், ஆயிரக்கணக்கான கி.மீ தொலைவில் இருக்கும் தெலுங்கானா முதல்வர் கேசிஆர் மகள் கவிதா குறிவைக்கப்படுகிறார். அவர் இந்த வழக்கில் தொடர்பில் இல்லாமல் பாஜக இந்த வலைப்பின்னலை ஏற்படுத்த வாய்ப்பில்லை, ஆனால், அரசியல் ஆயுதமாக இதனை பயன்படுத்துகிறது பாஜக. இதே அவர் பாஜகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்திருந்தால் இந்த நடவடிக்கை இருந்திருக்கிறது. இதை கட்டாயம் எதிர்த்துத்தான் ஆகவேண்டும்.

சவால்
எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதற்காகவே அமலாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்புகளை ஒரு அரசு பயன்படுத்துகிறது என்றால் அரசியல் ரீதியாக அதனை எதிர்க்க வேண்டியது எதிர்க்கட்சிகளின் கடமை. ஜனநாயக சக்திகளுக்கான சவால் என்பது ஒன்றுபட்ட போராட்டம் தான். மூன்றாவது முறையும் நாங்கள் தான் ஆட்சிக்கு வருவோம் என்ற பிம்பத்தை கட்டமைத்து மக்களை அஞ்ச வைத்துள்ள பாஜகவை வீழ்த்த வேண்டும் என்றால் எதிர்க்கட்சிகள் அனைத்தும், தங்களுக்கிடையேயான அற்ப வேறுபாடுகளைப் புறந்தள்ளி, கரம் கோர்த்துச் செயல்பட்டால் மட்டுமே வீழ்த்த முடியும்." எனத் தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications