சீமானின் வீடு வீங்கும், வங்கி கணக்குகள் வீங்கும்.. தம்பிகளுக்கோ.. திமுக ராஜீவ் காந்தி பொளேர்
திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி ஈரோடு கிழக்கு தேர்தலில் நாம் தமிழர் கட்சி வாங்கி வாக்கு குறித்து ட்வீட் போட்டுள்ளார்.
சென்னை: நாம் தமிழரின் வாக்கு என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்! ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது! மாறாக, சீமானின் வீடு வீங்கும், வங்கி கணக்குகள் வீங்கும் என்று திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி கூறியுள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் பிரச்சாரங்கள் பெரிய அளவில் விவாதமாக மாறியது. ஆளும் திமுகவை கடுமையாக விமர்சித்த அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆளும் கட்சிக்கு எதிரான அதிருப்தி ஓட்டுக்களை மாற்ற வேண்டும் என்ற நோக்கில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
பாஜகவிற்கு எதிரான வாக்குகள், சிறுபான்மையினர் வாக்குகளை பெற ஆர்வம் காட்டிய சீமான், அருந்ததியர்கள் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

பிரச்சார கட்டுப்பாடு
சீமான் பிரச்சாரம் ஒரு பக்கம் கடுமையாக இருந்த நிலையில், திமுகவினர் கடும் பதிலடியும் கொடுத்தனர். ஒருகட்டத்தில் திமுக மற்றும் நாம் தமிழர் கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டு சண்டையாகவும் மாறியது. இதில் நாம் தமிழர் கட்சியனரின் மண்டையும் உடைந்தது. தேர்தல் பிரச்சாரத்தின் போது நாம் தமிழர் கட்சிக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக அக்கட்சியின் வேட்பாளர் மேனகா நேரடியாக குற்றம்சாட்டினார். இது ஒருபுறம் எனில், அருந்ததியர்கள் குறித்து சீமான் பேசியதை வைத்து அவரை டார்க்கெட் செய்த கட்சிகள் கடைசி நேரத்தில் கடுமையாக அவருக்கு எதிராக பிரச்சாரம் செய்தன. இதுவும் நாம் தமிழர் கட்சிக்கு வர வேண்டிய வாக்குகளை குறைத்ததாகவும் கூறப்பட்டது

நாம் தமிழர் கட்சி
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 1,10,156 வாக்குகள் பெற்றார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 43,922 வாக்குகள் பெற்றார். இதன் மூலம் ஈவிகேஎஸ் இளங்கோவன் 66 ஆயிரத்து 234 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.இந்தத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் 10,827 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் ஆனந்த் 1,432 வாக்குகளும் பெற்றனர். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் 10,827 வாக்குகள் பெற்றதால் டெபாசிட்டை இழந்தார். கடந்த தேர்தலில் இதே ஈரோடு கிழக்கு தொகுதியில் 11629 வாக்குகளை பெற்றிருந்த நாம் தமிழர் கட்சி இம்முறை 825 வாக்குகள் மட்டுமே குறைவாக பெற்றிருக்கிறது. இதை பார்க்கும் போது நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கியில் பெரிய சரிவு ஏற்பட்டதாக தெரியவில்லை.

400 கோடி செலவு
அதேநேரம் ஈரோடு கிழக்கு தொகுதியில் மக்களை காசு கொடுத்து விலைக்கு வாங்கி ஓட்டு போட வைத்திருப்தாக திமுக மீது நாம் தமிழர் கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர் பணபலத்தால் வென்றுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர். நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா நவநீதன் செய்தியாளர்களிடம் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. "மக்களின் வறுமையை மூலதனமாக பயன்படுத்துகிறது திமுக. ரூ.400 கோடி செலவு செய்திருக்காங்க.. நாளை ரூ.4000 கோடி கொள்ளையடிக்கப் போறாங்க.. 39 லட்சம் மட்டும் செலவு செய்து இந்த தேர்தலை சந்தித்து இருந்தால் திமுக கூட்டணி காங்கிரஸ் காணாமல் போய் இருக்கும். மக்களுக்கு கொடுத்த ரூ.20,000 பணமெல்லாம் டாஸ்மாக்குக்கு போய்விட்டது.. பட்டியில் அடைத்து வைத்ததால் அவர்கள் யாருமே வேலைக்கும் போகவில்லை.

தேர்தல் ஆணையம்
இனிமேல்தான் அவங்களுக்கு கஷ்டப்படுவாங்க.. அதனால், தேர்தலுக்கு பிறகு கொடுப்பதாக சொன்ன ரூ.5,000 மதிப்பிலான மளிகை பொருட்களை மக்களுக்கு இப்பவே கொடுத்துவிடுங்கள். திமுக கூட்டணி காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது என பாராட்டு விழாவையெல்லாம் நடத்துவார்கள். அதுகூடவே, தேர்தல் ஆணையத்துக்கு ஒரு பாராட்டு விழாவையும் கொண்டாடுங்கள்.. ஏன் என்றால், அவர்கள் மட்டும் இல்லாவிட்டால், இந்த வெற்றி சாத்தியமில்லை. ஒவ்வொரு முறையும் புகார் அளித்தும் அப்படியா? அப்படியா? என்று கேட்ட தேர்தல் ஆணையத்துக்கு நிச்சயமாக பாராட்டு விழா நடத்தியே ஆகவேண்டும்" என மேனகா நவநீதன் தெரிவித்தார்.

விலைபோகவில்லை
நாம் தமிழர் கட்சியின் இடும்பவனம் கார்த்திக் வெளியிட்டிருந்த ட்வீட் பதிவில், 10,804 ! நாம் தமிழர் கட்சி பெற்ற வாக்குகள் விலைபோகாத மண்ணின் மக்களின் சாட்சியம்! நேர்மைக்கும், உண்மைக்கும் எப்போதும் இடமுண்டு என நீதியின் பக்கம் நிற்கும் இனமானத் தமிழர்களின் அங்கீகாரம்! சனநாயகம் செத்துவிடக் கூடாது எனக் கருதி நிற்கும் உண்மைத்தமிழர்களின் உளவிருப்பம்! என்று கூறியுள்ளார்.

காளியம்மாள் ட்வீட்
நாம் தமிழர் கட்சியின் காளிம்மாள் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில், "ஈரோடு கிழக்கு நல்ல விலைக்கு விற்பனையானது. 10,804 பேரும் நெஞ்சை நிமிர்த்து பெருமை பட்டுக்கொள்ளுங்கள்.நீங்கள் தமிழனின் இனமானம் காக்க, தூய்மை அரசியல் பிறக்க இந்த மண்ணையும், மக்களையும் நேசிக்க கூடிய நேர்மையாளருக்கு தான் வாக்களித்தோம் என்று." என கூறியிருந்தார்.

தம்பிகளுக்கு கேஸ்
இந்நிலையில் திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி நாம் தமிழர் கட்சி வாங்கி வாக்கு குறித்து ட்வீட் போட்டுள்ளார். அந்த ட்வீட் பதிவில், நாம் தமிழரின் வாக்கு என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்! ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது! மாறாக, சீமானின் வீடு வீங்கும், வங்கி கணக்குகள் வீங்கும், தோட்டம் தொறவு என சொத்து பத்து வீங்கும்,சீமானின் பேச்சை கேட்டு வாய் கோளாறு சண்டை செய்யும் (பாவம்) தம்பிகளின் வழக்குகளும் சேர்த்தே வீங்கும்! என பதிவிட்டுள்ளார்.
-
Land Rover Defender கான்வாயில் வரும் ஸ்டாலின் பெயரில் ஒரு வாகனம் கூட இல்லை! சீமான் சொத்து எவ்வளவு? -
தன்னையும், மக்களையும் நம்பாதவர்தான்.. 2 தொகுதியில் போட்டியிடுவார்! அட்டாக் மோடில் சீமான் -
யாருக்கு ஓட்டு போட போறீங்க! வாரிசு அரசியலுக்கா? சீமான் சட்டசபைக்கு போகனும்! சீனுக்குள் வந்த சேரன்! -
என்னது பி டீமா.. ஏ டீம் யாருன்னு தெரியுமா.. ஆவேசமான சீமான்.. விஜயையும் சும்மா விடலையே -
Thirumavalavan: சிதம்பரம் இடைத்தேர்தல் செலவை திருமாவளவன் ஏற்பாரா? சீமான் கேள்வி -
ஒரே ஒரு தோட்டா.. காட்டி விடுவேன் டாட்டா.. சமூக விரோதிகளுக்கு சீமான் வார்னிங் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம்












Click it and Unblock the Notifications