பெரிய சிக்கலாகிவிட்டது! முடிவை மாற்றிக்கொள்ளுங்கள் விஜய்.. கெஞ்சிய ரசிகர்கள்! என்ன நடக்குது தவெகவில்
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி நடத்தி வரும் நிலையில்.. விஜயின் ரசிகர்கள் அவரிடம் முக்கியமான கோரிக்கை ஒன்றை வைத்துள்ளனர்.
ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் பொங்கல் என்றால் அது பெரிய சினிமா கொண்டாட்டம். பொங்கலுக்குத்தான் பொதுவாக பெரிய படங்களின் போட்டி இருக்கும். ரஜினி - கமல் பொங்கலுக்கு சினிமா வெளியிட்டு போட்டியிட்டு உள்ளனர்.

அதன்பின் விஜய் - அஜித் படங்கள் இதேபோல் மோதலை சந்தித்து இருக்கின்றன. அதோடு இல்லாமல் விக்ரம் - சூர்யா படங்களும் கூட பொங்கலுக்கு மோதி உள்ளன. இப்படி பொங்கல் மோதல் என்பது சாதாரண விஷயம் கிடையாது.
பொங்கல் ரேஸில் அதிக முறை விஜய்தான் வென்றும் இருக்கிறார். இப்படிப்பட்ட நிலையில்தான் விஜய் சினிமாவில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். அதன் மூலம் விஜய் நடிக்கும் படங்கள் இனி பொங்கலுக்கு வெளியே வராது. விஜய் தற்போது தனது 69 வது படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். இது இந்த வருட கடைசியில் வெளியாகும்.
பொங்கல் ரேஸில் விஜய் இல்லை. இப்போது அஜித் நடிக்கும் விடாமுயற்சி படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் நிலை இருந்தது. ஆனால் பொங்கலுக்கு படம் ரிலீஸ் இல்லை என்று நேற்று அறிவிக்கப்பட்டது. குட் பேட் அக்லி படமும் ரிலீஸ் ஆகவில்லை.
பொதுவாக விஜய் விழா நாட்களில் சரியாக ரிலீஸ் என்று சொன்னால் ரிலீஸ் செய்வார். அரசியல் அழுத்தம்.. சினிமா அழுத்தம் இல்லாமல் வேறு எந்த விதத்திற்காகவும் விஜய் படம் ரிலீஸ் தள்ளிப்போனது இல்லை. அஜித் அப்படி இல்லாமல் போட்டியில் இருந்து வெளியேறி உள்ளார். அதுவும் அழுத்தம் எதுவும் இல்லாமலே ரிலீஸ் தள்ளிப்போய் உள்ளது. இதனால் இந்த முறை பொங்கலுக்கு டயர் 1 ஹீரோக்கள் படம் இல்லாமல் தியேட்டர்கள் பரிதாபமான நிலையை அடைந்து உள்ளது.
சினிமா மீது அஜித் பெரிய ஆர்வமும் காட்டுவது இல்லை. அவர் ரேஸிங்கில் கவனம் செலுத்துகிறார். தனது ரசிகர்கள் கொண்டாட்டமாக சொல்லும் கோஷத்தை கூட நிறுத்தும்படி கூறுகிறார். இப்படி இருக்க ரிலீஸ் என்று சொல்லிவிட்டு 2 வாரம் முன் ரிலீஸ் இல்லை என்கிறார். இதெல்லாம் அஜித் ரசிகர்களையும் அப்செட் ஆக்கி உள்ளது.
இப்படிப்பட்ட நிலையில்தான் விஜய் மீண்டும் வர வேண்டும். சினிமாவில் நடிக்க வேண்டும். சினிமாவிற்குள் மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்க வேண்டும்.. விஜய் முடிவால் தமிழ் திரையுலகிற்கு பெரிய சிக்கலாகிவிட்டது..முடிவை மாற்றிக்கொள்ளுங்கள் விஜய்.. என்று அவரின் ரசிகர்கள் கோரிக்கை வைக்கின்றனர். அரசியல் இருக்கட்டும்.. ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் துணை முதல்வர் ஆன பின்பும் கூட சினிமாவில் நடிக்கிறார். அடுத்த படத்தில் கூட அவர் சைன் செய்துள்ளார்.
அதிலும் பவன் கல்யாண் நடிக்கும் அடுத்த படம் 2 பாகங்களாக வருகிறது. விஜய் அப்படி நடிக்க வேண்டும். அதுவே தமிழ் சினிமாவிற்கு நல்லது. விஜய் முடிவால் தமிழ் திரையுலகிற்கு பெரிய சிக்கலாகிவிட்டது.. இதனால் தனது முடிவை விஜய் மாற்றிக்கொள்ள வேண்டும்.. அவர் ரிட்டையர் ஆக கூடாது என்று அவரது ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications