ரத்தத்தைப் பார்த்தாலே தலை சுற்றுகிறதா? உடலில் நடக்கும் விசித்திரமான மாற்றம் இதுதான்!
டெல்லி: சிறு காயத்தால் ரத்தம் வருவதைப் பார்த்தாலே சிலருக்கு மயக்கம் வந்துவிடும். என்ன இந்தச் சின்ன விஷயத்திற்குப் பதறிப் போகிறார்கள் என நமக்கே கூட சந்தேகம் வரும். ஆனால், இதற்குப் பின்னால் ஒரு அறிவியல் காரணமாக இருக்கிறதாம். 'வேசோவாகல் சின்கோப்' காரணமாகவே அவர்களுக்கு இது போன்ற பாதிப்பு ஏற்படுகிறதாம். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
நம்மை சுற்றி நமது நண்பர்களிலேயே சிலருக்கு அடிக்கடி மயக்கம் வரும். அதிலும் குறிப்பாக ஒரு சொட்டு ரத்தத்தைப் பார்த்தாலே மயங்கி விழுந்துவிடுவார்கள். அவர்களுக்கு வேறு எந்தவொரு பாதிப்பும் இல்லை என்றாலும் ரத்தத்தைப் பார்த்தவுடனேயே அவர்கள் மயங்கி விடுவார்கள். இதற்கு என்ன காரணம் என்பதை நாம் பார்க்கலாம்.

வேசோவாகல் சின்கோப்
'வேசோவாகல் சின்கோப்' என்பதன் காரணமாகவே இதுபோல மயக்கம் ஏற்படுகிறதாம். பதற்றம் ஏற்படும்போது உடல் எப்படி அதைக் கையாள்கிறது என்பதைத் தான் 'வேசோவாகல் சின்கோப்' என்கிறார்கள். இது தொடர்பாக இதய நோய் நிபுணர் டாக்டர் அகில் நாரங் கூறுகையில், "மூளைக்கு ரத்த ஓட்டம் தற்காலிகமாகக் குறையும்போது, மயக்கம் ஏற்படுகிறது. இது திடீரென இதயத் துடிப்பு அதிகரிப்பது அல்லது ரத்த அழுத்தம் குறைவதால் நிகழலாம். இதனால் ஒரு குறுகிய நேரத்திற்குச் சுயநினைவு இல்லாமல் போகும்.
இதுபோன்ற சூழல்களில் ஏற்படும் மயக்கம் ஆபத்தானது இல்லை. இருப்பினும், மயங்கி விழும்போது எதிர்பாராத விதமாக நமது உடலில் காயங்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே, மயக்கத்திற்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்த உடனேயே சற்று நாம் சுதாரித்துக் கொள்வது பாதுகாப்பானதாக இருக்கும். இல்லையென்றால் காயம் ஏற்படலாம்" என்றார்.
ஏன் மயக்கம்
இந்த வேசோவாகல் சின்கோப் என்பது நரம்பு மண்டலத்தின் திடீர் அனிச்சை செயலால் ஏற்படும் ஒருவித 'ரிஃப்ளெக்ஸ் சின்கோப்' (reflex syncope) ஆகும். ரத்தத்தைப் பார்க்கும்போது அல்லது திடீரென மன அழுத்தத்திற்கு ஆளாகும்போது சிலருக்கு மட்டும் இதுபோல ஏற்படும். டாக்டர் நாரங் மேலும் கூறுகையில், "ரத்தத்தைப் பார்க்கும் போது சிலருக்கு மன அழுத்தம் ஏற்படும். அப்போது சிலருக்கு வழக்கத்தை விட அதிகமாக வேகஸ் நரம்பு தூண்டப்படும். இந்த வேகஸ் நரம்பு தான் இதயம், ரத்த அழுத்தம் மற்றும் செரிமானச் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தும்" என்றார்.
அந்த நரம்பில் ஏற்படும் எதிர்பாராத மாற்றம் ரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பைத் திடீரெனக் குறைக்கிறது. இதன் காரணமாக ரத்த நாளங்கள் விரிவடைந்து, மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் குறைகிறது. மூளைக்குப் போதுமான ரத்தம் கிடைக்காததால், தலைச்சுற்றல், மயக்கம் அல்லது தற்காலிகச் சுயநினைவு இழப்பு போன்றவை ஏற்படுகிறது..
யாருக்கு ஏற்படும்
மூன்றில் ஒரு பகுதியினருக்கு இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படுகிறதாம். உடலில் நீர்ச்சத்து குறைவு, நீண்ட நேரம் நிற்பது அல்லது மன அழுத்தம் ஆகியவை மயக்கம் வரும் வாய்ப்பை அதிகரிக்கலாம் என்கிறார் டாக்டர் நாரங். அதேநேரம் மயக்கம் வந்தாலே வலிப்பு நோய் அல்லது இதய நோய் என்று மக்கள் நினைப்பது தவறு என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
சிலருக்கு மரபணு ரீதியாகவே பிரச்சினை இருக்கலாம். இதனால் அவர்களுக்கு அடிக்கடி மயக்கம் ஏற்படலாம். ஆனால் பெரும்பாலும் திடீர் மன அழுத்தம் காரணமாகவே மயக்கம் ஏற்படுகிறது. மயக்கம் ஏற்படுவதற்கு முன்பு தலைச்சுற்றல், ஊசலாடுதல், உள்ளங்கைகளில் வியர்வை, பார்வை குறுகி வருவது போன்ற உணர்வு, காதுகளில் இரைச்சல், குமட்டல் ஏற்படுமாம். இந்த அறிகுறிகள் சில வினாடிகளிலிருந்து ஒரு நிமிடம் வரைதான் இருக்கும்.
என்ன செய்ய வேண்டும்!
மூளைக்குச் செல்லும் ரத்தத்தின் அளவு குறைந்துவிட்டதையே இது காட்டுகிறது. இவை உயிருக்கு ஆபத்தானவை இல்லை என்ற போதிலும், கீழே விழுந்து காயம் ஏற்பட்டால் அது உயிருக்கே கூட ஆபத்தாக முடியலாம். இதுபோன்ற நிலைகளில் என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்கிய டாக்டர் நாரங், "மூளைக்கு நாம் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க வேண்டும். முடிந்தால் கால்களை உயர்த்திப் படுத்துக்கொள்ளுங்கள். அல்லது உட்கார்ந்து தலையை உங்கள் முழங்கால்களுக்கு இடையில் வைத்துக்கொள்ளுங்கள். இறுக்கமான ஆடைகளைத் தளர்த்தி, மெதுவாகச் சுவாசிக்க வேண்டும். இவை ஓரளவுக்கு மயக்கத்தை நிறுத்தும்" என்றார்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங்












Click it and Unblock the Notifications