#Exclusive பாஜக+திமுக ‘ரகசிய டீலிங்’? ஏன் குறிவைக்கல? நெஞ்சை பிளந்து காட்டணுமா? சீறிய ராஜீவ் காந்தி!
திமுக - பாஜக ரகசிய உடன்பாடு என்ற குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ளார் திமுகவின் ராஜீவ் காந்தி.
சென்னை : கொள்கை ரீதியாக பலமாக உள்ள திமுக மீது கை வைப்பதற்கு பாஜக எப்போதுமே யோசிக்கும். மற்ற எந்தக் கட்சிகளையும் விட திமுகவினர் சித்தாந்த ரீதியாக, தர்க்க ரீதியாக தெளிவோடு இருப்பார்கள் என்ற அச்சம் பாஜகவுக்கு இருக்கிறது என ஒன் இந்தியா தமிழுக்கு அளித்துள்ள பேட்டியில் திமுக மாணவர் அணித் தலைவர் ராஜீவ் காந்தி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பாஜக அரசால் குறிவைக்கப்படும்போது, பாஜகவை தீவிரமாக எதிர்க்கும் திமுக மீது கை வைக்காமல் இருப்பது ஏன் என்ற கேள்வி எழுந்து வருகிறது.
இந்நிலையில், இதுதொடர்பாக ஒன் இந்தியாவுடன் பேசியுள்ளார் திமுக மாணவர் அணித் தலைவர் ராஜீவ் காந்தி. அவரது பேட்டி இனி..

பெரிய அடிமை
கேள்வி : என்.எல்.சி விவகாரம் குறித்துப் பேசும்போது மத்திய அரசின் கொத்தடிமையாக திமுக அரசு செயல்படுகிறது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வைத்திருக்கும் குற்றச்சாட்டை எப்படி பார்க்கிறீர்கள்?
ராஜீவ் காந்தி : ஒரு பெரிய அடிமை அதைச் சொல்கிறார். திடீரென்று அடிமைகள் எல்லாம் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். 10 ஆண்டுகளாக அதிமுக அரசுதான் என்.எல்.சி விவகாரத்தில் சகல தவறுகளையும் செய்தது. ஒப்பந்தத்தைக் கூடப் புதுப்பிக்கவில்லை. திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு இந்த 2 ஆண்டு காலமாகத்தான் தொழிற்சங்க பிரச்சனை, நிலப் பிரச்சனைகள் முடிக்கப்பட்டு வருகிறது. தொழிலாளர் பிரச்சனைக்காக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. எடப்பாடி பழனிசாமி இதில் ஒரு துரும்பையாவது கிள்ளிப்போட்டாரா?

நாலாந்தர பேச்சு
எடப்பாடி பழனிசாமி, அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தக்கூட விடவில்லை. ஸ்டெர்லைட்டில் என்ன நடந்தது என்று அனைவருக்கும் தெரியும். தொழிலாளர் போராட்டம் நடத்தும்போது அதனை ஜனாநாயக முறைப்படி அணுகுகிறோம். என்.எல்.சியில் போராட்டம் நடப்பதாக யாரோ சொன்னதைக் கேட்டு எந்தத் தரவுகளும் இல்லாமல் பொத்தாம்பொதுவாக அறிக்கை விடுகிறார் எடப்பாடி பழனிசாமி. என்றைக்காவது எடப்பாடி பழனிசாமி தரவுகளோடு பேசியிருக்கிறாரா? நாலாந்தரமாகப் பேசத்தெரியும், நக்கல் அடிக்கத் தெரியும். வட்டார வழக்கை வைத்து அரசியல் செய்யத் தெரியும். அதைத் தவிர ஒரு தற்குறித்தனமான அரசியல்வாதி எடப்பாடி பழனிசாமி.

திமுக மீதான வன்மம்
கேள்வி : திமுக பாஜகவுடன் ஒரு அண்டர்ஸ்டாண்டிங்கிற்கு போய்விட்டதாக முன்பு திமுகவை ஆதரித்தவர்களே எழுப்பும் குற்றச்சாட்டு குறித்து..?
ராஜீவ் காந்தி : இந்தக் குற்றச்சாட்டு அபத்தமானது. இதைவிட நெஞ்சைப் பிளந்து காட்ட முடியாது. வட இந்திய தலைவர்களை அழைத்து பாஜகவுக்கு எதிராக அறைகூவல் விடுத்த பிறகு, பாஜகவினர் வட இந்தியாவில் இருந்து பொய்யான தகவல்களைப் பரப்பினர். ஒட்டுமொத்தமாக மோடியை ஹிட்லரோடு ஒப்பிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் பேசுகிறார். இப்போது பாஜக - திமுக ரகசிய உடன்பாடு என்று சொன்னால், அவர் ஏதோ மன இறுக்கத்திற்கு ஆளாகியிருக்கிறார். இது திமுக மீதான வன்மம் தான்.

திமுக + பாஜக
கேள்வி : மார்ச் 1ல் சென்னையில் நடந்த ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட பிறகு தேஜஸ்வி யாதவ் மீது தொடர் தாக்குதல் நடத்தப்படுகிறது.. ஆனால், அந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்த திமுகவை பாஜக ஒன்றுமே செய்யவில்லை என்ற கருத்து இருக்கிறதே..
ராஜீவ் காந்தி : அரசியல் ரீதியாக திமுக எப்போதுமே பாஜகவோடு கடுமையான விரோதத்தை கடைபிடிக்கிறது. எங்கள் மீது அவர்களால் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தவில்லை. தேஜஸ்வி எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கு குரல் கொடுத்ததால் ஒன்றுமில்லாத பழைய வழக்குகளை பூதாகரமாக்குகிறது பாஜக. ஆனால், எங்கள் மீது சுமத்துவதற்கு அப்படிப்பட்ட வழக்குகளோ, ஆதாரங்களோ இல்லை. பாஜக எனும் மக்கள் விரோத கட்சியை வீழ்த்த திமுக மிகத் தீவிரமாக இருக்கிறது. ஹிட்லராகச் செயல்படும் மோடியை வீழ்த்தப்போவது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தான்.

பாஜகவுக்கு பயம்
கேள்வி : பாஜகவை எதிர்க்கும் மம்தா, கேசிஆர், கெஜ்ரிவால் ஆகியோரைக் குறிவைக்கும் பாஜக அரசு, அவர்களை விடவும் வீரியமாக எதிர்க்கும் ஸ்டாலின் மீது கை வைக்காமல் இருப்பது ஏன்?
ராஜீவ் காந்தி : மம்தாவிடம் ஒரு ஐடியாலஜி இல்லை. சந்திரசேகர் ராவுக்கு பிரதமர் ஆகும் ஆசையும், பாஜகவை எதிர்க்கும் நோக்கமும் இருக்கிறதே தவிர சித்தாந்தம் இல்லை, கெஜ்ரிவாலுக்கு ஊழல் தாண்டி பேச ஒன்றுமே இல்லை. ஆனால், கொள்கை ரீதியாக பலமாக உள்ள திமுக மீது கை வைப்பதற்கு எப்போதுமே யோசிப்பார்கள். மற்ற எந்தக் கட்சிகளையும் விட திமுகவினர் சித்தாந்த ரீதியாக, தர்க்க ரீதியாக தெளிவோடு இருப்பார்கள், மாநில சுயாட்சி வேண்டும் என்ற உறுதியோடு இருப்பார்கள் என்ற அச்சம் எப்போதும் பாஜகவுக்கு இருக்கும். அந்த பயம் தான் இப்படி வெளிப்படுகிறது.
-
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அம்போ! ஊதிய உயர்வும் அம்போ! தேர்தல் நேரத்தில் பறந்த கண்டனம்! -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஐசியூவில் இருந்த தேதிமுக.. உயிர் கொடுத்ததே அதிமுக தான்! புதுக்கோட்டையில் பொரிந்து தள்ளிய எடப்பாடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
காங்கிரஸ் வேட்பாளர்கள் யார் யார்? வெளியானது உத்தேச பட்டியல்! இன்றிரவு அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
உசிலம்பட்டி ஐயப்பன் சசிகலா கட்சியில் இணைந்தார்.. அதே தொகுதியில் வேட்பாளராக அறிவிப்பு! -
"வேட்பாளர் இல்லை வெறும் பூத் ஏஜென்ட் தான்".. பாஜகவுக்கு அண்ணாமலை சொன்ன மெசேஜ்.. மேலிடத்துக்கு அடுத்த ஷாக் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
முடியவே முடியாது.. டெல்லியை எதிர்த்து நிற்கும் அண்ணாமலை! பாஜக பட்டியல் தாமதம்! இது தான் காரணம்! -
வில்லிவாக்கத்தில் கொடி நாட்டுவாரா ஆதவ் அர்ஜுனா? சுத்துப் போட்ட திமுக! சூடு பிடிக்கும் களம் -
பாஜக vs காங்கிரஸ்! நேருக்கு நேர் மோதலில் மோடி க்ளீன் ஸ்வீப்.. பரிதாபமான நிலையில் ராகுல்! புதிய சர்வே -
அண்ணாமலை போட்டியிடும் தொகுதி இதுவா? ஈரோட்டில் பாஜக செம ட்விஸ்டு.. மொத்த மொடக்குறிச்சியும் வெயிடிங்











Click it and Unblock the Notifications