அவரு ஆர்எஸ்எஸ்காரர்.. தமிழரான சிபி ராதாகிருஷ்ணனை ஆதரிக்காதது ஏன்? சபாநாயகர் அப்பாவு கொடுத்த விளக்கம்
சென்னை: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணனை பாஜக வேட்பாளராக நிறுத்தியுள்ளது. இந்தியா கூட்டணி சார்பில் முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டுள்ளார். தமிழரை ஆதரிக்கவில்லை என திமுக மீது குற்றச்சாட்டு எழுந்திருக்கும் நிலையில் சிபி ராதாகிருஷ்ணனை ஆதரிக்காதது ஏன்? என தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு விளக்கம் அளித்து இருக்கிறார்.
மேற்குவங்க மாநில ஆளுநராக இருந்த ஜகதீப் தன்கர் குடியரசு துணை தலைவராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதை அடுத்து இந்திய குடியரசு துணைத் தலைவர் பதவி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் தேர்தல் ஆணையத்தின் சார்பில் குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. நீண்ட ஆலோசனைக்கு பிறகு தமிழகத்தைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவரும் மகாராஷ்டிரா மாநில ஆளுநராக இருந்த சிபி ராதாகிருஷ்ணன் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

குடியரசு துணைத்தலைவர்
தொடர்ந்து இந்தியா கூட்டணியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற நிலையில், அந்த கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டார். குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தமிழகத்தைச் சேர்ந்த திருச்சி சிவா திமுக தரப்பில் இந்தியா கூட்டணி மூலம் களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென சுதர்சன் ரெட்டி களமிறக்கப்பட்டிருக்கிறார்.
சுதர்சன் ரெட்டி
பாஜக கூட்டணியில் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் இருக்கும் நிலையில் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பாஜகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் சுதர்சன் ரெட்டி களம் இறக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இது ஒரு புறம் இருக்க அப்துல் கலாம் இரண்டாவது முறை குடியரசுத் தலைவராக இருந்ததை தடுத்தது போல ஒரு தமிழர் குடியரசு துணைத் தலைவராக பதவி ஏற்பதை திமுக தடுப்பதாக பாஜக விமர்சித்து வருகிறது.
சிபி ராதாகிருஷ்ணன்
இந்த நிலையில் தமிழரான சிபி ராதாகிருஷ்ணனை குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் ஆதரிக்காதது ஏன் என தமிழ்நாடு சட்டசபை சபாநாயகர் அப்பாவு விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள அவர்," சி.பி. ராதாகிருஷ்ணன் ஆர்.எஸ்.எஸ். கொள்கையில் உறுதியாக இருப்பதால், அவருக்கு அந்த வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கலாம். அதனால் தமிழ்நாட்டுக்கு என்ன மாற்றம் வந்து விடப் போகிறது? தமிழக மீனவர் பிரச்சனைக்கோ, தமிழகத்திற்கு வர வேண்டிய நிதி குறித்தோ இதுவரை மத்திய அரசில் உள்ள தமிழக அமைச்சர்கள் குரல் கொடுத்திருக்கிறார்களா?
அப்பாவு
ஆனால், 'இந்தியா' கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்டுள்ள சுதர்சன் ரெட்டி, உச்சநீதிமன்ற நீதியரசராக இருந்த போது, சாமானிய மக்களுக்காக வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புகளை வழங்கியவர். ஏழை மக்களுக்கு வழங்கப்பட்ட பட்டா நிலத்தை அரசு திரும்ப எடுத்தால், பட்டாதாரர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தவர். அதுமட்டுமின்றி, வெளி நாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை மீட்க சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) அமைக்க உத்தரவிட்டவரும் அவர் தான். அம்பானி சகோதரர்களுக்கு இடையேயான வழக்கில், இயற்கை எரிவாயு பொதுச் சொத்து, அது நாட்டு மக்களுக்குத்தான் சொந்தம் என்று தீர்ப்பளித்தவர். இப்படிப்பட்ட தகுதியான ஒருவரைத் தான் எங்கள் கூட்டணி ஆதரிக்கிறது" என கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications