அஸ்வின் இப்படி பண்ணது சரியா? முகத்தை தொங்கபோட்டு.. கோபமாக சீறிய இளம் வீரர்! பரபர சம்பவம்! என்னாச்சு
சென்னை: நேற்று ராஜஸ்தான் குஜராத் அணிகளுக்கு இடையிலான போட்டியில் அஸ்வின் - ரியான் பராக் நடந்து கொண்ட விதம் விமர்சனங்களை சந்தித்துள்ளது.
Recommended Video
2022 ஐபிஎல் தொடரில் நேற்று ராஜஸ்தானை வீழ்த்தி குஜராத் அணி பைனலுக்கு சென்றுள்ளது. நேற்று முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி தொடக்கத்தில் இருந்தே வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்புடன் ஆடியது.
ஜெய்ஸ்வால் சரியாக ஆடாத நிலையில் பட்லர் 56 பந்தில் 2 சிக்ஸ், 12 பவுண்டரி என்று 89 ரன்கள் எடுத்தார். அதேபோல் கேப்டன் சஞ்சு சாம்சன் 5 பவுண்டரி, 3 சிக்ஸ் என்று 26 பந்தில் 47 ரன்கள் எடுத்தார்.

குஜராத் வெற்றி
188-6 எடுத்த ராஜஸ்தான் குஜராத் அணிக்கு 189 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது. சாகா அவுட் ஆனாலும், கில், மேத்யூவேட் ஆகியோர் தலா 35 ரன்களை எடுத்து அணியை வெற்றியை நோக்கி கொண்டு சென்றனர். குஜராத் அணியும் தொடக்கத்தில் இருந்தே பக்கா இண்டெட்டுடன் ஆடியது. கேப்டன் பாண்டியா வெறும் 27 பந்தில் 5 பவுண்டரி உட்பட 40 ரன்கள் எடுத்தார். பின்னர் வெறும் 38 பந்தில் 5 சிக்ஸ், 3 பவுண்டரி என்று மொத்தமாக ஆட்டத்தை இவர் புரட்டி போட்டார்.இதனால் குஜராத் எளிதாக 19.3 ஓவரில் இலக்கை அடைந்து வென்றது.

கடைசி ஓவர்
நேற்று இந்த போட்டியில் ராஜஸ்தான் பேட்டிங் செய்த போது கடைசி ஓவரின் கடைசி ஓவரில் ஜோஸ் பட்லர் அவுட் ஆனார். அவர் செஞ்சுரி அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 89 ரன்களில் ரன் அவுட் ஆனார். அந்த கடைசி ஓவரை யாஷ் தயால் வீசினார். ஆனால் பட்லர் அவுட்டான இந்த பந்து நோ பால் ஆகும். நோ பால் என்றாலும் ரன் அவுட் கணக்கில் வரும்.

ரியான் பராக்
இதான் ரியான் பராக் நான் ஸ்டிரைக்கர் எண்டில் பேட்டிங் இறங்கினார். அஸ்வின் ஸ்டிரைக்கர் எண்டில் இருந்தார். கடைசி பந்தில் ப்ரீ ஹிட்டில் மீண்டும் யாஷ் தயால் வைட் பந்து போட்டார். இந்த பந்தில் ரன் எடுக்கலாம் என்று ரியான் பராக் வேகமாக ஓடி வந்து ஸ்டிரைக்கர் எண்டிற்கு வந்தார். ஆனால் அஸ்வின் இதை எல்லாம் கண்டுகொள்ளாமல், அப்படியே ஸ்டிரைக்கர் எண்டில் இருந்தார்.

அஸ்வின்
இதனால் ரியான் பாரக் ரன் அவுட் செய்யப்பட்டார். அஸ்வின் இப்படி செய்ததை பார்த்து ரியான் பராக் கடுப்பாகி சீறினார். அஸ்வினை பார்த்து ஏன் ஓடவில்லை என்பது போல சிக்னல் காட்டி கேள்வி எழுப்பினார். அதோடு மிக கோபமாக பெவிலியன் திரும்பி வந்தார். பெவிலியனில் ரியான் பராக் கோபமாக பேட்டை தரையில் அடித்தார். ஆனால் அஸ்வின் இதை எல்லாம் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

ஏன் இப்படி?
இதை இரண்டு விதமான நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகிறார்கள். அதன்படி அஸ்வின் செய்தது தவறு. அவர் ரன் ஓடி இருக்கலாம் என்று நெட்டிசன்கள் கூறியுள்ளனர். இன்னொரு பக்கம் ரியான் பராக் செய்ததுதான் தவறு. அவர்தான் ப்ரீ ஹிட் பந்தில் ஸ்ட்ரைக் எடுக்க வேண்டும் என்று தேவையின்றி வைட் பந்தில் ஓடி வந்துவிட்டார். அவர் செய்ததுதான் தவறு என்றும் விமர்சனம் வைத்து வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications