வாட்ச் பண்ணுங்க! ரிசல்ட் நாளில்.. போகஸை திருப்பிய திமுக.. இதுதான் தமிழக அரசியலையே தீர்மானிக்க போகுது
சென்னை: மத்திய பிரதேசம் உள்ளிட்ட 4 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று வர உள்ளன. இந்த தேர்தல் முடிவுகளை தமிழ்நாட்டில் இருந்து திமுகவும் சில விஷ்யங்களுக்காக கூர்ந்து கவனித்து வருகிறதாம்.
5 மாநில சட்டசபை தேர்தல்கள் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளன. மிசோரம் - நவம்பர் 7ம் தேதி தேர்தல் நடந்தது. மத்திய பிரதேசம் - நவம்பர் 14ம் தேதி தேர்தல் நடந்தது. ராஜஸ்தான் - நவம்பர் 23ம் தேதி தேர்தல் நடந்தது. சத்தீஸ்கர் - நவம்பர் 7 மற்றும் 17ம் தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடந்தது. தெலுங்கானா தேர்தல் நேற்று நடந்தது. இதில் மிசோரம் தவிர 4 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று வர உள்ளன.
மொத்த கணிப்பு; இந்த 5 மாநில தேர்தல் தொடர்பாக கருத்து கணிப்புகள் சமீபத்தில் வெளியாகின. இந்த கணிப்புகள் பல்வேறு முக்கிய எச்சரிக்கைகளை விடுத்துள்ளன. மொத்த கணிப்புப்படி மத்திய பிரதேசத்தில் ஆட்சியை பாஜக தக்க வைக்கும் என்று பெரும்பாலான கணிப்புகள் தெரிவிக்கின்றன. ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை இழந்து பாஜக அங்கே வெற்றிபெறும் என்று பெரும்பாலான கணிப்புகள் தெரிவிக்கின்றன.

சத்தீஸ்கர் , தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்று கணிப்புகள் கூறுகின்றன. மிசோரத்தில் இழுபறி ஏற்படும் என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன. மொத்தத்தில் 5 மாநிலங்களில் 1ல் ஏற்கனவே ஆட்சியில் இருந்ததை.. ராஜஸ்தானில் காங்கிரஸ் இழக்க உள்ளது. அதே சமயம் தெலுங்கானாவில் ஆட்சியை பெற உள்ளது.
காங்கிரஸ் பின்னடைவு; இந்த தேர்தல் கிட்டத்தட்ட அரையிறுதி தேர்தல் போல பார்க்கப்படுகிறது. பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. லோக்சபா தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்த 5 மாநில தேர்தல் பார்க்கப்படுகிறது. அடுத்த வருடம் ஏப்ரல் - மே மாதம் லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது. இதையடுத்து தற்போது 5 மாநில தேர்தல் முடிவுகள் அதற்கு வரப்போகும் டீசர் போல பார்க்கப்படுகிறது.
( 4 மாநில தேர்தல் முடிவு வந்ததும்.. 2 பேரின் அரசியல் வாழ்க்கையே ஓவர் ஆக போகுது.. சரியும் சகாப்தம்!)
போகசை திருப்பும் திமுக; மத்திய பிரதேசம் உள்ளிட்ட 4 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று வர உள்ளன. இந்த தேர்தல் முடிவுகளை தமிழ்நாட்டில் இருந்து திமுகவும் சில விஷ்யங்களுக்காக கூர்ந்து கவனித்து வருகிறதாம்.
காங்கிரஸ் கட்சிக்கு எதிரான மனநிலை வடஇந்தியாவில் தொடர்ந்து உள்ளது இந்த கணிப்பு மூலம் தெரிகிறது. 5 மாநில தேர்தலில் சத்தீஸ்கர் தவிர வேறு எங்கும் காங்கிரஸ் ஆதரவு மனநிலை வடஇந்தியாவில் இல்லை. அதே சமயம் தென்னிந்தியாவில் காங்கிரஸ் வலிமை அடைந்து வருகிறது. முக்கியமாக கர்நாடகாவில் ஆட்சியை பிடித்த காங்கிரஸ் தற்போது தெலுங்கானாவில் ஆட்சியை பிடிக்கும் என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன.
முக்கியமாக வலுவான பிஆர்எஸ் ஆட்சியை தூக்கி எறிந்துவிட்டு காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கும் சூழல் ஏற்பட்டு உள்ளது. தெற்கில் காங்கிரஸ் கட்சியின் எழுச்சியை இது காட்டுகிறது.
திமுகவிற்கு போன செய்தி; இது திமுகவிற்கு போன முக்கியமான செய்தியாக பார்க்கப்படுகிறது. தெற்கில் காங்கிரஸ் ஆதரவு பெருகுகிறது.. வடக்கில் காங்கிரஸ் ஆதரவு சரிகிறது என்பதை திமுக உணரும் நிலை ஏற்பட்டு உள்ளது. தெற்கில் காங்கிரஸ் ஆதரவு உயர்வதை குறிப்பிட்டு தமிழ்நாட்டில் கூடுதல் இடங்களை காங்கிரஸ் கேட்கும் வாய்ப்புகள் உள்ளன.

லோக்சபா தேர்தலில் கூடுதல் இடங்களை காங்கிரஸ் கேட்கும் வாய்ப்புகள் உள்ளன. ஆனால் வடக்கில் காங்கிரசுக்கு ஆதரவு குறைவாக உள்ளது. தெற்கை மனதில் வைத்து திமுகவிடம் 15 இடங்களை காங்கிரஸ் கேட்கும் திட்டத்தில் உள்ளதாம். தெலுங்கானா வெற்றி காங்கிரஸ் உத்வேகத்தை அதிகரித்து கூடுதல் இடங்களை கண்டிப்பாக திமுகவிடம் லோக்சபா தேர்தலில் கேட்க வைக்கும்.
ஆனால் 2024 லோக்சபா தேர்தலில் திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கு அதிக இடங்களை கொடுக்காது என்கிறார்கள் விவரம் றிந்தவர்கள். கடந்த தேர்தலில் கூட்டணியில் காங்கிரசுக்கு 10 இடங்கள் தரப்பட்டது. விசிக, கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளுக்கு தலா 2 இடங்கள் கொடுக்கப்பட்டது. ஆனால் இந்த முறை அதை காங்கிரஸ் 6-7 இடங்கள் என்று குறைக்க திமுக முடிவு செய்துள்ளது. அதேபோல் விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு 1 இடம் என்ற அளவில் குறைக்க முடிவு செய்துள்ளனர்.
இதனால் கூட்டணி கட்சிகள் அப்செட் ஆகும் வாய்ப்பு உள்ளது. இதனால் கூட்டணியில் மோதல் கூட ஏற்படலாம். அதுவும் தெலுங்கானா வெற்றி காங்கிரசுக்கு கூடுதல் பலத்தை கொடுப்பதால் திமுக சுதாரிக்க வேண்டும் என்கிறார்கள் அரசியல் வல்லுனர்கள்.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications