சென்னை வாகன ஓட்டிகளே உஷார்.. சிக்கினால் 3 மடங்கு அபராதம்.. இன்று முதல் தீவிர ரெய்டு ஏன் தெரியுமா?
சென்னை முழுவதும் வாகன நம்பர் பிளேட்டுகளில் விதி மீறல் இருக்கிறதா என போக்குவரத்து போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை: சென்னை முழுவதும் வாகன நம்பர் பிளேட்டுகளில் விதி மீறல் இருக்கிறதா என போக்குவரத்து போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் பல்வேறு வாகன நிறுத்தங்களில் போலீசார் இன்று முதல் தீவிர சோதனையில் இறங்கி உள்ளனர். ஒருமுறை அபராதம் விதிக்கப்பட்டு, நம்பர் பிளேட்டை மாற்றாமல் மறுமுறையும் பிடிபட்டால் அவர்களுக்கு 3 மடங்கு அபராதம் விதிக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.
சென்னை முழுவதும் இன்று முதல் நம்பர் பிளேட் சோதனையை போக்குவரத்து போலீசார் தொடங்கி இருக்கின்றனர். இதன்படி விதிமுறைகளை மீறி வாகனங்களில் நம்பர் பிளேட் வைத்திருந்தால், அந்த நம்பர் பிளேட்டுகள் அடையாளம் காணப்பட்டு, குறிப்பட்ட வாகன உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும். அதற்குத்தான் இந்த சோதனை நடத்தப்படுகிறது.
சென்னை முழுவதும் அரசு மற்றும் தனியாருக்குச் சொந்தமாக ஏராளமான பார்க்கிங் இடங்கள் இருக்கின்றன. இந்த பார்க்கிங் இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்கள் மற்றும் சாலையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் சோதனை செய்கிறார்கள். அவற்றில் உள்ள நம்பர் பிளேட்களை விதிமுறைகளை மீறி வைத்திருந்தால், அந்த வாகனங்களுக்கு அங்கேயே அபராதம் விதிக்கிறார்கள்.

வாட்ஸ் அப் நம்பர்
அப்படி அபராதம் விதித்ததற்கான சான்றிதழையும் சம்பந்தப்பட்ட இருசக்கர வாகனத்தில் போலீசார் ஒட்டிச் செல்கின்றனர். அந்த நோட்டீசில் உங்களுக்கு வாகன நம்பர் பிளேட் விதிமுறைகளை மீறி இருப்பதால் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது என்பதை குறிப்பிட்டிருக்கிறார்கள். அதில் எந்த காவல் நிலையம், எந்த காவல் ஆய்வாளர் அபராதம் விதித்தார் என்பதும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும் அதில் ஒரு இமெயில் ஐடியும், ஒரு வாட்ஸ் அப் நம்பரும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மெசினில் அப்டேட்
மேலும் விதிமீறி வைக்கப்பட்டுள்ள நம்பர் பிளேட்டை சரியாக மாற்றி, அதை குறிப்பிடப்பட்டுள்ள இமெயில் ஐடி அல்லது வாட்ஸ் அப்பில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அப்படி செய்வதை குறிப்பிட்ட காவல் ஆய்வாளர்கள் அதை தங்கள் மெசினில் பதிவேற்றி விடுவார்கள். எனவே மறுமுறை எந்த சிக்கலும் வராது என்று போலீசார் தெரிவித்தனர்.

1500 அபராதம்
ஆனால் அப்படி இல்லாமல், இவ்வாறு ஒருமுறை அபராதம் விதிக்கப்பட்டு, நம்பர் பிளேட்டை மாற்றாமல் மறுமுறையும் பிடிபட்டால், அவர்களுக்கு 3 மடங்கு அதிகமாக சுமார் ரூ.1,500 அபராதம் விதிக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர். எழும்பூர் ரயில் நிலையத்தில், வேப்பேரி காவல் ஆய்வாளர் பாண்டிவேல் தலைமையில் சோதனை இன்று காலை நடந்தது. தொடர்ந்து வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களிலும் நம்பர் பிளேட் சோதனை நடந்தது.

வாகன சோதனை
சென்னை முழுவதும் இதேபோல் இன்று முதல் சோதனை நடைபெறும் என்று போலீசார் அறிவித்துள்ளனர். எனவே நம்பர் பிளேட்டில் விதிமீறல்கள் இருந்தால் உடனடியாக மாற்றிவிடுவது நல்லது. மேலும் போக்குவரத்து சிக்னல்களில் நின்று செல்வதும் நல்லது. ஏனெனில் போக்குவரத்து சிக்னலில் நிற்காமல் செல்பவர்களுக்கு அபராதமும் விதிக்கப்படுகிறது. ஒருவழிப்பாதையில் செல்வது, குடிபோதையில் வாகனம் ஓட்டுவது, ஹெல்மட் இல்லாமல் ஓட்டுவது போன்றவற்றிக்கும் தினசரி வாகன சோதனையில் அபராதம் விதிக்கப்படுகிறது. போக்குவரத்து விதிமீறல் இல்லாமல் சென்றால் அபராதம் விதிக்கப்படுவது தடுக்கப்படுவதுடன், போக்குவரத்தால் எந்த பிரச்சனையும் இல்லாமல் செல்ல முடியும்.












Click it and Unblock the Notifications