மகளிர் உரிமைத் தொகை.. யாருக்கெல்லாம் ரூ.1000 பணம் கிடைக்கும்? விண்ணப்பித்தவர்களுக்கு ஷாக் தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தில் விண்ணப்பம் செய்த அனைவருக்கும் பணம் வழங்கப்படும் என அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. ஆனால் தீபாவளிக்கு முன்னதாக இதற்கான அறிவிப்பு வெளியாகாது என்கிறார்கள்.

தீபாவளி முன் இதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என்று செய்திகள் வந்தன. ஆனால் இதற்கான வாய்ப்பு இல்லை என்று அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்னும் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் விண்ணப்பங்கள் வந்தபடியே இருக்கின்றன. இனி தொடர்ந்து விண்ணப்பங்கள் வரும்.

Tamil Nadu Government Notification magalir urimai thogai

டிசம்பர் வரை உங்களுடன் ஸ்டாலின் திட்டம் நடக்கிறது. உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மகளிர் உரிமை தொகை மனுக்கள் எல்லாம் பெறப்பட்ட பின்பே இதில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

நேற்று தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மகளிர் உரிமை தொகை திட்டம் தொடர்பாக விளக்கம் கொடுத்தார். அதில், மகளிர் உரிமை தொகை திட்டம் சிறப்பாக செயல்படுகிறது. ஆனாலும் இதில் சில குறைகள் உள்ளன. மக்கள் பலருக்கும் இன்னமும் பணம் சென்று சேரவில்லை என்று கூறுகிறார்கள். அதனால்தான் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் விண்ணப்பம் செய்ய மொத்த மக்களில் 60% பேர் இந்த திட்டத்திற்கு விண்ணப்பம் செய்துள்ளனர்.

உதயநிதி ஸ்டாலின் தகவல்

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தால் ஒரு கோடியே 15 லட்சம் பெண்கள் பயன்பெறுகிறார்கள். , காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் 1 லட்சத்து 73 ஆயிரம் பெண்கள் இத்திட்டத்தில் பயனடைந்து வருகிறார்கள்.

'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தில் மனு அளித்த பெண்களுக்கு முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, கலைஞர் உரிமைத்தொகை திட்டம் விரைவில் அனைவருக்கும் வழங்கப்படும். ஒன்றிரண்டு மாதங்களில் அவர்களுக்கு கண்டிப்பாக பணம் வழங்கப்படும் என்றும் உதயநிதி ஸ்டாலின் உறுதி அளித்தார்.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் விரிவாக்கம்

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் விரிவாக்கத்திற்கு விண்ணப்பம் செய்தவர்களுக்கு தீபாவளிக்கு முன்பாக அது தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்கீழ், கடந்த ஒரு மாத காலமாக விண்ணப்பங்கள் தீவிரமாகப் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. விரைவில் விண்ணப்பித்தவர்களுக்கான முதல் பட்டியல் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகின்றன. "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தின் கீழ் பெறப்பட்ட விண்ணப்பங்கள் படிப்படியாக ஆய்வு செய்யப்படுகின்றன. தீபாவளி பரிசாக இவர்களுக்கு அக்டோபர் 15ம் தேதி முதல் கட்டமாக பணம் அனுப்பப்படலாம் என்று தகவல்கள் வருகின்றன.

மகளிர் உரிமை தொகை

இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பித்தவர்களுக்கு 45 நாட்களுக்குள் பதில் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆகஸ்ட் 28ஆம் தேதியுடன் "உங்களுடன் ஸ்டாலின்" திட்டம் தொடங்கி 45 நாட்கள் நிறைவடைகின்றன. எனவே, முதல் நாளில் அல்லது முகாம் தொடங்கிய முதல் வாரத்தில் விண்ணப்பித்தவர்கள் ஆகஸ்ட் 28 முதல் பதில்களைப் பெற வேண்டும். ஆனால் இவர்களுக்கான பதில்கள் அனுப்பப்படவில்லை.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு விண்ணப்பித்தவர்கள் தங்கள் மனுவின் நிலையை https://kmut.tn.gov.in/ என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் தெரிந்துகொள்ளலாம்.

உங்களுடன் ஸ்டாலின் - மகளிர் உரிமைத் தொகை திட்டம்

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் பயனாளிகள் மற்றும் தகுதியற்றவர்கள் குறித்த தகவல்கள் சமீபத்தில் வெளியாகின. தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையின்படி, "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம்களில் சுமார் 25 லட்சம் மனுக்கள் பெறப்பட்டன. இவற்றில், மகளிர் உரிமைத் திட்ட நிதி உதவி கோரி 15 லட்சம் பெண்கள் விண்ணப்பித்துள்ளனர்.

பெறப்பட்ட அனைத்து மனுக்களும் முறையாகப் பதிவு செய்யப்பட்டு, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். மனுக்கள் மீதான செயல்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+