"ஆபத்து".. வேலி தாண்டும் வெள்ளாடு.. எடப்பாடி எடுக்க போகும் முடிவால்.. உஷாரான டெல்லி பாஜக!என்னாச்சு?
சென்னை: பாஜக தன்னை ஒற்றை தலைமையாக அங்கீகரிக்கவில்லை என்றால் அதற்கு தக்க பாடம் புகட்ட எடப்பாடி பழனிசாமி தயாராகி வருவதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன. இதனால் எடப்பாடியிடம் இறங்கி வரும் திட்டத்தில் தமிழ்நாடு பாஜக இருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
கடந்த வெள்ளிக்கிழமை தமிழ்நாடு வந்த பிரதமர் மோடி மதுரை விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார். மோடிக்கு எடப்பாடி பழனிசாமிதான் வரவேற்பு கொடுத்தார்.
ஆனால் எடப்பாடி பழனிசாமி மட்டும் இந்த வரவேற்பை கொடுத்து இருந்தால் பிரச்சனை இல்லை. ஓ பன்னீர்செல்வமும் இந்த வரவேற்பிற்கு அனுமதிக்கப்பட்டு இருந்தார். விடைகொடுக்கும் போதும் இரண்டு தலைவர்களும் அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.

எடப்பாடி ஈகோ
இதுதான் எடப்பாடியின் ஈகோவை சீண்டிவிட்டதாக கூறுகிறார்கள். ஏனென்றால் தமிழ்நாடு சட்டசபையிலேயே ஓ பன்னீர்செல்வம் அருகில் உட்காருவதை விரும்பாதவர் எடப்பாடி. இதற்காக சட்டசபையில் நடுவில் வந்து பெரும் சண்டை போட்டார். அப்படிப்பட்ட எடப்பாடியைதான் மோடி ஓ பன்னீர்செல்வத்துடன் ஒன்றாக வரும்படி அழைத்து இருக்கிறார். இதுதான் எடப்பாடி பழனிசாமிக்கு பிடிக்கவில்லை என்கிறார்கள்.

என்னாச்சு?
என்னை பொதுக்குழுவில் பெரும்பான்மை உறுப்பினர்கள் தேர்வு செய்து இருக்கிறார்கள். கடந்த சட்டசபை தேர்தலில் 60+ எம்எல்ஏக்கள் வெல்ல நான்தான் காரணம். ஆனால் ஓ பன்னீர்செல்வத்தை என்னோடு நிற்க வைப்பது சரியா? அவர்களுக்கு என்ன தொண்டர்கள் பலம் இருக்கிறது என்று எடப்பாடி பழனிச்சாமி தனக்கு நெருக்கமானவர்களிடம் சொன்னதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் எடப்பாடிக்கு சிலர் கூட்டணி தொடர்பான ஐடியாக்களை கொடுத்துள்ளனர்.

ஓப்பனாக இருப்போம்
நாம் லோக்சபா தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைப்பதை இறுதி செய்ய வேண்டாம். அவர்களால் நமக்கு பயன் இல்லை. நம்மால்தான் அவர்களுக்கு பயன். அதனால் கூட்டணி ஆப்ஷனை ஓப்பனாக வைப்போம். திமுக கூட்டணியில் இருந்து காங்கிரசை தூக்கினால் திமுகவால் வெல்ல முடியாது. வரலாறு அதைத்தான் நமக்கு சொல்கிறது. நாம் காங்கிரசோடு கூட்டணி வைத்தால் வெல்வது மட்டுமல்ல இழந்த வாக்கு வங்கியையும் மீட்கலாம்.

சிறுபான்மையினர்
சிறுபான்மையினர் வாக்கு வங்கியையும் எளிதாக மீட்க முடியும் என்று கூறி இருக்கிறார்களாம் சில நெருங்கிய நிர்வாகிகள். ஆனால் இதில் எடப்பாடி பழனிசாமி முடிவு எதையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் இதனால் எடப்பாடியிடம் இறங்கி வரும் திட்டத்தில் தமிழ்நாடு பாஜக இருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. அதாவது அப்செட் ஆன எடப்பாடியை சமாதானம் செய்ய தமிழ்நாடு பாஜக திட்டமிட்டு வருகிறதாம்.

பாஜக
இதற்காக எடப்பாடியை தமிழ்நாடு பாஜக தலைகள் சிலர் சந்திக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. வரும் நாட்களில் இந்த சந்திப்பு நடக்கலாம். எடப்பாடிக்கு முன்னுரிமை கொடுக்கப்படலாம் என்று கூறுகிறார்கள். உச்ச நீதிமன்ற வழக்கில் எடப்பாடி வெற்றிபெற்றால், அவருக்கு வாழ்த்து சொல்லலாம் என்று பாஜக தமிழ்நாடு நிர்வாகிகள் திட்டமிட்டு இருக்கிறார்களாம். இதற்கான சந்திப்புகள் விரைவில் நடக்கலாம் என்று அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
இந்தியாவை தாக்க பெரிய சதி.. பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த 9 பேர் கைது.. பகீர் பின்னணி -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications