10 நிமிடத்திற்கு படாத பாடு! ஓபிஎஸ்ஸுக்கு கிடைக்காத "சான்ஸ்".. கிளைமேக்ஸை எழுதிய டெல்லி.. கேம் ஓவர்?
சென்னை: ஓ பன்னீர்செல்வத்திற்கு கிடைக்காத ஒரு வாய்ப்பு.. அவர் பல முறை முயன்றும் நடக்காத ஒரு சம்பவம் தற்போது எடப்பாடி பழனிசாமிக்கு நடந்து உள்ளது.
அதிமுகவில் உட்கட்சி மோதல் உச்சத்தில் உள்ளது. தற்போதைய நிலவரப்படி கட்சியில் எடப்பாடி பழனிசாமி கைதான் ஓங்கி உள்ளது.
அதிமுக விவகாரத்தில் டெல்லி மறைமுகமாக காய்களை நகர்த்தி வருவதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஓ பன்னீர்செல்வம் சார்பாக முன்பே டெல்லியின் உதவி வேண்டி பல்வேறு முயற்சிகள் செய்யப்பட்டன.
ஓ பன்னீர்செல்வம் ஜனாதிபதி வேட்பாளர் திரௌபதி முர்மு வேட்புமனு தாக்கல் செய்த போது அதற்காக டெல்லி சென்றார். தன் மகன் எம்பி ஓ பி ரவீந்திரநாத் உடன் ஓ பன்னீர்செல்வம் டெல்லி சென்றார்.

ஓ பன்னீர்செல்வம்
அப்போதே ஓ பன்னீர்செல்வம் பிரதமர் மோடியின் ஆதரவை பெற முயன்றார். முர்மு வேட்புமனு தாக்கல் செய்த போது பிரதமர் மோடியுடன் ஓ பன்னீர்செல்வமும் உடன் இருந்தார். இந்த பயணம் ஓ பன்னீர்செல்வத்திற்கு வெற்றிகரமாக அமைந்ததாக கூறப்பட்டது. டெல்லியில் இருந்து திரும்பி வந்த ஓ பன்னீர்செல்வம் மிகவும் சந்தோசமாக திரும்பி வந்ததாக கூறப்பட்டது. ஆனாலும் அதன்பின் ஓ பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக கட்சிக்கு உள்ளேயும், வெளியேயும் பெரிதாக எதுவுமே நடக்கவில்லை.

எடப்பாடி
அதோடு ஓ பன்னீர்செல்வம் தன்பின் டெல்லியில் நடந்த ராம்நாத் கோவிந்தின் பிரிவு உபசார விழாவிலும் கூட கலந்து கொள்ளவில்லை. இந்த விழாவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் சில அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆனால் ஓ பன்னீர்செல்வம் இதில் கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில்தான் ஓ பன்னீர்செல்வத்திற்கு தொண்டர்கள் ஆதரவு இல்லை என்பதால் டெல்லி அவரை கழற்றிவிட்டுவிட்டதாக கூறப்பட்டது.

டெல்லி
அதன்பின் சென்னைக்கு வந்த பிரதமர் மோடியை ஓ பன்னீர்செல்வம் தனியாக சந்தித்தார். விமான நிலையத்தில் மோடி திரும்பி செல்கையில் 10 நிமிடம் ஓ பன்னீர்செல்வம் அவரை சந்தித்தார். ஆனால் இதில் அவருக்கு எதுவும் பாசிட்டிவ் தகவல்கள் கிடைத்ததாக தெரியவில்லை. இந்த நிலையில்தான் ஓ பன்னீர்செல்வத்திற்கு கிடைக்காத ஒரு வாய்ப்பு.. அவர் பல முறை முயன்றும் நடக்காத ஒரு சம்பவம் தற்போது எடப்பாடி பழனிசாமிக்கு நடந்து உள்ளது. இந்த முறை எடப்பாடி பழனிசாமி மோடியை தனியாக சந்திக்க உள்ளார்.

3 நாள் பயணம்
3 நாள் பயணமாக எடப்பாடி டெல்லிக்கு செல்கிறார். இந்த பயணத்தில் அவர் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார். டெல்லி தரப்பில் இருந்துதான் இந்த அழைப்பு எடப்பாடி பழனிசாமிக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதுதான் தற்போது ஓ பன்னீர்செல்வம் தரப்பை அப்செட் ஆக்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால், அதிமுக பொதுக்குழு வழக்கில் ஏற்கனவே உயர் நீதிமன்ற தீர்ப்பு ஓ பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக வரவில்லை. இந்த வழக்கு தற்போது உச்ச நீதிமன்றத்தில் உள்ளது.

அப்செட்
இந்த நிலையில் நேரம் பார்த்து எடப்பாடி டெல்லிக்கு செல்வது ஓ பன்னீர்செல்வம் தரப்பை கண்டிப்பாக அப்செட் ஆக்கி இருக்கும். அதேபோல் மோடியுடன் 10 நிமிட சந்திப்பிற்கே ஓ பன்னீர்செல்வம் பகீரத முயற்சிகளை எடுத்தார். கஷ்டப்பட்டுதான் சந்திப்பு நடத்தினார். ஆனால் எடப்பாடிக்கு இப்போது டெல்லியில் இருந்தே அழைப்பு வந்து இருப்பதால் திகைப்பில் ஆழ்ந்து உள்ளார். எடப்பாடியின் இந்த டெல்லி பயணம் காரணமாக.. ஓ பன்னீர்செல்வத்திற்கு எதிராக மொத்தமாக நிலைமை திரும்புமா.. கட்சி மோதல் முடிவிற்கு வருமா.. அல்லது எடப்பாடிக்கு எதிராக காட்சிகள் திரும்புமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
-
மீண்டும் திமுக தான்.. விஜய்யின் தவெகவால் ஸ்டாலினுக்கு ‘ஜாக்பாட்’.. அதிமுகவிற்கு ஷாக்! டேட்டா பாருங்க -
தொகுதி மறுவரையறை! சண்டை செய்யும் திமுக.. வேடிக்கை பார்க்கும் அதிமுக! என்னதான் பிரச்சனை? -
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவோம்.. பாஜக வாக்குறுதியை சொல்லி வாக்கு சேகரித்த ராஜன் செல்லப்பா! -
பழைய நியூஸ் பேப்பரை காட்டி பிரச்சாரம் செய்யும் எடப்பாடி பழனிசாமி.. உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலடி -
லட்டு மாதிரி கிடைத்த வாய்ப்பு.. கையில் இருந்த தங்கத்தை மிஸ் பண்ணிட்டாரே.. எடப்பாடி பழனிசாமி! -
ஸ்டாலினால் பொறுக்க முடியவில்லை.. நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் குறித்த கேள்விக்கு எடப்பாடி ரியாக்ஷன் -
ஒன்னு கூடிட்டாங்க.. அஜித்துடன் ரஜினி! எடப்பாடிக்கு ஏகப்பட்ட ஹேப்பி! காத்திருந்த திண்டுக்கல் கிஃப்ட்! -
கூட்டணி தர்மம் காற்றில் பறக்குது.. தேமுதிக மட்டும்தான் இருக்கும்.. திமுகவை கழற்றிவிட்ட கூட்டணிகள்? -
அண்ணனின் 5 சவரன் தங்கம் அதிரடி ஆஃபர்.. ஆடிப்போன போடி களம்! ஓபிஎஸ் போட்ட தேனி கணக்கு செட்டாகுமா? -
எடப்பாடியில் குமுறும் "குக்கர்.." கடைசி நேரத்தில் விஐபி தொகுதியில் விரிசல்? அதிர்ச்சியில் இபிஎஸ் -
எடப்பாடி பழனிசாமியிடம் விலை போய்விட்டார்.. தவெகவில் கருப்பு ஆடு.. ஆதவ் அர்ஜுனா நேரடி குற்றச்சாட்டு! -
EVM இயந்திரத்தில்.. வேட்பாளர்களின் பெயர் வரிசை தீர்மானிக்கப்படுவது எப்படி? சுவாரசிய தகவல்!










Click it and Unblock the Notifications